Raavannan – 2011

Select album to play

previous next
 

Kalai

அடங்கமாட்டம்
ஒடுங்கமாட்டம்
அரங்கமாட்டம் (நாங்க)
நொருங்கமாட்டம்

பொறுத்துப் பயனில்லை சிலிர்க்குது புலி
விலைக்கு கலைபேசும் நரிகளை அழி
அடங்கி காத்திருந்து ஆவனா பலி – நான்;
இயற்கை பணித்து வைத்த கூரிய உளி
சொல்லிசை விற்பன்னன் – சொல்லால் உனை விற்பன் நான்
மெய்யரைக் காப்பேன் நான் – பொய்யர்க் கென்றும் காலன் நான்
நல்லோர்க்கு உதவு – நரிகளா உழக்கு
நல்லத கெட்டதை சரிபாத்துன் வளங்களைக் காப்பாத்து

நான் வர்றண்டா – எனுள்
அடிபட்டு, உடைபட்டு, முடிவுற்று, உயிருற்று
உருப்பெற்று, வர்றண்டா, வர்றண்டா, இங்கு வர்றண்டா
உன்னை உருக்கிட உலுக்கிட, இசை கொண்டு தர்றண்டா

பாரெல்லாம் நின்று வீசும் இன்னிசைக்கு எல்லை இல்லை
யாரோடும் தொட்டுப்பேசும், மெய்யிசைக்கு பேதம் இல்லை
யாழோடு பாரை வெல்ல பொய்விலாசம் தேவையில்லை
வர்றண்டா, வர்றண்டா, இசை கொண்டு தர்றண்டா

மருந்துக்கும் சுவையில்லா விருந்து என்ன பயன்
துரும்புக்கும் திணிவில்லா இரும்பு என்ன பயன்
கருவற்றுப் பொழிகின்ற சொல்லில் என்ன பயன்
உயிரற்று வரைகின்ற கலையில் என்ன பயன்
கணினிக்குள் கலைதனை தேடிக் கூடாது
பானைக்குள் இல்லாமல் அகப்பை வராது
உயிரினை உருக்கிட ஏழு துளை போதும்
மெய்க்கலை பிறந்திட எண்ணம் அதுபோதும்

Share Button
 
Lyrics

1. Kalai
SujeethG feat Santhors  

Vizhiyil Vizhunthal

விழியில் விழுந்தாள்
இதயம் நுழைந்தாள்
தொலைந்தேன் நான் இங்கே இல்லை
உயிரில் கலந்தாள்
உறவாய் மலர்ந்தாள்
உலகம் அவளின்றி இல்லை

வஞ்சியவள் என்தன் நெஞ்சடைத்தாள்
விந்தையாய் இது இல்லை?
மங்கை அவள் என்தன் உயிர் நிறைத்தாள்
துன்பமே இனி இல்லை

நெஞ்சமெல்லாம் நினைவால் நிறைஞ்சிருகிறாள்
பஞ்சமில்லா பிரியம் வழங்கி நிக்கிறாள்

வண்ணப்பூவைப் போலே என் செல்லம் இருப்பாள் – என்
நெஞ்சுக்கிள்ளை சின்னப்பிள்ளை போலச் சிரிப்பாள்
கொஞ்சும் விழியாலே என் நெஞ்சம் நனைப்பாள் – பொன்
அந்திவேளை தென்றல்போல என்றும் இருப்பாள்
விண் வழி வந்தவள் என்பேனா – அவள்
விந்தையின் முழுமையே சொல்வேனா
எவ்வழி யாரவள் என்றாலும் – அன்பைக்
கண்டேன் நான் கொண்டேன் நீ பிறர்க்கில்லையே

சின்னப்பிள்ளையாகி நான் துள்ளிக் குதித்தேன் – உன்
உள்ளம் தன்னைத் தந்ததினை எண்ணிக் களித்தேன்
அந்திப்பகல் எல்லாம் நான் உன்னை நினைத்தேன் – என்
எண்ணம்போல வந்த உன்னை நெஞ்சில் சுமப்பேன்
கண்மணி வரம் தர வந்தாயா – இல்லை
கண்ணெதிர் வரமென நின்றாயா
அன்பே நீ ஏதின்றி வந்தாலும் – மின்னும்
பொன்னே என் கண்ணே நீ எனக்கல்லவோ

Share Button
 
Lyrics

2. Vizhiyil Vizhunthal
SujeethG  

Kaatrunnai

காற்றுன்னைத் தேடி வந்து என் காதல் சொன்னதோ – தினம்
பார்த்துன்னை நாடி வந்து உன் காதில் சொன்னதோ
என் காதல் சொன்னதோ அது உன் காதில் சொன்னதோ
என் தாகம் சொன்னதோ அது என் நாளும் சொன்னதோ

