Buyakka
புயாக்கா புயாக்கா புயாக்கா ஷக்கலாக
—
குளிராய் இருக்குது பொன்மாலை நேரம்
இளைஞர் எல்லோரும் கிளப்பிங் போறம்
பொண்ணுங்க எல்லோரும் வருகிற நேரம்
என்னோட பெண்ணத்தான் இன்னும் நான் காணும்
ஐயையோ துடிக்குது என்னோட தேகம்
இடியாய் இறங்குது என் மேலே சோகம்
என்னது இரவினில் வெளிக்குது வானம்
எங்கையோ கேட்குது மெல்லிய கானம்
கண்ணில தெரியுது அவளது உருவம்
என் நெஞ்சில் இனி இல்லை இறங்கிய சோகம்
இன்றுதான் எனக்கவள் பதில் தரும் நேரம்
முடிவில் சேர்ந்துதான் வீடு நாம் போவம்
—
காட்டு காட்டு காட்டு மனச நீ திறந்து காட்டு
பூட்டு பூட்டு பூட்டு மனசுக்கு போடவேண்டாம் பூட்டு
—
இதயம் இடம்மாறித் துடிக்கிறதா – அடி
மனதில் சரவெடி வெடிக்கிறதா
என்னையே எண்ணி அது துடிக்குதடி – அதை
மறைக்க மனதுக்குள் வெடிக்குதடி
உள்ளோடும் காதலினை வெளியில் விடு – அடெய்
உன்மேலே காதல் என்று துள்ளி எழு – நான்
இல்லாமல் இவ்வுலகில் வாழ மாட்டாய்
என்னாளும் சொர்க்கத்தை நீ காணமாட்டாய்
—
மனதில மறைக்கிறாய் எனக்கது தெரியுது,
காதலினால் துடிக்கிறாய் உனக்கது புரியுது,
தவிக்கிற மனதினை என்னிடம் நீ தந்து விடு,
இருக்கிற வழி ஒன்றுதானே அறிந்திடு
—
காட்டு காட்டு காட்டு மனச நீ திறந்து காட்டு
பூட்டு பூட்டு பூட்டு மனசுக்கு போடவேண்டாம் பூட்டு
—
பாலைப்போல வெள்ளப்பெண்ணே என்னுடன் கூடவே வருவாயா
வேண்டிய பொழுதில் வேண்டியதெல்லாம் விரும்பியே நீயும் தருவாயா
—
காட்டு காட்டு காட்டு மனச நீ திறந்து காட்டு
பூட்டு பூட்டு பூட்டு மனசுக்கு போடவேண்டாம் பூட்டு

1. Buyakka
SujeethG
Manjal Kilanke
மஞ்சக்கிழங்கே மஞ்சக்கிழங்கே
என்னை எடுத்து நீ உடுத்துக்கடி
பூவாய்க் கொஞ்சம் பொட்டாய்க் கொஞ்சம்
நித்தம் நீ எடுத்துச் சூடிக்கடி
அடியே உனக்கெனத்தானே நா…
அடிமேல் அடியென தொடர்வேன் நா…
அருகிலே என்றுமே இருப்பேன் நா…
அழகே அழுதிட விடுவேனா
அன்பது அழுதிடப் பொறுப்பேனா
கண்மணி என்றுமுன் காவல் நா…
—
விழியால் விழி நோக்கி விரசம் அதுபோக்கி
அவளை உனில் தேக்கி காதல் செய்தாயா
உலகில் உயிர்போல உயிரில் மனம்போல
மனதில் இளம்போல சேர்ந்தே இருப்பாயா
வறுமை வரும்போதும் முதுமை விழும்போதும்
அவளே உயிரென்று காதல் கொள்வாயா
காலம் கடந்தாலும் தடைகள் வளர்ந்தாலும்
ஒடி ஒளியாமல் தேடி வருவாயா
—
இரவிலும் பகலிலும் எப்போதும் அவளது
நினைவிலே இருக்கிறனே – ஐயோ
முன்னாலும் பின்னாலும் என்னாளும்
அவளென நில்லாமல் வருகிறனே
—
காலம் கடந்தாலும் தடைகள் வளர்ந்தாலும்
ஒடி ஒளியாமல் தேடி வருவாயா
—
அவள் மழையில நனைகையில் நனைகிறனே – அந்த
வெயிலில அவளுடன் காய்கிறனே
அவள் சிரிக்கையில் அவளுடன் சிரிக்கிறனே
அவள் அழுகையில் எனக்குள்ள அழுகிறனே
என்னவளை என்னுடனே கண்ணின் மணிபோலே என்றும்
எண்ணி எண்ணி நெஞ்சில் வைச்சுக் காத்திடுவேன்
மஞ்சக்கிழங்கே மஞ்சக்கிழங்கே
என்னை எடுத்து நீ உடுத்துக்கடி
பூவாய்க் கொஞ்சம் பொட்டாய்க் கொஞ்சம்
நித்தம் நீ எடுத்துச் சூடிக்கடி
—
காதல் காதல்தான் இந்தக் காளை கொண்டதுண்மைக் காதல்தான்
காதல் காதல் என்று துடிக்கின்றான் – அவள்
பேரைச்சொல்லுகையில் சிலிர்க்கின்றான்
அவள் அழைக்கையில் தொலைபேசி விட்டுவிட்டுத் துடிக்கும்
இதைக் காண இவன் நெஞ்சம் நிக்காமலே துடிக்கும்
நண்பிதனைக் காதலித்துக் கஷ்டப்படுறான் – அவள்
வாழ்க்கைத் துணையாக இவன் இஷ்டப்படுறான்
காதலரை நண்பராக்கத் தவிப்பாரே பெண்ணே
நண்பன்தனைக் காதலிக்க மறுக்காதே
—
வாழ்விலும் தாழ்விலும் உன்னோடுதான் பெண்ணே
என்னாளும் நான் வருவேன்
உயிர் நின்னாலும் போனாலும் உன்னோடுதான் பெண்ணே
என்னாளும் நான் இருப்பேன்
