Single Releases

Select album to play

previous next
 

Periyaar

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக் குகையில் சிறுத்தை எழும்

உனக்காய் நீ வாழ, உனையே நீயாள, தனையே தந்தார் ஐயா
நரைத்து நின்றாலும் இளைத்து நின்றாலும் களத்தில் நின்றார் ஐயா
தோளோடு தோளாக நின்றார் ஐயா – சுய
மரியாதை கொண்டாளச் செய்தார் ஐயா

நீ சுட்டெறிக்கும் சூரியனாய் புத்துயிர்க்க வேணும்
உனைக் கட்ட எண்ணும் சக்திகட்கு சவுக்கெடுக்க வேணும்
நீ பெரியாரின் பிள்ளை, என்றும் உடைஞ்சுபோவதில்லை
சாதகத்துத் தொல்லை அது பகுத்தறிவுக் கில்லை
சாதிமத பேதங்களை அறிவுகொண்டு வெட்டு – ஒரு
மனிதனாக வாழ்வதுதான் நன்று முரசு கொட்டு

யார் யார் பெரியார்  ரா ரா இ.வே.ரா

பொம்பிளைக்கு மரியாதை நீ கொடுக்க மறவாத
பிள்ளை பெறும் யந்திரமா பொம்பிளயப் பாக்காத
தெம்பு பலம் பெண்ணை வெல்வேன் எண்ணுவதே பெரு மடமை
வலிமை என்று பார்க்க போனா எருமைக்கும் நீ அடிமை
ஆண்மை வெறி அடக்கும் வெறி அத்தனையும் விட்டு எறி
உன்னையறி பெண்ணையறி இதையும் நீ பகுத்து அறி

சாதகத்தை நம்பி மாளும் மடமை வேண்டாம் அம்மா
இங்கு சாதியிலே இழிகுலமாம் எழுதிவைச்சான் சும்மா
கற்புநெறி, சமயலறி பித்தலாட்டம் அம்மா – என்றும்
ஆணும் பெண்ணும் நிகரே என்றுன் மனம் உணரணுமம்மா
சாதியத்தை சாதகத்தை அழித்தொழிக்கவேணும் – உன்
பிள்ளைக்கு நீ பகுத்தறிவுப் பால் கொடுக்கவேணும்

யார் யார் பெரியார்  ரா ரா இ.வே.ரா

நரைத்து இளைத்து நின்றாலும் களத்தில் நின்றவர் பெரியார்
உனை அடக்க முடக்க நினைத்தவரை எதிர்த்து நின்றது வேறுயாரு
உனக்குள் இருக்கும் பெரியாரை உசுப்பிநீ விட வேணும் – எமை
வலுவாய் அரிக்கும் மூடப்பழக்கத்தை உடைந்தெறிந்திட வேணும்
எதிர்த்தெழுந்திடவேணும் நீ அறுத்தெறிந்திட வேணும் – எமை
மழுக்க நினைக்கும் அனைத்தினையும்நீ தகர்த்தெறிந்திடவேணும்

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக் குகையில சிறுத்தை எழும்

Share Button
 
Lyrics

1. Periyaar 2013
SujeethG  

Poraamai

உலகம் வளர நீ அடிக்கடி தடுக்கும்
தினமும் முதுகினில் சமரது தொடுக்கும்
தொடர்ந்து நடந்திடு தடை ஓடி ஒளிக்கும்
உனக்கும் உறுதியாய் புதுவழி கிடைக்கும்

என்னைக் கவிழ்க்க சிலர் உள்ளம் துடிக்கும்
என்னில் குறை காண தினமும் தவிக்கும்
என்னைப் பொய்யனெனச் சொல்லித் தொலைக்கும்
நான் போகும் வழி எல்லாம் குழியைப் பறிக்கும்
என்பெயர் சொல்ல இங்கென் வாழ்க்கை இல்லை
சொல்லித் திரிவதிலும் பயனேதும் இல்லை
வாழ்வில் பட்டதையே நான் சொல்லிப்போவேன் – என்
கையில் சுட்டதையும் நான் சொல்லிப்போவேன்
நீ தந்த வரத்திற்கு இயற்கையே நன்றி
நான் இங்கு வெறும் புழுதி உன் கருணை இன்றி
உனக்காக பணிசெய்வேன் வரையறை இன்றி
தூற்றுவார் தூற்றட்டும் அவர் காட்டுப் பன்றி