காற்றென்னைத் தேடி வந்து உன் காதல் சொல்வதோ – அடி
உயிருக்கும் மெய்க்கும் என்று யாரும் தூது செல்வதோ
உன் காதல் சொல்வதா எங்கும் யாரும் தூது செல்வதோ
உயிரும் தனிமை கொள்வதா அடி மெய்யும் தனியே ஆழ்வதோ

வந்ததோ வந்ததோ காற்றது
சொன்னதோ சொன்னதோ
தனிமையும் கொள்வதோ – மெய்யது
தனிமையாய் ஆழ்வதோ

இன்னாளில் மலர்ந்தது முல்லை
இன்றோடு தொலைந்தது தொல்லை
துன்பங்கள் இனிமுதல் இல்லை
இன்பம் எல்லை

மெய்யென்று வந்தவன் நீயே
பொய் இன்றி நின்றவன் நீயே
தோளாக வந்தவன் நீயே
எல்லாம் நீயே

வானோடும் மண்ணோடும்
வாழ்கின்ற யாவோடும் காதலைக் கொண்டாடுவோம்

மண் தாண்டி விண்தாண்டி வாழ்கின்ற யாவிற்கும்
காதலைக்கொண்டோடுவோம்

உயிராகவா மெய்சேரவா
உயிரோடு மெய்சேர்ந்து மெய்மறப் போமே

Share Button
 
Lyrics

3. Kaatrunnai
SujeethG feat Olivia  

Thaimozhi

யாதொன்றும் வேண்டாம் தாய்மொழி போதும்
தேன்கூட வேண்டாம் தீந்தமிழ் போதும்
உயிர்ஆகி உணர்வாகி தமிழ்க்கென இருப்போம்
அழகாகி அறிவாகி தமிழ்தனை நிறைப்போம்
உறவாகி. உரமாகி தமிழ்தனை காப்போம்

வாழும் நிரந்தரம் வாழும் தமிழ்மொழி
நாளும் நிறைந்தது வாழ்ந்திடுமே
வானம் அறிந்த தனைத்தும் அறிந்-அது
நாளும் வளர்மொழி வாழ்ந்திடுமே

ஆதி வந்த மொழி, மேன்மை கொண்ட படி ஆழ நின்ற மொழி, நமதல்லோ
ஆய்தம் தந்த மொழி அமுது என்ற படி உயர நின்ற மொழி தமிழல்லோ
புகழ் பாடுவோம், மகிழ்ந்தாடுவோம்
தினம் பாடுவோம் நிதம் பாடுவோம்
கருவாகி உருவாகி தமிழ் பாடுவோம்

இனிது வேண்டுமா, புதிது வேண்டுமா, அறிவு வேண்டுமா, அறிக தமிழ்
ஆண்ட தாயிரம், கண்ட தாயிரம், கொண்டதாயிரம், எமது தமிழ்
இயலும் இசையும் நாட்டு அகமும் கொண்டு, வலம் வரும், பலம் பெறும்
தமிழைக் காதல் செய், தமிழாய் யாதும் செய், தமிழுக்காகச் செய், உலவும் தமிழ்
உருவம் எலாம் தமிழ், அருவம் எலாம் தமிழ், உலகமெலாம் தமிழ், உலவிட வா தமிழ்
வானமெலாம் தமிழ், பூமியெலாம் தமிழ், ஏழ்கடலும் தமிழ், ஏதினிலும் தமிழ், பரவிட வா
இன்றும் என்றும் (யாதொன்றும் வேண்டாம் தாய்மொழி போதும்)

தாய்மையான மொழி பொதுமையான படி நடுவு நின்ற மொழி தமிழல்லோ
கலைகள் கொண்ட மொழி கலப்பிலாத படி தனித்து நின்ற மொழி நமதல்லோ
இசை பாடுவோம், இசைந்தாடுவோம்
தினம் பாடுவோம் நிதம் பாடுவோம்
கருவாகி உருவாகி தமிழ் பாடுவோம்

Share Button
 
Lyrics

4. Thaimozhi
SujeethG feat Anusha, Archana, Olivia, Uma  

Kankal Moodinen

கண்கள் மூடினேன் கடவுள் தேடினேன்
நெஞ்சுள் கடவுளாய் வளர்கிறாய்
கண்கள் திறந்து நான் உன்னைத் தேடினேன்
முன்னே குழந்தையாய் மலர்கிறாய்
நெஞ்சுள் கடவுளாய் வளர்கிறாய் – நீ
முன்னே குழந்தையாய் மலர்கிறாய்