உன் சுமையதனையும் நான் சுமந்திடுவேன்
உன் கவலைகள் அதனையும் கலைத்திடுவேன்
நீ தினம்தினம் மகிழ்ந்திட நான் இருப்பேன்
இந்த உலகமே இனித்திட வைத்திடுவேன்
2. Manjal kilanke
SujeethG feat Thishanathan
Icewarya 07
இச்சித்து வந்தேன் இரு கனம் உனை
இச்சுக்கு வந்தேன் நானும் உனை உனை
—
உன் காந்த விழி எனில் அலைகள் வீசுது
சிவந்த கன்னம் பாக்க எனக்குப் பசிக்குதுன்
உன்னுதடு அசைய எனக்கு வெறிக்குது
மச்சமது எனைச் சுண்டி இழுக்குது
நீண்டமுடி கலைக்க ஊரே இருட்டுது
இமயமலை உன்தன் அன்பில் தோக்குது
மின்னலிடை நெளிய எனக்குச் சுழுக்குது
அன்னநடை பாக்க வாழ்க்கை வெறுக்குது
—
ஐஸ்வர்யா நீ வருவாயா
கிஸ்சொண்னு பிரியா தருவாயா
—
ஐசு உன்னை எண்ண ஐசும் உருகுது
நைசுபிகரு என்று மனசும் நெகிழுது
காய்சு காய்சு எண்ணு திரியும் கேள்சுக்கு
ஐசு பாத்து உன்னை ஜெலசும் பிடிக்குது
இடையின் இடைவெளியால் உறுத்திறியே – உன்
விழியால் அம்பெனக்கு எய்கிறியே – என்
அருகில் நெருங்கி வர மறுக்கிறியே – நான்
நெருங்கி வர முகம் நீ திருப்பிறியே
—
ஐஸ்வர்யா நீ வருவாயா
கிஸ்சொண்னு பிரியா தருவாயா
இச்சித்து வந்தேன்
—
அடியே அவனால் எனக்குத் தூக்கம் போச்சுது
தனியே சுவரைப் பார்த்தும் பேச்சு நடக்குது
அக்கம் பக்கம் கூடி நின்று பேசுது
அந்தப் பெடியன் யாரோ இன்றும் தேடுது
என்னை உந்தன் மனதில் போட்டு மறைக்கிறாய்
மனதை ஏதொ போட்டு இழுத்துப் பூட்டிறாய்
மனதும் கேட்க மறுத்து வெளியில் விழுகுது
உண்மை நிலையை தெருவில் போட்டு உடைக்குது
—
ஐஸ்வர்யா நீ வருவாயா
கிஸ்சொண்னு பிரியா தருவாயா
—
ஐசு ஒரு போதும் மெய் அழியாது
அதிலும் காதலென்றால் பொய் வாழாது
கடையில் வாங்கும் வைர நகைகள் போல
காதல் பூட்டி வைக்கப் படக்கூடாது
குளிரும் ஐசாக இருக்கிறியே – ஆனால்
நெருப்பை நெஞ்சுக்குள் மறைக்கிறியே – நீ
தொடர்ந்தும் பிரியத்தை மறைக்காதே – பின்னர்
அழியும் எரிமலைபோல் வெடிக்காதே
—
ஐஸ்வர்யா நீ வருவாயா
கிஸ்சொண்னு பிரியா தருவாயா
இச்சித்து வந்தேன்
—
விழிகள் ரெண்டும் இடையில் வந்து மோதுது
மனங்கள் ரெண்டும் பக்கம் நின்று பேசுது
அடுத்ததென்ன என்ன என்று கேட்கிது
ஆசை கொண்டு கைகள் நீட்டி அழைக்குது
மனங்கள் ரெண்டும் எப்போ சேர்ந்துபோச்சுது
மெய்கள் ரெண்டும் தள்ளி நின்று பாக்குது
இனியும் நாமும் தூர நின்று பார்ப்பதா
நாங்கள் யாரோ போல நின்று வெறிப்பதா
—
ஐஸ்வர்யா நீ வருவாயா
கிஸ்சொண்னு பிரியா தருவாயா
—
ஐசு நீ காட்டும் பஸ்ஸை நிறுத்து
அருகில் ஆடுகின்ற மிஸ்சை விலத்து
வலமாய் காதல் பஸ்சை நிறுத்து
ஏறிக்கொள் என்தன் பெயரைக் கொடுத்து
காதல் பஸ் உனக்காய் காத்திருக்கு – உனை
வருக வருகவென அழைத்திருக்கு – நீ
காதல் வடிவாகி வரவேண்டும் – என்
கையில் உன் கைகள் தரவேண்டும்
3. Icewarya 07
SujeethG
Tooting pakkam
ரூட்டிங் பக்கம் போற பிள்ளை என்னக் கொஞ்சம் பாரன்
உத்தரவு தாறன் பிள்ளை முத்தம் ஒண்டு தாவன்
அண்ணனிட்டச் சொன்னா என்ன நானா ஒடிப்போவன்
அப்பரிட்டச் சொல்லு பிள்ளை நாளை வீட்ட வாறன்
—
பெண்ணே உன்தன் பின்னால் வந்தா காணம நீ போவாயோ
காணாமலே நானும் போனா பின்னால நீ வருவாயோ
கண்ணே என்னக் கனவில் கண்டா கிட்ட வந்து பேசாயோ
ஆனால் என்ன தெருவில கண்டா எட்டி எட்டி போறாயோ
கண்ணே போடும் நாடகம் என்ன என்னட்ட நீ சொல்வாயோ
என்னட்ட நான் சொல்லச் சொன்னா கொப்பரிட்டச் சொன்னாயோ
—
ஊருக்குள்ள என்னப் பற்றி எழு பேரைக் கேளாயோ
கேட்ட பின்னே என்ன தேடி அங்கே இங்கே ஓடாயோ
தேடி நீயும் என்னை வந்து கேப்சில காணாயோ
சிரிச்சு நீயும் பேசிய பின்னே சொப்பிங் போவம் என்பாயோ
ஷொப்பிங் எண்டு நானும் வந்தா ஷொப்பையே நீ வாங்குவியோ