உலகம் வளர நீ அடிக்கடி தடுக்கும்
தினமும் முதுகினில் சமரது தொடுக்கும்
தொடர்ந்து நடந்திடு தடை ஓடி ஒளிக்கும்
உனக்கும் உறுதியாய் புதுவழி கிடைக்கும்

வரி கொண்டு நான் பாய்வேன் நான் வரிப்புலி
தவறேதும் நான் செய்யேன் எனக்கேது கிலி
சமுதாய மேம்பாட்டில் நான் சின்ன உளி
தடுமாறிப்போனாலே அன்றே நான் பலி
ஐயோ எனக்கிங்கே எதிரிகள் வேண்டாம்
கூடித்திரியவும் நண்பர்கள் வேண்டாம்
தன்னந்தனியாயே நான் இங்கு வந்தேன்
இன்னும் சில நாளில் நான் மாண்டு போறேன்
பொங்கும் பொறாமையும் ஒங்கும் எரிச்சலும்
வாழ்வில் வந்துவிட்டால் அமைதி இருக்காது
மங்கும் வாழ்வுதனில் எங்கும் அன்பு கொண்டால்
சொர்க்கம் என்ற ஒன்று வேறெங்கும் இருக்காது

Share Button
 
Lyrics

2. Poraamai 2013
SujeethG  

O.Saami

வாய்மை எது பொய்மை எது எப்படித்தான் தெரியும்
நல்லதெது கெட்டதெது பட்டபின்னே புரியும்
பட்டவரை சுட்டவரை யாரும் சொல்ல முடியும்
நீயே பட்டுவிட்டால் மட்டும் வலியது புரியும்

ஐயோ ஐயோ என்ன சாமி என்ன நானும் பண்ண சாமி
கந்தா கடம்பா கந்தசாமி ஊரில யாரை நம்ப சாமி
தெருவில ஆயிரம் கள்ளச்சாமி கொஞ்சம் தானே நல்ல சாமி
நல்லவன நீ காட்டிச் சாமி மற்றவன நீ ஒட்டு சாமி

மந்திர யானைத் தும்பிக்கை எல்லாம் மூடநம்பிக்கை
அழகாய் இருக்கிற காவிக்க எத்தனை கள்ளர் சீவிக்க
ஆத்திரம் வருது சிந்திக்க எவனப் பிடிச்சு சொறிஞ்சிக்க
சொந்த வழியத் தேடிக்க மந்த வழியை தொலைச்சுக்க

பூச்சுத்துறார் காதில் பூச்சுத்துறார் – இங்கே
தாம் வாழ உன்காதில் பூச்சுத்துறார்
பொய் பேசுறார் அவர் பொய் பேசுறார் கேட்டால்
தெய்வம் குற்றம் என்று பொய் பேசுறார்

வாய்மை எது பொய்மை எது எப்படித்தான் தெரியும்

கடவுளைத் துணையா வைச்சுக்கொண்டு எல்லாக்களவும் நடக்குது
அத்தனை மதத்கூரைக்குள்ளும் அங்கும் இங்கும் இருக்குது
மூளையைக் களட்டி வைச்சுப்போட்டா ஊர்ல சனம் திரியுது
திரும்பத்திரும்ப நினைச்சுப் பாக்க உள்ள மனம் எரியுது

பணம் இருந்தா பாவமன்னிப்பு பணம் இல்லையா பாவம் – மன்னிப்பு
பதவி இருக்கா உனக்கு அல்லிப்பூ பதவி இல்லையா தின் அலரிப்பூ
இரவாப் பகலா உழைச்சத கண்டவனிட்ட அழிக்குது
நல்லது கெட்டது கதைக்கப்போனா என்னச் சனம் முறைக்குது