கண்கள் திறந்து நான் கடவுள் தேடினேன்
முன்னே கடவுளாய் வருகிறாய்
கண்கள் மூடி நான் கனவை தேடினேன்
உலகே நீயெனத் தொடர்கிறாய்

நெஞ்சுள் கடவுளாய் வளர்கிறாய் – நீ
முன்னே குழந்தையாய் மலர்கிறாய்

நாம் வாழ்வோம் என்றும் காதலராக
நாளும் இன்பக் காதலராக
வாழ்வோம் என்றும் காதலராக
நாளும் இன்… பமாய் தொடர்ந்திட வா

நான் வாழும் காலமெல்லாம் அன்பே நீ அருகினில் வேண்டும்
நீ போகும் பாதையெல்லாம் நான் உன்தன் கூட வேண்டும்

எம் அன்புக் காதல் தன்னை ஊரெல்லாம் பேசிட வேண்டும்
என் அன்பே கண்ணே உன்மேல் பூ அள்ளி வீச வேண்டும்

அன்பே போதும் இங்கு நீயே போதும்
உனதன்பே போதும் உன்மனம் போதும்
வேறெதும் வேண்ட வில்லை

வரும் இன்ப துன்பம் எல்லாம் சேர்ந்தே நாம் கடந்திட வேண்டும்
வலுவாய் நம் காதல் கொண்டு நாம் என்றும் எழ வேண்டும்

இன்னாள்போல் என்னாள் எல்லாம் தினமும் நாம் இருந்திட வேண்டும்
திருநாள்போல் வரும்நாள் எல்லாம் மகிழ்வோடு வாழ வேண்டும்

அன்பே என்னை உன்னில் தந்தேன் என்னை
எனதன்பே உன்னில் தந்தேன் என்னை
நீ..யின்றி வாழ்வு இல்லை

Share Button
 
Lyrics

5. Kankal Moodinen
SujeethG feat Olivia  

Vaanam Thandi

வானம் தாண்டி வருவாயா
வாழும் வரம் நீ தருவாயா
தாகம் தீர்த்து அருள்வாயா
தானாய் தருவாயா

காதல் கொண்டேன் வருவாயா
வேண்டும் இதயம் தருவாயா
காலம் சேர்ந்தே வருவாயா
நீயாய் தருவாயா

செந்தாமரையே பொன் வான்மதியே
என்னுள் இனிக்கும் செந்தேன் துளியே
கல்லாய் இருந்தேன் காணாதிருந்தேன்
இன்னாள் தொலைந்தேன் உன்னுள் தொலைந்தேன்

தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையிலே காத்திருக்கிறேன் கண்ணம்மா
பார்த்த இடமெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி செல்லம்மா
வார்த்தை தவறாதே கண்ணம்மா என் மார்பு துடிக்குமடி பொன்னம்மா
மேனி கொதிக்குமடி கண்ணம்மா நான் வெந்து வேகிடுவேன் நீ வாம்மா

தூங்கும்போது தாலாட்டிட தென்றலை வரவைப்பேன் – உன்
வீட்டில் காலை சூரியனைத்தான் கட்டியே நான் வைப்பேன்
வானவில்லில் ஊஞ்சல் கட்டி ஆடிடவைப்பேன் நான் – நீ
அணிந்து கொள்ள ஆகாயத்தை இழைத்து வைப்பேன் நான்
நீ இங்கு வாழ்கிற காலம் எல்லாம் இன்பம் காண வேண்டும் – உனில்
வந்து வீழ்கிற துன்பம் எல்லாம் என்னைச் சேரவேண்டும்
வாறாய் பெண்ணே எனைச் சேராய் பெண்ணே – என்
காதல்க் கண்ணே நீதான் – நீதான்

Share Button
 
Lyrics

6. Vaanam Thandi
SujeethG feat Thishanthan  

Ellaam Kaasu

எல்லாம் இங்க காசு தான் எல்லாம் எங்கும் காசு தான்
எல்லாத்துக்கும் காசு தான் எல்லாம் காசுதான்

புதுசா வாறதுக்கும் – பழசாப் போறத்துக்கும்
நடுவில் வாழ்றதுக்கும் – குடுக்க வேணும் காசு
இருந்தா பேர் இருக்கும் போனா பேர் படுக்கும்
கனக்க செய்து நிக்கும் அதுக்குப் பேர்தான் காசு

ஊரே தேடி நிக்கும் உறவாய்க் கூடி நிக்கும்
பிணமும் வாய் திறக்கும் பணமெண்டுலகம் நிக்கும்
சிரிக்கும் (வி)யாவாரிக்கும் நடிக்கும் சாமியர்க்கும்
உலகில் யாவருக்கும் பணந்தானே பிடிக்கும்