காதல் செய்ய வேணும் எண்டா காய வேணும் சொல்லுவியோ
—
நல்ல பெடியன் நானடி பிள்ளை நாயே பேயே ஏசாத
நக்கல் நான் அடிக்கிறதால நாசமாப்போ சொல்லாத
நீதான் என்ர உலகம் சொன்னா என்னை நீயும் நம்பாயோ
என்னப் பாத்துச் சொல்லடி பிள்ளை உண்மையிலயே நம்பெலயோ
பிம் ஒண்டை வாங்கிக்கொண்டு ஊரைச் சுற்றி வந்திடுவம்
காசு கஷ்டம் வாந்தாச் சொல்லு தும்படிச்சு வெண்டிடுவம்
4. Tooting pakkam
SujeethG
Yaarum pesa
யாரும் பேசவேண்டாம்
காற்றே வீசவேண்டாம்
சொல்லவென தூண்டும்
காதல் சொல்ல வேண்டு;ம்
என்னவன் இல்லயே பொன்மணி வாடுறேன்
கவிகளை எழுதிட வரிகளைத் தேடுறேன்
காதல் சொல்வாயோ- நீ
விலகிச்செல்வாயோ
—
என் உயிர் சிறைகொண்ட கண்ணா
நீயென் உயரெனச் சொன்னால்
அன்பே இன்பம் காணுவேன் – இல்லை
சொன்னால் என்ன நான் செய்வேன்
—
உன்னை நான் சேர்ந்திட வேண்டும்
உள்ளத்துள் தாங்கிட வேண்டும்
என்னாளும் உயிரோடுயிராய் வாழ்ந்திட வேண்டும் – என்றும்
இரவு பகலுமாய் உயிர் தரும் ஒளியே
இருளில் என்னை நீ தள்ளாதே
வானவில் எடுப்பேன் காதல்வில் தொடுப்பேன்
தேவதையாய் இருந்தால்
கர்வம் களைந்தேன் கால்களில் வீழ்ந்தேன்
வேறென்ன செய்வேன் நான்
—
என் உயிர் சிறைகொண்ட கண்ணா
நீயென் உயரெனச் சொன்னா
அன்பே இன்பம் காணுவேன்- இல்லை
சொன்னால் என்ன நான் செய்வேன்
—
மெதுவாகச் பேசிடவேண்டும் மெய்யாகச் சிரித்திடவேண்டும்
இளங்காலைப் பனியதுபோல் நாம் உருகிடவேண்டும் – என்றும்
நடக்கும் நிலைக்குமென வாழ்கிறேன் உயிரே மனதில் மகுடி நீ ஊதாதே
உனைப்போல் ஒருவனை உலகினில் படைப்பேன் பிரம்மன் கூட இருந்தால்
உண்மையில் உயிரே உனக்கென உறைந்தேன் என்னிலை தனை நீ பார்
—
என் உயிர் சிறைகொண்ட கண்ணா
நீயென் உயரெனச் சொன்னா
அன்பே இன்பம் காணுவேன்- இல்லை
சொன்னால் என்ன நான் செய்வேன்
—
யாரும் பேசவேண்டாம் காற்றும் வீசவேண்டாம்
மூச்சுக் காற்றே நீயும் கொஞ்ச நேரம் வேண்டாம்
செம்மொழியாள் அந்தச் சேதி சொல்லிப்போனாள்
கோலவிழி கொண்டு என்னைக் கிள்ளிப்போனாள்
நீதான் என்; உயிரென்று காதல் செய்யச் சொன்னாள்;
நீங்கிச் சென்றால் உலகை நீங்கிச் செல்வேன் என்றாள்
—
முட்டாள்ப்பெண் உன்னை நான் விட்டால் என்ன செய்வேன்
பெற்றோர் சொல் உற்றார் சொல் கேட்டா காதல் செய்தேன்
—
பதினெட்டு வய(து) தொட்டு உள்ளம் புரள்பட்டு
மனம்விட்டு இளமொட்டு காதல் வசப்பட்டு
அரும்மொட்டு வெண்பட்டு எல்லாம்நீ என் சிட்டுன்
நிழல் பட்ட இடம் தொட்டு வருவேன் தொடர்ந்திட்டு
நீங்கிச்சென்றால் உலகை நீங்கிச்செல்வேன் என்றாள்
முட்டாள்ப்பெண் அவளை நான் விட்டால் என்ன செய்வேன்
பெற்றோர் சொல் உற்றார் சொல் கேட்டா காதல் செய்தேன்
முட்டாள்ப்பெண் உன்னை நான் விட்டால் என்ன செய்வேன்
5. Yaarum pesa
SujeethG feat Rajini
Ennai Konjam
என்னைக் கொஞ்சம் தீண்டு என்னை உன்மேல்த் தூண்டு
என்னை வைத்துக்கொண்டு எல்லையை நீ தாண்டு
Baby boy why don’t you vibe with me
Back to my crib ride with me
என்னோடு கூட வந்து நீ இரவோடு கூடு நீ
இரவெல்லாம் கூடு நீ, கூடு நீ
இரவெல்லாம் கூட நீ – ஆ
—
என்னைக் கொஞ்சம் தீண்டு என்னை உன்மேல்த் தூண்டு
என்னை வைத்துக்கொண்டு எல்லையை நீ தாண்டு
—
Ye, I’ve been bit busy, working on that baby.
Here I, G come gonna give U a high BP.
I’m right by the spot I’ll make you feel hot.
My words like a magnet It’ll make us connected.
We’ ll use this whole night? ye! that sounds so Wright.
m.. I’m not a doctor, still check your sex sector,
Its full of love feeling, babe I’ll give you healing.
We’ll start with the nudge and end up with hitch.