கள்ளச்சாமி பையுக்க நுழைக்கிறான் காணிக்கை
கள்ளங்கள வளக்கிறார் இதுதானே வேடிக்கை
கடவுள நீயும் பாக்கிறதெண்டா கண்ணக் கொஞ்சம் மூடிக்க
நடுவில நாலு நந்தி எதுக்கு கடவுள நீயும் தரிசிக்க

Share Button
 
Lyrics

3. O.saami 2008
SujeethG  

Machaana Paaradi

மச்சானப் பாரடி மல்டிரலண்ட் மானடி
நிக்காம போகாத வெக்கம் ஏனடி
தக்காளி நீயடி தந்தனதோம் போடடி
முக்காலி நான் தாறன் முத்தம் தாவண்டி

வார்த்தை மொழி இன்றி வருமா
காதல் மனம் இன்றி வருமா
ஊடல் களி கொண்டு வரும் வாம்மா வாம்மா

பெண்ணே பள்ளி கொள்ள வரவா
கண்ணே என்னை மெல்லத் தரவா
அன்பே அள்ளி அணைத்திட வாம்மா வாம்மா

என்னவளே பொன்மலரே பொன்மனனே வெக்கம் விலக்கிடு
கார்விழியே காவிரியே காதல்நீ வரம்
கண்மணியே பொன்மணியே மின்மினியே கட்டியணைத்திடு
சேர்ந்திருப்பேன் பார்த்திருப்பேன் காத்திருப்பேன் நிதம்

நான் அழைச்சா நீ ஓடிவா
நான் ஒளிச்சா நீ தேடிவா
நீ துளி தேன் உனைக் காதலித்தேன்
என்னைக் காதலியேன் இல்லை நான் தவிப்பேன்
தேவதையே என்னைப் பார் ரதியே
எந்தன் பூவிழியே என்னைக் காதலியே

வார்த்தை மொழி இன்றி வருமா
காதல் மனம் இன்றி வருமா
ஊடல் களி கொண்டு வரும் வாம்மா வாம்மா
பெண்ணே பள்ளி கொள்ள வரவா
கண்ணே என்னை மெல்லத் தரவா
அன்பே அள்ளி அணைத்திட வாம்மா வாம்மா

நீ படிச்சா நான் ஆடவா
நீ அடிச்சா நான் ஓடவா
ஊர்வசியே என்னில் நீ வசியே
என்னை நீ ரசியே என்றும் நீ ருசியே
நான் தொலைந்தேன் உன்னில்த்தான் தொலைந்தேன்
சரண் நான் அடைந்தேன் உன்தன் கால் விழுந்தேன்

வார்த்தை மொழி இன்றி வருமா
காதல் மனம் இன்றி வருமா
ஊடல் களி கொண்டு வரும் வாம்மா வாம்மா
பெண்ணே பள்ளி கொள்ள வரவா
கண்ணே என்னை மெல்லத் தரவா
அன்பே அள்ளி அணைத்திட வாம்மா வாம்மா

Share Button
 
Lyrics

4. Machaana Paaradi 2008
SujeethG  

Kalavi

உருகுது மருகுது மஞ்சம் கொடு
தளிரிது பிளிறுது தஞ்சம் கொடு
பித்தம் கொண்டாடுது சித்தம் திண்டாடுது
படமெடுத்தாடுது பதியுனை நினைத்தே
புதிர்தொடுத்தாடு நீ எனையெடுத்தே

அடிக்கடி இனி முத்தச்சத்தம்
தகதகவென மனம் பத்தும்
கொதிகொதிக்குது ரத்தம் நித்தம்
உதிக்குமேயினி  ஒரு யுத்தம்

கண்கள் வெறித்திட ரத்தம் கொதிக்குதோ
மேல்ல விரல்பட உள்ளம் சிலிர்க்குதோ
அள்ளி அணைத்திட அனல் பறக்குதோ
அன்பில் அடிபட எல்லாம் துடிக்குதோ
கண்ணே பெண்ணே ராதை நீதான் என்தன் பாவை
கண்ணில் காமம் கொண்டு வந்தேன் உன்தன் பாதை
என்னைத்தாங்கிக் கொண்டு செய்வாயோ நீசேவை
உள்ளம் சேர்ந்தபடி தாண்டுவோம் இப்பூவை
அன்பே கயல்விழி நான் முயலடி
அந்த வகைப்படி நான் உன் பக்கமடி
பெண்ணே உன்னை தாதா நீதான் என்தன் ராதா
கண்ணே காமம் கொண்டு பக்கம் வந்தேன் வாவா