வோட்டலூல லூக்குப் போக காசிருக்கோணும் – நீங்க
போட்டிலில வோட்டர் வாங்கக் காசிருக்கோணும்
காறக் காட்டி சைட்டடிக்க காசிருக்கோணும் – பிறகு
சைட் அடிச்ச காதலிக்கு செலவழிக்கோணும்
எங்கே நீ வாழ்ந்தாலும் காசோட வாழோணும்
லூசா நீ போனாலும் காசோட போகோணும்

அன்பாய் நீயும் இரு – அறிவாய் நீயும் இரு
பண்பாய் நீயும் இரு – பணத்தோடயும் இரு
பணத்தத் தேடி இரு – பணத்த நாடி இரு
பணத்தச் சேர்த்து இரு – பணமெண் டலயாதிரு

காசினால நிம்மதிய வாங்க ஏலாதே – ஆனாலும்
காசில்லாம நிம்மதியாத் தூங்க ஏலாதே
கண்ணில்லாம ஓவியத்தைக் தீட்ட ஏலாதே – இங்க
காசில்லாம சீவியத்த ஓட்ட எலாதே
எங்கே நீ வாழ்ந்தாலும் காசோட வாழோணும்
லூசாநீ போனாலும் காசோட போகோணும்

Share Button
 
Lyrics

7. Ellaam Kaasu
SujeethG  

Enna Maranthu

என்னை மறந்து நான் தண்ணி அடிக்கல
ஆட மறந்து நான் எங்கும் பறக்கல
நிண்ட இடத்தில இன்னும் இருக்கிறன் – சரியா

ஆட்ட மேடை அங்கு காத்துக் கிடக்குது
வந்த சனம் இங்கு பாத்து இருக்குது
கோட்ட சூட்ட நானும் களட்டிப்போட்டு – வரயா

எங்கள் கள்ளமட்டை சிங்கக்குட்டி இங்கு வந்திருக்கிறார்
வெள்ள பியெம்முக்கு நிண்டு விழுந்தவ சைட் அடிக்கிறா
தங்க நகையெல்லாம் போட்டுக் காட்டவந்த அக்கா நிக்கிறா
அறாவட்டிக்கடை ஆறுமுகம் அண்ணை ஆடி களிக்கிறார்

முகம் முழுவதும் பெயின்ட் அடிச்சவ வையின் அடிக்கிறா
கள்ள பியர் போடும் கந்தசாமி அண்ணை தண்ணி குடிக்கிறார்
கேட்டுச் சீதனத்தில் வான வாங்கி வந்த மாறன் சிரிக்கிறார்
பத்து பவுண் புகழ் பண வைத்தியர் படமெடுக்கிறார்

கசமுசாவுக்கே காதல் வளர்க்கிற தம்பி நடிக்கிறார்
கள்ளச்சாமியால வண்டி ஊதி வந்த அக்கா தவிக்கிறா
சுட்டகாச தன்ர கட்டில்ல மறைச்ச அண்ண பாக்கிறார்
ஊர வளக்கெண்டு வாங்கி வளர்ந்திட்ட அண்ண முறைக்கிறார்

உன்ர விசாவினை ஊருக்கு விக்கிற லோயர் ஆடுறார்
சீட்டுப்பிடிச்சிட்டு மூட்டையக் கட்டுற சோமர் பாடுறார்
ஆளை மதம் மாத்த அலுப்புக் குடுக்கும் அன்பர் நிக்கிறார்
மணம், வியாபாரம், பலன் பார்த்துச் சுத்தும் சாத்திரி சிரிக்கிறார்

Share Button
 
Lyrics

8. Enna Maranthu
SujeethG  

Kadavul

குர் குர்-குர்-குர் குர்க்கா குர்க்கா
கா கா-கா-கா காவல்க்காரன்

பா… பா.. பா.. பா.. பாரப்பா – அட
மாறும் உலகம் பாரப்பா
கு… கு.. கு.. கு.. ஒர் குர்க்கா – அட
கடவுள் இங்கே வெறும் குர்க்கா

செ… செ.. செ.. செ.. செல்லப்பா – டேய்
சாமி யாவாரியா சொல்லப்பா
வா… வா..வா..வா.. வரதப்பா – நீ
வந்து உக்காந்து உணரப்பா

காக்கும் கடவுளே போற்றி போற்றி
ஐசு வைக்கிறார் தீபம் காட்டி
விரதம் பிடிக்கிறார் நேந்து நேத்தி – ஐயோ
நல்ல தெய்வமெது போட்டியோ போட்டி