Sure it wont be rotten I wont be forgotten
You think! I’m bit doggy! No Im ranking sujee g
—
என்னைக் கொஞ்சம் தீண்டு என்னை உன்மேல்த் தூண்டு
என்னை வைத்துக்கொண்டு எல்லையை நீ தாண்டு
—
என்னன்பே ரதியே நீ பாதி நான் பாதி – நாம்
கூடச் சொல்வேனே இன்நாளில் ஒர் தேதி
அன்னாளில் வா அன்பே நீ வா – என்
கண்மணி பொன்மணி உன்மேனி தா
கைகள் நகர்ந்திட ரத்தம் கொதிக்குமே
மேலே தொடர்ந்திட மேனி சிலிர்க்குமே
தேனிதா தின்ன நீ தா
முத்தம் தன் சத்தத்தால் எல்லை முறிக்கும்
சித்தத்தின் சித்தத்தால் பித்துப் பிடிக்கும்
நெஞ்சு நெருப்பாகி அனல் பறக்குமே
மெய்யோடு மெய்யாட யுத்தம் பிறக்குமெ
மீண்டும் கடந்திட ஜீவன் கேட்டு டுமே
—
அழகே இங்கு வந்தேன்
ரதியே இன்பம் தந்தேன்
அதனால் இன்பம் கண்டேன்
—
இந்த நாள் முதல் வாழ்கிற நாள் வரை அன்பே நீ அன்பே
6. Ennai Konjam
SujeethG feat Sahana
Netru Nadanthathu
நேற்று நடந்தது நாடகமா – சொல் பெண்ணே
காற்றில் கரைந்தது காதலா – சொல் பெண்ணே
என்மேல் காதல் கொண்டாய் என்று நம்பி வந்தேன் – பொய்யடி
பெண்ணே என்னை உதறிச் செல்ல மனமும் வந்ததோ
—
இமை விழியோடு கொண்டதுபோல உறவைக் கொண்டிருந்தேன்
சிணுங்கிய போதும் உயிரின் உள்ளே உனக்காய் சிலிர்த்திருந்தேன்
சிறிதளவேனும் பிரியாதுன்னை நினைவில் சேர்ந்திருந்தேன்
உறங்கியபோதும் பெண்ணே உன்னுடன் கனவில் கலந்திருந்தேன்
—
ஞாபகம் இருக்குதே
அவளோரு நாள் பார்வையிலே வலை வீசி
காதல் மொழியது பேசி
மயங்கையில் என்தன் கரம் பிடித்து
உதட்டு முத்தமும் அவள் தந்து – என்
உள்ள மொத்தமும் நான் தந்து
பலநாள் பேசி பழகியது ருசி
முழுவதும் மறந்தே போனாள் பறந்தே
காதல் கிளி பறந்து போச்சே
நெஞ்சில் வலி தந்து போச்சே
காலம் சில கடந்த பின்னே
என்னை அது மறந்து போச்சே
காதல் இனி வேண்டாம்
காயம் இனி வேண்டாம்
ஏக்கம் இனி வேண்டாம்
ஏதும் இனி வேண்டாம்
பாரடி தந்தாய் காயம்
கண்களில் இன்னும் ஈரம்
மாறுமோ இந்த ரணம்
பெண்ணே நீ சொல்லு
—
என்னை அன்று கண்டவுடன் காதலென்று சொன்னவளே
ஊரே வந்து கூடி நின்று வேண்டாம் என்று சொன்னால்க் கூட
என்னை உன்னைக் கூறு போட யாரும் இல்லை என்றவளே
ஊரும் ஒன்றும் சொல்லவில்லை உலகம் ஏதும் அறியவில்லை
காதல் என்று சொன்னவளே கை கழுவிப்போனவளே
உன்தன் காதல் நெஞ்சில் இன்றும் நெருஞ்சி முள்போல் குத்துதடி
இப்படியாய் எத்தனை பேர் எங்கள் வாழ்வை வாருறீங்க
காதல் காதல் என்று சொல்லி கண்ணா மூச்சு ஆடுறீங்க.
7. Netru Nadanthathu
SujeethG
Vilahi Nee
விலகி நீ தள்ளிப்போ
விரதம் இப்போ
மணநாளைச் சொல்லிப்போ
வருவேன் அப்போ
—
காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்
காதலை எண்ணி களிக்கின்றேன்- அமு
தூற்றினை ஒத்த இதழ்களும் – நில
வூறித் ததும்பும் விழிகளும் – பத்து
மாற்றுப் பொன் ஒத்த மேனியும் – நான்
வையத்தில் உள்ள மட்டிலும் – எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர்
விண்ணவன் ஆகப் புரியுமே – நீ
என்தன் உயிரடி கண்ணம்மா – என்
நேரமும் உன்னைப்போற்றுவேன் – துயர்
போயின துன்பம் போயின – உனை
பொன்னெனக்கொண்ட போதிலே – என்
வாயிலே அமுதமூறுதே உன்தன் – பெயரினைச்
சொல்லும்போதிலே – உயிர்த்
தீயிலே வளர் சோதியே – என்
சிந்தையே என் சித்தமே
—
திசைதேடித் திரிந்தேனே நான்
இளைத்துச் சருகாகினேன்
உயிர்சேரத் துடித்தேனே நான்
மெய்யாய்த் தினம்வாடினேன்
உனைக் காதல் கொண்டேனே நான்
ஜீவன் புதிதாகினேன்
வேறென் சொல்வேனோ அன்பே
பூரித்துப் போனேன் அன்பே – 2
நின்தன் அருள் கொஞ்சம் தந்து என்னை உய்யச் செய்வாயோ
என்னை நீயாய் ஆகச் செய்து கர்வம் கொள்ளச் செய்வாயோ
—
உச்சி குளிர்ந்ததடி உள்ளம் சிலிர்த்ததடி
தேகம் நிமிர்ந்ததடி தேனில் மிதந்ததடி
இச்சை பிறந்ததடி இன்பம் விளைந்ததடி
அச்சம் ஒழிந்ததடி அழகு வந்ததடி
பிணிக்கு மருந்து பிறமண் அணியிழை
(தன்) தன் நோய்க்கு தானே மருந்து