விரைந்திடு விரகத்தின் விரல் நுனி போவோம்
விடிந்ததும் மறுபடி புதுமுனை போவோம்
கூடல் தேடித்தரும் புதிது
முழுவதும் அறிந்தவர் அரிது

உருகுது மருகுது மஞ்சம் கொடு
தளிரிது பிளிறுது தஞ்சம் கொடு

படமெடுத்தாடுது பதியுனை நினைத்தே
புதிர்தொடுத்தாடு நீ எனையெடுத்தே

அடிக்கடி இனி முத்தச்சத்தம்
தகதகவென மனம் பத்தும்
கொதிகொதியென ரத்தம் நித்தம்
உதிக்குமேயினி  ஒரு யுத்தம்

உனக்கும் எனக்கும் பிடிக்கும் வெறிக்கு உலகம் பொடியாய் வெடிக்குமோ
அடித்து முடித்து அணைத்த பிறகும் விரகம் முளையாய் முளைக்குமோ
வளைத்து நெளித்து சுழித்து சுவைக்க கொடியே நீயும் தேடி வா
இருட்டில் விளக்கை அணைத்து முடித்து புதிய பொருளைத் தேட வா

நித்தம் போடும் முத்தச் சத்தம்  எண்ண மனம் சிலிர்க்குது
சித்தம் கொண்ட சித்தத்தினால் கூட மனம் துடிக்குது
ரத்தம் பாயும் வேகத்தில உள்ளே அனல் அடிக்குது
பத்தினிக்குப் பத்துப்போட உள்ள மணி அடிக்குது

கனியே பனியே மணியே தனியே எனையே நீயும் தேடவா
விழியின் வழியே பொழியும் ஒளியே போதும் நீயும் கூட வா
அடியே கொடியே விடிய விடிய மடைகள் தாண்டி ஓடவா
எரியும் விளக்கை அணைத்து முடித்து புதிய பொருளைத் தேட வா

நயனங்களில் சந்தித்தோம்   தோம் தோம்  தோம்
மனமெங்கிலும் தித்தித்தோம்  தோம் தோம் தோம்
உடலெங்கிலும் தத்திந்தோம்  தோம் தோம் தோம்
இன்பம் கொண்டோம்
உடையது விடை பெற புதுவிடை வருதே

உருகுது மருகுது மஞ்சம் கொடு
தளிரிது பிளிறுது தஞ்சம் கொடு
பித்தம் கொண்டாடுது சித்தம் திண்டாடுது
படமெடுத்தாடுது பதியுனை நினைத்தே
புதிர்தொடுத்தாடு நீ எனையெடுத்தே

அடிக்கடி இனி முத்தச்சத்தம்
தகதகவென மனம் பத்தும்
கொதிகொதிக்குது ரத்தம் நித்தம்
உதிக்குமேயினி  ஒரு யுத்தம்

Share Button
 
Lyrics

5. Kalavi 2008
SujeethG feat Dilsha  

Poovarasam Poo

பூவரசம் பூவே நீதான் என்
ஜீவரசம் என்றும் நான் நாடும்
தேன் கலசம் ஆடலாம் பெண்ணே
நாம் சரசம் ஓடிவா கண்ணே

என்னத்தைச் சொல்லி நான் என்னத்தைச் செய்ய
காதலைக் கடையில சொல்லவா செய்ய
பழம் நழுவிப் பாலில் விழும் எண்டு பாத்தா
பழம் விழாமப் பாலும் பழம் பாலாப் போச்சா
இது என்ன ஞாயம் துன்பம் என்னில்ப் பாயும்
இன்பம் மெல்லச்சாயும் மனசெல்லாம் காயம்
என்னத்தைச் சொல்லி நான் என்னத்தைச் செய்ய
காதலைக் கடையில சொல்லவா செய்ய