நினைக்கிற தெல்லாம் நடக்காது – அது
நடந்தா வாழ்க்கை இனிக்காது
கேட்டது எல்லாம் கிடைக்காது – உன்
கடவுள் முழுவதும் கொடுக்காது
பணத்தை தெய்வம் மதிக்காதே – உன்
பகட்டும் அதுக்குப் பிடிக்காதே – அத
தனித்த காவலாய் நினைக்காத – ஒரு
நொடிக்கும் வாடைக்குப் பிடிக்காத

ஜனத்தின் ஆசை வானம் உயர்ந்தது
மதத்தின் பின்னால் மதம் வளர்ந்தது
பணத்தின் முன்னால் தெய்வம் மலிந்தது
பிணத்தின் மீதும் கோலம்; பிறந்தது
தெய்வம் யாரென நீ அறிவாயோ
எங்குதான் உண்டு என்ற றிவாயோ
என்னதான் வரும் நாம் அறியோமே
ஒன்றுதான் இங்கே நாம் அறிவோம் – அவன்

குர் குர்-குர்-குர் குர்க்கா குர்க்கா

இரவுபகலென்றும் அழியாது – இந்த
வானும் மண்ணும் ஒளியாது
வாழ்வுசாவென்றும் பிரியாது – என்றும்
இன்பம் துன்பம் மறையாது
பிறப்பும் இறப்பும் உண்டானால் – இங்கு
களிப்பும் சலிப்பும் நின்றாடும்
எதைத்தான் கொடுத்து நேர்ந்தாலும் – உன்தன்
தலை எழுத்தா தள்ளாடும்

கண்கள் கொண்டு உலகைப் பார் – பல
கடவுள் பெயரால் கள்ளரடா
கண்கள் மூடி உள்ளே பார் – உனில்
ஒளியாய்த் தெரியும் கடவுளடா
அன்பால் பார் நீ எல்லாம் கடவுள்
அன்பாய் இரு நீ நீயும் கடவுள்
துன்பம் தாங்கும் இந்தக் கடவுள்
அமைதி வழங்கும் அன்புக் கடவுள்

Share Button
 
Lyrics

9. Kadavul
SujeethG  

Kozhai

பெண்கள் பெயர் கொல்ல கதைகள் வளர்த்தாய்
பெண்ணின் உணர்வுகளை ஏறி மிதித்தாய்
பெண்ணை வெல்ல பல பொய்கள் உரைத்தாய்
– கோழை
அன்புத் தாயவளும் பெண்ணே மறந்தாய்
அக்கா தங்கை அவை யாவும் மறந்தாய்
பெண்ணை வெல்லுவது வீரம் அளந்தாய்
– கோழை

நினைப்பில நீயொரு ஆம்பிள சிங்கம்
நிஜத்தில உனக்குள்ள முழுதும் அசிங்கம்
வாழ்வின் பெறுமதி உனக்குத் தெரியாது
வாழ்வு பெருநதி உனக்குப் புரியாது
நிழலதை நிஜமெனக் கதைகள் அளந்தாய்
கழிசறைப் பெண்ணெனப் பொய்கள் புனைந்தாய்
நாளுக்கு நாளென துன்பம் கொடுத்தாய் – நீ
சாகிற வரைக்கவர் இன்பம் அழித்தாய்
பெண்கள் தெய்வமடா உனக்குத் தெரியாது
அணைக்கும் அழிக்குமடா உனக்குப் புரியாது
ஆம்பிளை நானேன நெஞ்ச நிமித்தாதே
பொம்பிளப் பாவத்தை வாழ்வில் சுமக்காதே

பூமி உருண்டை போல, வாழ்க்கை வட்டம்
நீ எங்கு ஓடினாலும் வந்து முட்டும்
இளைய வயதினில அடித்த கொட்டம் – உனை
ஐம்பதிலும் வந்து தேடி வெட்டும்
பொய்யும் வதந்தியும் உன் மகளைப் பிடிக்க – அவள்
வாடி அழ உனது இதயம் வலிக்க – நீ
அன்று செய்த பாவம் வந்து சிரிக்க
வேண்டாம் திருந்திவிடு வாழ்க்கை வெளிக்க
பெண்ணின் உலகமதை உணரப்பழகு
பெண்ணின் உணர்வுகளை மதிக்கப்பழகு
பெண்ணைப் பெண்iணாக நடத்தப்பழகு – நீ
மொத்த மனிசனா வாழப்பழகு

Share Button
 
Lyrics

10. Kozhai
SujeethG  

Raavannan

வான்மீகி வரைந்த இராமாயணத்தால்
ஆரியன் இராமன் ஆண்டவனான்
அயலவன் வாலி குரங்கானான் – என்
முப்பாட்டன் இராவண்ணன் அரக்கனானான்
ஆரியத்திற்கு நான் இராவண்ணன்