ஆடிவிளையாடி ஆயிரம் முறை
நம்மை நாமே சிறை கொள்வோம்
கூடிப்பிரியாமல் ஒரிரவெல்லாம்
கொஞ்சிக்குலவியே களித்திருப்போம் – நீ
நாளை மறுநாளில் எண்ணிப்பார்க்கையில்
தொட்ட இடமெல்லாம் தண்ணென்றிருக்கும்
என்தன் திருவுருவம் சிந்தை வருகையில்
புத்தம் புதியதாய் சாந்தி பிறக்கும்
ஊடல் உணர்தல் புணர்தல் இ… வை
காமம் கூடியார் பெற்ற பயன்
8. Vilahi nee
SujeethG feat Sahana
9. Varuvaaya
SujeethG feat Lady V
We Tamil Boys
வீ ரமில் போய்ஸ் உலகெல்லாம் எங்கள் வோய்
நல்லவனை வாழவைப்பம் கெட்டவன்ர வாலறுப்பம்
—
தமிழர்தனைக் காக்க வருவோம் புறப்பட்டு
நிறுத்த முடியாது யாரும் தடைபோட்டு
சேர்ந்தே எழுவோம் நாம் எழுந்து கொடிகட்டு
இனிமேல் கிடையாது தமிழில் விளையாட்டு
தமிழைக் காப்போம் இது வாக்குறுதி – இதை
எண்ணி ஓடுமெங்கள் செங்குருதி – தமிழ்
என்றும் எங்களுக்குள் செம்பருத்தி – இருந்தாலும்
எம் வாழ்வின் செம்பருதி
தமிழர்தனைக் காக்க வருவோம் புறப்பட்டு
தடுக்கமுடியாது யாரும் அணைபோட்டு
—
வீ ரமில் போய்ஸ் உலகெல்லாம் எங்கள் வோய்
நல்லவனை வாழவைப்பம் கெட்டவன்ர வாலறுப்பம்
—
பதினெட்டு வயதில பட்டாம் பூச்சி பறக்கும்
அடிக்கடி பறந்திட காதலது முளைக்கும்
அனுதினம் மனமதை தண்ணீர் ஊற்றி வளக்கும்
சேர்ந்தே நாம் இருப்போமா புதுப் பயம் பிறக்கும்
சுற்றியுள்ள ஊருலகம் அனைத்துமே மறக்கும்
அடுத்தது வேறென்ன ஓடிப்போகத் துடிக்கும்
பெற்றவரை விட்டகன்று ஒளியாதே – அவர்
நித்தம் உன்னால் அழுதிட முடியாதே
பெற்றவர்க்கு உன்தன் காதல் நீதி சொல்லு – நீ
நித்தியமாய் சத்தியத்தின் வழி நில்லு
உண்மைக்காதல் தனை அவர் ஏற்கலையோ – தங்கள்
அன்புப்பிள்ளை இன்பவாழ்க்கை பார்க்கலையோ
—
வீ ரமில் போய்ஸ் உலகெல்லாம் எங்கள் வோய்
நல்லவனை வாழவைப்பம் கெட்டவன்ர வாலறுப்பம்
—
நண்பனுடன் நம்பியே நீ நடைபோடு – அவன்
கண்டவழி போனால் அங்கே தடைபோடு – முங்கிக்
குளித்தாலும் காக்கை வெளுக்காது – சில
லொங்குக் கூட்டம் ஒருபோதும் திருந்தாது
நண்பனாலே நற்குணங்கள் வரவேண்டும் – அவன்
துன்பம் என்று வரும்போதுன் தோள் வேண்டும்
உண்மை நட்பை ஏதும் வந்து முறிக்காதே – உன்னை
ஒருபோதும் அகழியில்ப் பொறிக்காதே
உயர் நட்பில் சுயநலம் கலக்காது – உன்னை
தன்னுடனே மாட்டிவிட நினைக்காது
நல்ல நட்பை மதிக்கோணும் கெட்ட நட்பைத் தொலைக்கோணும்
நல்ல நண்பன் கூட வந்து உன்தன் வாழ்வு செழிக்கோணும்
—
வீ ரமில் போய்ஸ் உலகெல்லாம் எங்கள் வோய்
நல்லவனை வாழவைப்பம் கெட்டவன்ர வாலறுப்பம்
—
சொந்த வழி என்று ஒன்று கிடையாதோ – நீ
வந்த வழி உனக்கென்றும் தெரியாதோ – நான்
சொல்லுவது எள்ளளவும் புரியாதோ – இல்லை
என்றுமதைக் கேக்க மனம் விரும்பாதோ – ம்
பசித்தாலும் புல்லைப் புலி புசியாதே – மாடு
கொடுத்தாலும் மச்சம்தனை அறியாதே
அத்தனைக்கும் சுயம் என்ற நிஜம் உண்டு – அவை
இப்படித்தான் வாழவேண்டும் விதி உண்டு
ஆறறிவு கொண்டோம் நாங்கள் என்று
சொல்லுவதில் பயனும் என்ன இன்று
சுயம் என்ற ஒன்று உனைச் சுடவேண்டும் – அதற்கு
சுரணை என்ற ஒர் உணர்(வு) வேண்டும்
—
வீ ரமில் போய்ஸ் உலகெல்லாம் எங்கள் வோய்
நல்லவனை வாழவைப்பம் கெட்டவன்ர வாலறுப்பம்

10. We tamil boys
SujeethG
Pirapeduda
புறப்படுடா நீ புறப்படுடா – வரும்
தடைகள் தகர்த்தெறிந்து புறப்படுடா
பிறப்பெடுடா நீ பிறப்பெடுடா – இன்றே
புதிய புதல்வனென்று பிறப்பெடுடா
—
அடக்கி முடக்கி உன்னை அழித்தது யார் – உன்தன்
சிந்தனைச் சிறகை ரெண்டாய் முறித்தது யார்
இளமை அழகெடுத்து நடைபோடும் – உன்தன்
அறிவை அடகு வைக்க நினைத்தது யார்
புறப்படவேணும் நீ புறப்படவேணும் – இந்த
புதிரை உடைக்க நீ புறப்பட வேணும்
அடக்கி முடக்கி உன்னை அழித்தது நீ – உன்;
சிந்தனைச் சிறகை ரெண்டாய் முறித்தது நீ
தின்னச்சோறு போதும் என்றும் அணியச் சட்டை போதும்
பள்ளிக்கூடம் போவோம் இன்று வேண்டாம் ஏதும் மீதம்