என்னைத் தெரியாதோ அன்பு புரியாதோ
இதயம் கிடையாதோ உணர்வு தெளியாதோ
கண்ணே நில்லடி கண்கள் பாரடி
காதல் சொல்லடி இல்லை கொல்லடி
நீயில்லா வாழ்க்கை தீ தின்னல் போன்றது
நிம்மதி இன்றிங்கு வாழ்வை யார் வென்றது
பெண்ணே என்னைப் பார் கண்கள் தன்னைப் பார்
கண்ணில் கசிந்தோடும் துன்பம் தன்னைப் பார்

பூவரசம் பூவே நீதான் என்
ஜீவரசம் என்றும் நான் நாடும்…

பாறைக்குள் நான் இங்கேன் நீரைத் தேடினேன்
அவளுக்குள் வீணாக என்னைத் தேடினேன்
இன்பம் துள்ள வாழும் அவளைப் பார்க்கிறேன்
அல்லல் பட்டு வீழும் என்னை வேர்க்கிறேன்
மனமே மரத்துப்போ அவளைத் தொலைத்துப்போ
விழியில் நீர் போதும் வேண்டாம் இனி ஏதும்
வாழ்வில் அலைமோதும் காலம் இனி மாறும்
யாவும் சரியாகும் வாழ்வு புதிதாகும்

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வாழ்வில் புதிதில்லை தொல்லை இனியில்லை
வலியது வருவதும் மீண்டது போவதும்
என்றும் புதிதில்லை வாழ்வு வேறில்லை
இன்பம் முன்னர் வரும் துன்பம் பின்னர் வரும்
துன்பம்; முன்னர் வரும் இன்பம் பின்னர் வரும்
வாழ்வை வாழுவேன் வாழ்வை வெல்லுவேன்
தொல்லை இனியில்லை தோற்பும் இனியில்லை

Share Button
 
Lyrics

6. Poovarasam Poo 2008
SujeethG  

Periyaar

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக் குகையில் சிறுத்தை எழும்

உனக்காய் நீ வாழ, உனையே நீயாள, தனையே தந்தார் ஐயா
நரைத்து நின்றாலும் இளைத்து நின்றாலும் களத்தில் நின்றார் ஐயா
தோளோடு தோளாக நின்றார் ஐயா – சுய
மரியாதை கொண்டாளச் செய்தார் ஐயா

நீ சுட்டெறிக்கும் சூரியனாய் புத்துயிர்க்க வேணும்
உனைக் கட்ட எண்ணும் சக்திகட்கு சவுக்கெடுக்க வேணும்
நீ பெரியாரின் பிள்ளை, என்றும் உடைஞ்சுபோவதில்லை
சாதகத்துத் தொல்லை அது பகுத்தறிவுக் கில்லை
சாதிமத பேதங்களை அறிவுகொண்டு வெட்டு – ஒரு
மனிதனாக வாழ்வதுதான் நன்று முரசு கொட்டு

யார் யார் பெரியார்  ரா ரா இ.வே.ரா

பொம்பிளைக்கு மரியாதை நீ கொடுக்க மறவாத
பிள்ளை பெறும் யந்திரமா பொம்பிளயப் பாக்காத
தெம்பு பலம் பெண்ணை வெல்வேன் எண்ணுவதே பெரு மடமை
வலிமை என்று பார்க்க போனா எருமைக்கும் நீ அடிமை
ஆண்மை வெறி அடக்கும் வெறி அத்தனையும் விட்டு எறி
உன்னையறி பெண்ணையறி இதையும் நீ பகுத்து அறி

சாதகத்தை நம்பி மாளும் மடமை வேண்டாம் அம்மா
இங்கு சாதியிலே இழிகுலமாம் எழுதிவைச்சான் சும்மா
கற்புநெறி, சமயலறி பித்தலாட்டம் அம்மா – என்றும்
ஆணும் பெண்ணும் நிகரே என்றுன் மனம் உணரணுமம்மா
சாதியத்தை சாதகத்தை அழித்தொழிக்கவேணும் – உன்
பிள்ளைக்கு நீ பகுத்தறிவுப் பால் கொடுக்கவேணும்