தென் திசை பார்க்கின்றேன் என் சொல்வேன் என்றன்
சிந்தை யெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடா
அன்றந்த லங்கையினை ஆண்ட மறத் தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்
என் தமிழர் மூதாதை என் தமிழர் பெருமான்
இராவண்ணன் காண் அவன் நாமம் இவ்வுலகம் அறியும்

ஆரியத் திட்டத்துக் கடிக்கோணோம் ஆப்பு, செந்தமிழ் வீரர் நாம் மறப்பதே தப்பு
பல களம் கண்டு நாம், அடைந்தோம் மூப்பு, உலகினில் எமக்கில்லை, தொடர்ந்து தோற்பு
நரிகள் வந்து புலி காட்டை ஆளுமோ, கயவர் எமில் ஏறி ஆளவும் மாளுமோ
அஞ்சும் வழக்கமே தமிழினதுக்கில்லை, வந்து புகுந்தால் நீ கொடுத்து விடு தொல்லை
ஆரியர் கொட்டத்திற் கடிக்கோணோம் ஆப்பு, செந்தமிழ் வீரன் நீ மறந்தால் தப்பு
தன்மானம் காப்பது தனித்த பொறுப்பு, தடை உடை படை எடு அதுதான் சிறப்பு
ஆண்டதமிழ்க்குடி, எழுந்து மறுபடி, ஆழப்போகுது எண்ணப்படி
மீண்டு முறைப்படி, வாழ்வு வரும்படி, எங்கும் விழப்போது விண்ணின் இடி
என்ளுள் சிறுத்தையே பாய்ந்துதே நீ வெளி வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல் செய்யப் புறப்படு வெளியில், என்ளுள் சிறுத்தையே பாய்ந்தே நீ வெளி வா!

தென் திசை பார்க்கின்றேன் என் சொல்வேன், என் சிந்தை தோளெல்லாம் பூரிப்படா
அன் றந்த லங்கை ஆண்ட மறத் தமிழன், ஐயிரு திசை தன் புகழ் வைத்தோன்
எம் தமிழ் மூதாதை எம் பெருமான், இராவ(ண்)ணன் காண் அவன் நாமம் உலகறியும்

தாயே தமிழே சொல்லி நடித்தால் ஆப்பு, – தமிழின் பேரை வித்துப் பிழைத்தால் ஆப்பு
தமிழை அழிக்க வரும் தமிழனுக்கும் ஆப்பு, – முழுதாய் மூச்சிழுத்து ஓங்கி அடி ஆப்பு
வெட்டி அழித்தாலும் தழைக்கும் தமிழினம், – கொத்தி ஒழித்தாலும் பிழைக்கும் தமிழினம்
முட்டி முறித்தாலும் முளைக்கும் தமிழினம், – வெற்றி நடைபோடப் பிறந்தது தமிழினம்
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்றி தோன்றிய மூத்த குடியென்று மட்டும் திரியாதே
கல்போட்டு மண்போட்டு காலத்தின் பின் போட பகைமை துடிக்கிறது என்றும் மறக்காத
காலத்தோடேயோடு என்னாளும் நீ ஓடு – உலகத்தின் முன்னோடு உணர்வோடே நீ ஓடு
உந்தன் பேர் கெடுக்க நினைக்கிறான் கயவன் உன்னைத் தீயனாக்க துடிக்கிறான் பகைவன்
தமிழ் மண்ணின் ஈரம் நாம், தமிழ் மண்ணின் வீரம் நாம்,
தமிழ் வெல்லப் போவோம் தமிழாகிப் போவோம் நாம்
இராவண்ணன் பேரன் நான், அறிந்ததைச் சொல்வேன் நான்,
வரி கொண்ட தீரன் நான் புலியாகப் பாய்வேன் நான்

Share Button
 
Lyrics

11. Raavaanan
SujeethG  

Puthu Yuham

தேடிச்சோறு நிதம் தின்று- தினம்
சின்ன சிறுகதை பேசி -மனம்
வாடித் துன்பம் மிக உழன்று – பிறர்
வாட வென செயல்; செய்து- நரை
கூடிக் கிழ-பருவம் எய்தி- கொடுங்
கூற்றுக் கிரை-யென மாயும்
பல வேடிக்கை மனிதர் போல
வாழல் வாழ்வென என நினைத்தாயோ

தாழ்ந்து நடவோம்
தோற்பில் கலங்கோம்
ஆண்மை தவறோம்
அச்சம் தவிர்ப்போம்
மடமை வளக்கோம்
பொய்மை இகழ்வோம்
நெஞ்சம் சிதையோம் – நாம்
மாயைக் கொளியோம்