நாளை வரும் வேலை திருமணமுமோர் காலை – இந்த
வட்டம் போதும் நீ – கடந்திட வேணும்
புரட்டவே வேணும் – நீ சிந்தித்திட வேணும்
புதிய புரட்சி உன்னுள் புரண்டிட வேணும்
துடைக்கவே வேணும் நீ துடைக்கவே வேணும் – உன்தன்
துசிபிடிச்ச மூளையை துடைக்கவே வேணும்
—
புறப்படுடா நீ புறப்படுடா – வரும்
தடைகள் தகர்த்தெறிந்து புறப்படுடா
பிறப்பெடுடா நீ பிறப்பெடுடா – இன்றே
புதிய புதல்வனென்று பிறப்பெடுடா
ஒதுங்கியே போனாலே ஒழிந்து நீ போவாய்
ஓங்கியே போனாலோ ஒளிர்ந்து நீ வாழ்;வாய்
புறப்படுடா நீ புறப்படுடா – இன்றே
புதிய புதல்வனென்று பிறப்பெடுடா
—
ஆவதும் பரத்துள்ளே அழிவதும் பரத்துள்ளே
போவதும் பரத்துள்ளே புதுவதும் பரத்துள்ளே
தேவரும் பரத்துள்ளே திசைகளும் பரத்துள்ளே
யாவரும் பரத்துள்ளே நீயும் அப்பரத்துள்ளே
—
உன்தன் வாழ்க்கை உன்தன் கையில் சொல்லிப் பயன் இல்லை – அதன்
உண்மைத் தன்மை உணர்ந்தாலே காண்பாய் இன்ப எல்லை
ஊருலக வழக்கத்தில் வாழத் தேவையில்லை – நீ
அடங்கியே போனால் என்றும் உண்மை வழி இல்லை
காசு பணம் என்பவற்றால் நிம்மதி பிறக்காதே – வைத்திருக்கும்
சொத்துக்களும் அதனைக் கொடுக்காதே – உனக்காய்
நீ வாழு தடைக்குத் தடைபோடு – ஒருநாள்
தனையேனும் மெய்யாய் நீ வாழு – என்ன
இவன் பிதற்றுறான் என நீ நினைக்கின்றாய் – உண்மை
வாழ்க்கை என்று உண்டு அதனை மறக்கின்றாய்
உனக்குள் பிறக்கின்ற உனக்கான வாழ்க்கை
நிம்மதி தரும் வாழ்க்கை அதுவே நிஜ வாழ்க்கை
காசு பணம் என்பவற்றால் நிம்மதி பிறக்காது – வைத்திருக்கும்
சொத்துக்களும் அதனைக் கொடுக்காது
நிம்மதி தரும் வாழ்க்கை அதுவே நிஜ வாழ்க்கை
மீதம் பொய் வாழ்க்கை வேஷம் அந்த வாழ்க்கை
—
புறப்படுடா நீ புறப்படுடா – வரும்
தடைகள் தகர்த்தெறிந்து புறப்படுடா
பிறப்பெடுடா நீ பிறப்பெடுடா – இன்றே
புதிய புதல்வனென்று பிறப்பெடுடா
—
உன்னிலே இருக்குமொன்றை நீயறியவில்லை
உன்னிலே இருக்குமதை நீயறிந்து கொண்ட பின்
உன்னிலே இருந்திருந்து நீயறிந்து கொள்வாயோ
நீயாய் இருந்ததெங்கே – அபிமானித்தது எங்கே
வானாள மண்ணாள வாஞ்சை அது எங்கே
ஞானகுரு தேசிகரெங்கே சிவசிவா முக்தியெங்கே
பேசிடத்தான் வாயும் எங்கே சாவில் வரும் கேள்வி அங்கே
—
புறப்படுடா நீ புறப்படுடா – வரும்
தடைகள் தகர்த்தெறிந்து புறப்படுடா
பிறப்பெடுடா நீ பிறப்பெடுடா – இன்றே
புதிய புதல்வனென்று பிறப்பெடுடா
ஒதுங்கியே போனாலே ஒழிந்து நீ போவாய்
ஓங்கியே போனாலோ ஒளிர்ந்து நீ வாழ்;வாய்
புறப்படுடா நீ புறப்படுடா – இன்றே
புதிய புதல்வனென்று பிறப்பெடுடா

11. Pirapeduda
SujeethG
Adi Mel Adi
அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு
—
I had enough with this society
—
இந்த சமுதாயம் என்றும் தரும் காயம்
வாழ்ந்தா அது வெறுக்கும் தாழ்ந்தா ஏறி மிதிக்கும்
அது ஆட்டு மந்தை சேர்ந்து கூவும் சந்தை
தனிமனித கருத்து எத்தனை பேருக் கிருக்கு
ஊர் சொன்னா சரி பிழை சொன்னா பிழை
உருக்குனக்குப் பயம் கிடைச்சதென்ன நயம்
உனக்கமைதி போகும் தொல்லை குடி புகும்
நிம்மதி இனி இல்லை இன்னுமா விளங்கேல்லை
இந்த சமுதாயம் என்றும் தரும் காயம்
வாழ்ந்தா அது வெறுக்கும் தாழ்ந்தா ஏறி மிதிக்கும்
—
அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு
—
சேர்ந்து வாழும் போது அவர் சிரிக்கிறார்
மேலே போக எண்ணக் குழி பறிக்கிறார்
நல்லோர் இவரா
நய வஞ்சர் இவரா
தீயில் வெந்த பின்பும் பினிக்ஸ் பறக்குமே
சிலிர்ப்புடன் உள்ளுணர்வு பிறக்குமே
எங்கே வந்து பார்
என்னைக் கீழே தள்ளிப் பார்
வந்து தள்ளிப் பார், கொள்ளி வைத்துப்பார்
வாழ்வினை வாழுவேன் வாழ்வினில் வெல்லுவேன்
—
அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு
—
என் வார்த்தை பிழையாது – பேர்
பலத்தில் வளையாது
—
நான் சொல்லி விட்டே போவேன்
உன் தோளைத் தட்டிப்போவேன்
வாழ்வின் அடி மட்டம் நான்
கண்ட பின் இக் கட்டம்