யார் யார் பெரியார்  ரா ரா இ.வே.ரா

நரைத்து இளைத்து நின்றாலும் களத்தில் நின்றவர் பெரியார்
உனை அடக்க முடக்க நினைத்தவரை எதிர்த்து நின்றது வேறுயாரு
உனக்குள் இருக்கும் பெரியாரை உசுப்பிநீ விட வேணும் – எமை
வலுவாய் அரிக்கும் மூடப்பழக்கத்தை உடைந்தெறிந்திட வேணும்
எதிர்த்தெழுந்திடவேணும் நீ அறுத்தெறிந்திட வேணும் – எமை
மழுக்க நினைக்கும் அனைத்தினையும்நீ தகர்த்தெறிந்திடவேணும்

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக் குகையில சிறுத்தை எழும்

Share Button
 
Lyrics

7. Periyaar 2011
SujeethG  

Poi

சாகாது எம் காதல் சொன்னாளே சோனா
சொல்லிட்டு கொன்றிட்டேன் போனா
தாழாதே என் ஜீவன் நீ நீங்கிப்போனா
பொய்யாகிப் போனாயே வீணா

காதல் கொண்டாடி வந்தவள் போனாள்
காலை மாலையென நின்றவள் போனாள்
செல்லம் செல்லமென சொன்னவள் எங்கோ போனாளே

வெறுக்கும் சலிக்கும் உன் இருதயம் வலிக்கும்
தவிக்கும் வெடிக்கும் ஏதும் செய்யத் துடிக்கும்
அரட்டும் வெருட்டும் இவ்வுலகமே இருட்டும்
உனக்குள் அனைத்துமினி முடிந்ததாய் இருக்கும்
காதல் தோல்வி எப்போதுமே வாழ்வின் தோல்வி இல்லை
தோல்வி தரும் அனுபவங்கள் வேறெதிலும் இல்லை
கொஞ்சம் தாங்கி நின்று ஒடு, போய்விடும் உன் தொல்லை
ஐந்து பெரும் சமுத்திரத்தில் வேறு மீனா இல்லை
காதலித்தாள் உடைத்துவிட்டாள் தோல்வியில்லை துவளாதே
காலம் உண்டு வாழ்க்கை உண்டு எப்பொதும் நீ மறவாதே
முயற்சியோடு நடைபோடு காலம் வருமே உன்னோடு
வாழ்வை வெல்லு துணிவோடு வெற்றி காணு மகிழ்வோடு
இயற்கை என்னும் விந்தை வெளியை கண்ணைத் திறந்து பார்
நீ வாழும் உலகம் மெத்தபெரிது, நின்று நிமிர்ந்து பார்
போனதை விட்டிடு போகட்டும் வருநாள் உனதாய் இருக்கட்டும்
உன்தன் வாழ்க்கை உன்தன் கையில், எல்லாம் உன்தன் நம்பிக்கையில்

காதல் சொன்னாளே சொன்னதும் பொய்
கனவு தந்தாளே தந்ததும் பொய்
அன்பு என்றாளே அவளவும் பொய்
யாவும் சொன்னாளே சொன்னவளே பொய்

சாகாது எம் காதல் சொன்னாளே சோனா
சொல்லிட்டு கொன்றிட்டேன் போனா
தாழாதே என் ஜீவன் நீ நீங்கிப்போனா
பொய்யாகிப் போனாயே வீணா

காதல் கொண்டாடி வந்தவள் போனாள்
காலை மாலையென நின்றவள் போனாள்
செல்லம் செல்லமென சொன்னவள் எங்கோ போனாளே