புதுமனம் பிறக்கோணும் எதினின் கட்டற்று
புதுயுகம் படைக்கோணும் தனித்த பற்றற்று
எழு தமிழா – விழி
திற தமிழா – உனை
மயக்கும் மடமையது முழுதாய் மழுக்கி விடும்
உனை உயர்த்திடு, மண்ணை மதித்திடு – நாளும்
நலிந்திடும் மனிதத்தை வளர்த்திடு – கடமையறி
உன்தன் தொழிலை அறி
உன் உளத்துக்கு உரமிடும் வகையை அறி
இயற்கை தந்த இந்த கொடையினை மறந்திடேன்
உலகுக்காய் இயங்குவேன், பகைகட்கும் கலங்கிடேன்

அவன் தீ, பரிதி
இளம் தலைமுறைக் குருதி
நம்பு நீ. உனை உணரு நீ. தினம் பிற இனி
தொடர் அடி விழும் இடிவிழும் தொடரு நீ
உண்மை, தடைகள் கடந்து வெல்ல மோது நீ
பெரும் அலைகள், வரும், அதில் மிதந்து போ
அதில் அமிழ்ந்து போ, அதைக் கடந்து போ
அதை அளந்து நீ நடந்திடு, உனக்கும் எனக்கும் இங்கு வலிகள் பழக்கம்
தமிழ் உணர்விளக்கேல் அவர் துயர் விலக்கே
இன்றே எழுந்து நீ வா என்றும் தொடர்ந்தும் நிறைந்தும் வா

இளைஞனே எழுந்து வா, களங்கள் காணலாம்
புதுயுகம் படைக்கவே எழும்பு போகலாம்.

– தடைவரும் பகை வரும் விழுந்து போகலாம்
விழுந்தபின் எழும்பு நீ தொடர்ந்து ஓடலாம்

துணிவாய் வா எந்தப்புதிருமே பெரிதில்லை
தமிழா வா இங்கு பொறுப்பதில் பயனில்லை

– கடுகின் காரம் நீ எழுந்து காட்ட வா
மடமை யாவையும் அடித்து ஓட்டவா

உலகை வெல்லலாம் நண்பா வாடா

– அமைதி கொள்ளலாம் இன்றே வாடா

பொய்யை வெல்ல நீ மெய் கொண்டு வாடா

– தொல்லை நீங்குமடா துயரம் தீருமடா

அறியத் தெரிய இங்கு யாதொன்றும் தடையில்
அறிய வேண்டுமெனில் வானமே தான் எல்லை

– அடங்கி ஒடுங்கி இங்கு வாழ்வதில் பயனில்லை
அறிவை அடகு வைத்து வாழ்வது வாழ்வில்லை
எழுந்து விடு நீ துணிந்து விடு,
இந்த உலகத்தின் மொழியை நீ அறிந்து விடு
வாளை எடு அறிவால் நீ எழு – கள்ளப்
பொய்யர்கள் வரும் வழி ஒடவிடு

Share Button
 
Lyrics

12. Puthu Yuham
SujeethG feat Santhors  

London Vanthan

வந்தன் வந்தன் ஏனடி வந்தன்
தந்தன் தந்தன் ஏனடி தந்தன்
லண்டன் வந்தன் ஏனடி வந்தன்
உன்னைத்தானே தேடி நான் வந்தன்

உன்னைத்தானடி எண்ணித்தானடி
உன்னத்தானடி உண்ணத்தானடி
அன்பைத் தாவடி அண்மித்தாடடி
தத்தித்தாவடி தத்தை ஆகடி

கண்கள் ரெண்டும் பார்த்து கைகள் ரெண்டும் கோர்த்து
உன்னில் என்னை சேர்த்து ஆடுவோம் ஆடவா
அன்பே என்தன் சிட்டு உன்தன் கன்னம் தொட்டு
மெல்ல முத்தமிட்டு கூடலாம் கூடவா
நில்லா தொல்லையிட்டு கூடச்சொல்லாயோ நீ
எல்லா எல்லை தொட்டு தாண்டிச்செல்லாயோ நீ
என்னை ஆணையிட்டு ஆழச்சொல்லாயோ நீ
உன்னில் வசப்பட்டு வாழச்சொல்லாயோ நீ

அன்பே ஆணையிடு ஆழுவேன் வாழவா
பெண்ணே தாலியிட கோருவேன் சேரவா
என்மேல் ஆணையிட்டு ஆழ நீ ஓடிவா
என்மேல் வசப்பட்டு வாழ நீ தேடி வா
மெல்லப் புறப்பட்டு வானை துளையிட்டு
விண்ணில் குடியிட்டு வாழலாம் வாழவா
கண்கள் ரெண்டும் பார்த்து கைகள் ரெண்டும் கோர்த்து
உன்னில் என்னை சேர்த்து ஆடுவோம் ஆடவா