வந்து நின்றே சொல்வேன் – இம்
மாயைதனைக் கொல்வேன்
குள்ள நரிக் கூட்டம் அது என்றும் உன்னில் நோட்டம்
இங்கு வாழ்ந்து நீயும் காட்டு அதைத் தூர நீயும் ஓட்டு
வாழ்ந்து காட்டி விடு ஊரின் வாய்கள் மூடிவிடு
நிலம் கடல் வானம் எங்கும் நிம்மதியைக் காணு
நான் சொல்லி விட்டே போவேன்
உன் தோளைத் தட்டிப்போவேன்

12. Adi mel Adi
SujeethG feat Santhors
Vaalalaam
வாழலாம் வாழ நீ தடையேதும் இல்லை
பறந்திடு பறவைபோல் வானமே எல்லை
அருவியாய் ஆகிடுவோம்
இயற்கையாய் மாறிடுவோம் – 2
—
மழையும் வரும் புயலும் வரும்
எதுவும் வரும் உணர்ந்தே அதனுடன் சேர்ந்துவிடு
—
நீர்க்குமிழி வாழ்க்கையது விட்டால் உடைந்து போகும்
வந்து விழும் மின்னல் போல ஈற்றில் மறைந்து பொகும்
நாளைவரை காற்றிருக்கும் நீயிங்கிருப்பாயோ
இவ்வுண்மைதனை அறிந்தும் பின் வாழ மறுப்பாயோ
ஓடியோடி வாழ்ந்து விட்டு நாளை மடியாதே – என்றும்
யந்திரமாய் போவதினால் பயன் கிடையாதே
வாழ எங்கும் தடையில்லை வாழ்க்கையை நீ வாழு – இங்கு
வாழும்வழி அறிந்து நீ பிறந்து நீ வாழு
—
வாழ்வினை அறிந்துவிடு
எழுதிய விதியினைத் தெரிந்துவிடு
இன்பம் வரும் துன்பம் வரும்
ஆசை களைந்தால் கலைந்துவிடும்
நியதியைப் புரிந்துவிடு
அதனுடன் அதன்படி நடந்துவிடு
இன்பம் இல்லை துன்பம் இல்லை
இரண்டும் இல்லையேல் தொல்லை இல்லை
உணர்ந்து விடு
உறைந்து விடு
—
அதோ இதோ என்று சொல்லி ஆசை வந்துசேரும் – உடன்
அங்கே இங்கே என்றபடி உள்ளம் அலை மோதும்
ஓடியாடித் தேடி விட ஆசை நிறைவேறும் – உள்ளம்
கொஞ்சம் இளைப்பாறும் பின்னர் மறுபடி தேடும் – புது
ஆசை துளிர் விடும்.
ஆசை கொண்ட மனிதருக்கிங்கே நிம்மதி என்றும் இல்லை – பேர்
ஆசை கொல்ல மறுக்கும் பேர்க்கு வாழும் நாள்வரை தொல்லை
நிம்மதியோடு வாழவேண்டுமா கடையில
கிடைக்குமா வில்லை – இல்லை
ஆசை களைந்து நீ வாழ முடிந்திட்டால்
வாழ்வில் தொல்லை இனி இல்லை.
13. Vaalalaam
SujeethG feat Sowmi.A
Visham
இது கதையல்ல நிஜம் – இப்
புலம் பெயர் வாழ்க்கையில் ஊறும் விஷம்
அவள் பெயர் அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு –
ஆகவில்லை இன்னும் பதினைஞ்சு
கேட்டதவள் பாசம், அன்பாய் சின்ன நேசம்
கிடைக்கேல்லை பாசம், நேசம் –
வாழ்க்கை ஆகிப்போனதடா வேஷம்
—
அப்பா அம்மா அவளில் காட்டவில்லை நேசம்
கடையிலே பணத்திற்கா வாங்கலாம் பாசம்
அப்பா ரெண்டு வேலை – வரலாம்
காலை மாலை – வந்தால்க் கூடத்
தூக்கம், அஞ்சு கண்ணில் ஏக்கம்
அப்பா என்னைப் பாருங்கோ அஞ்சு எண்டு கொஞ்சுங்கோ
அம்மா அம்மா சொல்லுங்கோ அப்பாவிட்டச் சொல்லுங்கோ
அம்மா கண்ணில்க் கவலை காரணம் பிஞ்சு அஞ்சு இல்லை
அவள் முன்னே சின்னத்திரை அம்மா சின்னத்திரைக் கிரை
ஐயோ பிஞ்சு பாவம் பாசம் எண்டு தாகம்
புலம் பெயர் நாட்டினில யாரிட்டத் தேடிப்போகும்
நாடு விட்டு நாடு வந்தாள் வீட்டில் அன்பிழந்தாள்
தெருவில் வாடுகிறாள் அன்பதைத் தேடுகிறாள்
அப்பாவும் மாறவில்லை அம்மாவும் மீளவில்லை
வருடங்கள் ஓடியது வயசும் ஓடியது
வீட்டிலே சேர்ந்திருந்தும் தனிமை வாட்டியது
நண்பர்கள் சேரவில்லை சேர்ந்தவர் சரியில்லை
நல்லவர் தேடிச்செல்லும் வழியும் தெரியவில்லை
என்ன செய்வாள் அஞ்சு இன்னும் அவள் பிஞ்சு
அன்பு வந்துபோச்சு காதல் என்று பேச்சு
கண்டவுடன் காதல் வீட்டில் கடும் மோதல்
வீட்டைவிட்டுப் பிரிந்து குடும்பம் தனியானாள்
வருடமும் போகக் குழந்தைக்குத் தாயானாள்
சிலகாலம் போச்சு சிக்கல்கள் உருவாச்சு
அன்பு தந்த காதல் எங்கோ ஓடிப்போச்சு
பாசம் வற்றியாச்சு சண்டை முற்றிப்போச்சு
மண வாழ்க்கை முறிந்து உறவு பிரிந்தாச்சு
கைகளிலே மழலை கண்களின் வழி கண்ணீர் மழை
—
இது கதையல்ல நிஜம் – இப்
புலம் பெயர் வாழ்க்கையில் ஊறும் விஷம்
—
அஞ்சோ இன்னும் பிஞ்சு அவளுக்கோர் குஞ்சு
பிள்ளை தந்த பாசம் ஓடிற்று சில மாசம்
பிள்ளையோடு கொஞ்சி கொஞ்சி, நேரம் செலவிட
வேலைக்கு நேரம் போச்சு வேலையே ஒர் நாள் போச்சு
கைகளில் காசு இல்லை உதவ யாரும் இல்லை
செய்வது என்ன வென்று அவளுக்குப் புரியவில்லை
கடையில களவெடுத்து மரியாதை மீளவில்லை
அஞ்சு கதை வெளியாச்சு ஊர் முழுக்க இது பேச்சு
அரசுக்கும் கதை போச்சு அஞ்சு பிள்ளை பறிபோச்சு
மறுபடி தெருவில ஊர் சனம் சேரவில்லை
பிள்ளையதும்; போனதால உயிரில் ஜீவன் இல்லை
அஞ்சு தடம் புரண்டு போதைக்கடிமையானாள்
வந்தவை போனவையோட ராவில் சுத்தலானாள்
அஞ்சு வாழ்க்கை மாறிப்போச்சு மானம் மலை ஏறிப்போச்சு
என்ன செய்வாள் அஞ்சு இன்னும் அவள் பிஞ்சு
என்ன செய்தும் முடியேல்ல பாசம் நேசம் கிடைக்கேல்ல
கண்ணாடி முன்னால நின்று இருந்தென்ன பயன் நான் வாழ்ந்தென்ன பயன்
கேட்ட கேள்விக்குப் பதில் இல்ல வாழ்வை முடிப்பதில் பிழை இல்லை
கதறினாள் அஞ்சு அவள் குடிக்கிறாள் நஞ்சு
வாழும் போது உதவாதவர் சாகும்போது தடுக்கிறார்
அஞ்சு அவளை அள்ளிக் கொண்டு வைத்தியரிடம் சேர்க்கிறார்
அஞ்சு அவள் விழி திறக்க பிள்ளை நிற்கக் காண்கிறாள்
ஐயோ என்னிலை வருமோ என்று விழிகள் இறுக்க மூடுகிறாள்
உயிரை துறக்க மூடுகிறாள்
—
இது கதையல்ல நிஜம் – இப்
புலம் பெயர் வாழ்க்கையில் ஊறும் விஷம்
அவள் பெயர் அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு –
ஆகவில்லை இன்னும் இருவத்தஞ்சு

14. Visham
SujeethG
Enna Thavam
என்ன தவம் செய்தேனோ என்னம்மா
என்றும் நிறை பேர்பிரேமம் அம்மா
நீ சுமக்க என்ன தவம் செய்தேனோ
—
ஈரைந்து மாதங்கள் சுமந்தவளே
ஓடியாடி விளையாடி தேன்திருடி அடிவாங்க
—
சில மானிடர் தவயோகம் செய்து – வலிந்து
தாம் பெற்றதை அம்மையாக எழிதில்ப் பெற
—
சுற்றமும் சூளலும் மனதில் பொறாமை கொள்ள
நெஞ்சு நிமிர்த்தி பேர்சொல்லி வாழவைத்தாய் என்னை நீ
15. Enna Thavam
SujeethG feat Sowmi.A
Ella Naalum
எல்லா நாளும் அதுபோல் இல்லை
அன்பே இங்கே என் மனம் இல்லை
உன்முகம் காண நாட்களை எண்ணி வாடுறேன்
அன்நாள் வருகையில் தொலையுமே தொல்லை
உண்மையில் ஆசைகள் வேறோன்றும் இல்லை
உன்னையே எண்ணி எண்ணி எண்ணி வாடுறேன்
—
பாத்து நின்றேன் வழி பாத்து நின்றேன் – உன்தன்
வாசல் வரும் வழி பாத்து நின்றேன்
காத்திருப்பேன் எதிர்பாத்திருப்பேன் – அந்த
நாளது வரையினில் பாத்திருப்பேன்
—
தொலைவாய் தூரமாய் இருந்தாலும் – உன்
நினைவை என்னை விட்டுத் தொலைப்பேனா
நினைவை தொலைக்க நான் நினைத்தாலும்
உன்தன் நினைவு என்னை விட்டுத் தொலைந்திடுமா
தந்த முத்தம் என்றும் என்னுள் இனிக்கும்
உன்தன் வாசம் என்னை வந்து துளைக்கும்
உன்தன் வார்த்தைகள் அடிக்கடி ஒலிக்கிறதே
என்தன் தூக்கத்தை உன்நினைவு தொலைக்கிறதே
உன்னைக் காண வரச்சொல்லி நான் வருவேன் – வந்து
மறைந்து காக்க வைத்து ரசிப்பேன்
பின்னர் அதனை உனக்கே சொல்லித் தொலைப்பேன் – நீ
அடிக்க வலி மறந்து சிரிப்பேன்
அடித்திடும் கைகள் அணைத்திடும் – அங்கே
உள்ளம் ரெண்டும் ஒன்றாய் மாறும்
அந்த இன்பம் இங்கே இல்லையே
எல்லா நாளும் அதுபோல் இல்லை
அன்பே இங்கே என் மனம் இல்லை
—
பாத்து நின்றேன் வழி பாத்து நின்றேன் – உன்தன்
வாசல் வரும் வழி பாத்து நின்றேன்
காத்திருப்பேன் எதிர்பாத்திருப்பேன் – அந்த
நாளது வரையினில் பாத்திருப்பேன்
—
எனக்குள் இதயமது துடித்தாலும் – அது
உனக்காய் துடிப்பதை நீ அறிவாயே
தூக்கம் வந்து நான் படுத்தாலும் – மனம்
கனவில் பார்க்க உன்னை மறக்காதே
என்தன் தலையணையுடன் இங்கு கதைப்பேன்
அன்பே நீயென்று செல்ல முத்தம் கொடுப்பேன்
பக்கம்வா வென்று மெல்லக் கட்டியணைப்பேனே
பின்னர் அதையெண்ணி நான் இங்கே சிரிப்பேனே
அன்று வளையல் வாங்கித் தர அழைத்தேன் – நீயே
பணம்கொடு என்று சொல்லி மறைந்தேன் – உன்னை
ஒளித்துப் பார்த்து நின்று சிரித்தேன் – பின்னர்
ஒடிவந்து உன்னைக் கட்டி அணைத்தேன்
அடித்திடும் கைகள் அணைத்திடும் – அங்கே
உள்ளம் ரெண்டும் ஒன்றாய் மாறும்
அந்த இன்பம் இங்கே இல்லையே
16. Elaa Naalum
SujeethG