பெண்ணே சொல்ல வேண்டும் காதல் சொல்ல வேண்டும்
என்றும் கூடாதென்றால் என்னைக் கொல்ல வேண்டும்
உன்னை நெஞ்சில் வைத்தே இதயம் துடிக்குது
லவ்லவ்லவ் என்றே சொல்லி அடிக்குது
உன்னை நம்பித்தானே வாழ்க்கை இருக்கடி
இல்லை என்றால் இங்கே நானும் எதுக்கடி
சற்றே எண்ணிப்பார் சுற்றம் மூடிப்பார்
சுற்றும் என்னைப் பார் நித்தம் என்னைப் பார்

காதல் காதல் காதல் காதல் என்றே சொல்வேன்
காதல் நீங்கிப் போனால் சாதல் இன்றே செய்வேன்
உள்ள இதயம் உள்ளே உனக்காய்த் துடிக்குமே
இறக்கும் வரை அது உனையே நினைக்குமே
மறக்கும் நிலையை அது தினமும் மறக்குமே
நிறைக்கும் உனையே அது உயிருள் நிறைக்குமே
பெண்ணே சொல்ல வேண்டும் காதல் சொல்ல வேண்டும்
என்றும் கூடாதென்றால் என்னைக் கொல்ல வேண்டும்

Share Button
 
Lyrics

13. London Vanthan
SujeethG feat Archana  

 

14. Kulaloothi
J. Balan  

Mutham

வா வா முத்தம் தரவா நான் மொத்தமா தான் தரவா
வா வா முத்தம் தரவா நான் மொத்தமா தான் தரவா
வாவா என்பக்கம் வா
நான் சின்னப் பூவான நீயும் தேனை கண்ட சிறு வண்டானா
என்னை விடு வானா என்னுள் உறைவானா

இருவிழி புணருது இருமனம் கரையுது
இருவுடல் உலருது இனியென்ன வருமோ

வட்டமடிக்குது கருநிற வண்டு – சித்தம்
சிலிர்க்குது சின்னப் பூ கண்டு
முத்தம் அளித்திட வா – வா
நான் முத்துக்குளித்திட வா வா – நீ
வெட்டி எடுத்த கட்டித் தங்கம்
தொட்டு நகர்த்த அங்கம் பொங்கும்
கட்டியணைத்திட அன்பே வா – நீ
முற்றும் களித்திட முன்பே வா

கட்டுடல் மேனிக் காதலி – உன்
கார்விழி மின்னுது ஏனடி
கொட்டிடா தேனீ நானடி – இன்
புற்றிடத் தேனைத் தாவடி
இதயம் கவரும் கொள்ளைக்காரி
எதையும் புரியும் வெள்ளைக்காரி
இரவில் மடியில் மோகக்காரி
இரவு விடிந்தால் யோகக்காரி

திருவுடல் குளிருதே அடிவரை படருதே
மனமெங்கும் மலருதே புதிதல்லவோ
உடலெங்கும் மலர்ந்தவள் அடிவரை குளிர்ந்தவள்
பிறர்க்கில்லை இவளென்றும் உனக்கல்லவோ
உளம் கலந்தோமே நாம் நிதம் மகிழ்ந்திடுவோம் நாம்
எமை மறப்போமே பூவை தொலைப்போமே

இருவிழி புணருது இருமனம் கரையுது
இருவுடல் உலருது இனியென்ன வருமோ

முத்தம் மொத்தம் நித்தமாய் – உனில்
பித்தம் கொண்டேன் சித்தமாய்
இன்பம் கொள்வோம் சத்தமாய் – முழு
துன்பம் போகும் மொத்தமாய்
இன்நாள் வரையினில் புத்தனாய் – இன்
றானேன் உன்தன் பக்தனாய்
உயிர்கொண்டாடும் சிற்பமாய் – உன்
அங்கம் தர வா சொர்க்கமாய்

வெல்லும் வேல்விழி வெண்ணிலா – உன்
மெய்யது நெய்தது பொன்னிலா
முன்னிலே கனியிற பெண்நிலா – நாம்
கூடும் நாளிகை பெருவிழா
செம்புலம் சேர்ந்த பெண்ணிலா – கொண்டு
ஆடுது நெஞ்சினில் வெண்பலா – கண்டு
துள்ளுது என்மனம் பொங்கலா – அடி
இனிமுதல் நாளும் திருவிழா

Share Button
 
Lyrics

15. Muththam
SujeethG feat Archana  

Share Button
 

 
 
previous next
X