புன்னகைத்தாள் கைபிடித்தாள் காலம் மாறிப்போயாச்சு
காதலித்தாள் வாக்களித்தாள் காற்றோடேல்லாம் கலந்தாச்சு
மறந்துவிட்டாள் பறந்துவிட்டாள் அவளின் வாழ்க்கை புதிதாச்சு
காத்திருப்பேன் பார்த்திருப்பேன் என்பதெல்லாம் வீண் பேச்சு
தொலைந்த உன்காதலியை அழிக்க மனம் துடிக்கும்
அழிப்பதா அணைப்போமே திரும்ப மனம் நினைக்கும்
இருதயம் தவிக்கும் சேரவே துடிக்கும்
காற் பணிந்தே அழைக்கும், காதலுக்காய் இரக்கும்
யாவும் போதும் மறந்திடு காதலையும் துறந்திடு
நடந்தவற்றைக் கடந்திடு, உன் வாழ்வை நீயும் தொடர்ந்திடு
காதல்போயின் சாதல் சொல்லி எந்தப்பயனுமே இல்லை
மீண்டெழுந்து வாழ்ந்திடு உன் வாழ்க்கை முடியவுமில்லை
அழைக்கும் உலகைப் பார், நெஞ்சினை நிமிர்த்திப் பார்
உனக்காய் வாழப்பார், உலகை ஆளப் பார்
தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
உன்தன் வாழ்க்கை உன்தன் கையில், எல்லாம் உன்தன் நம்பிக்கையில்

Share Button
 
Lyrics

8. Poi 2011
SujeethG  

Anjala

ஏஞ்சலே ஏஞ்சலே நீயோர் மாயப்பெண்ணோ
கானல் நீர்தான் பெண்ணோ
ஏங்கினேன் தேம்பினேன் காதல் புரியாப் பெண்ணோ
ஏக்கம் அறியாப் பெண்ணோ

ஏஞ்சலா நெஞ்சில் வா ஊஞ்சலில் ஆடவா
பெண்ணே நான் உன்னைத் தான் எண்ணித்தான் வாழவா

என் பெண்ணே என்தன் பொன்னே என்னை நீயும் தேடிவா

இருக்கும் இதயம் உனக்கெனத் துடிக்கும்
இறக்கும் வரைக்கும் உனையது நினைக்கும்
மறக்கும் நிலையை தினமது மறக்கும்
நிறைக்கும் உனையே உயிர்க்குள்ளே நிறைக்கும்

காதல் சொல்லிப்போவேன்
காதில் சொல்லிப்போவேன்
தாளில் சொல்லிப்போ – வின்
நாளில் சொல்லிப்போவேன்
உன்னை எண்ணி எண்ணி இதயம் துடிக்கும்
எண்ணம் நீங்கிப்போனால் அன்றே வெடிக்கும்
பெண்ணே உன்னைச்சேர இன்பம் கொழிக்கும்
நித்தம் நித்தம் என்தன் சித்தம் சிலிர்க்கும்
பெண்ணே உன்னை நீயும் தேடியே ஓடிவா
துன்பம் மறந்து நாம் வாழலாம் வாழவா

காதல் செய் காதல் செய் காதல் செய் சொன்னார்கள்
காதல் நீங்கிப்போனால் சாதல் செய் சொன்னார்கள்
காதல் கொண்டமையால் தினமிங்கு சாகிறேன்
எரியுத் தீப்பந்தாகி தினமிங்கே வேகிறேன்
காதல் கொண்டேன் என்று பெண்ணே சொல்லிப்போ
இல்லையென்றால் பெண்ணே என்னைக் கொல்லிப்போ
நீபார்க்கும் பூவெல்லாம் மெல்லச் சிலிர்க்குதே
என்நெஞ்சப் பூக்கூட அதற்காய் தவிக்குதே
கண்ணே சொல்லிப்போ இல்லை கொல்லிப்போ
நீ இன்றி வாழ்ந்தாலே சொர்க்கம் நரகம்
என்னோடு நீ வேண்டும் அன்பே அது வரம்

Share Button
 
Lyrics

9. Anjala 2012
SujeethG  

The Last Halt

Will this, plight ever change now
Will my, life never see the light above
Will my, fight never cease then
Will my, night not rise to see the sun
Wont the snow melt will it be the last halt

.

வாழ்க்கை வெளிக்கவென வழி தேடிச் திரிஞ்சம்
இயலாமல் முடியாமல் நாட்ட விட்டே பறந்தம்
இடையில் நடு வழியில் காடு நாடா நடந்தம்
வந்தடைஞ்ச நாட்டிலயும் அகதியா அலைஞ்சம்

புலத்தைப் பிரிஞ்சு வந்தாள் நிம்மதி இல்லை
புதிய உலகம் இது பழக்கமும் இல்லை
புதிர்கள் தொடர்ந்து வர தினம் தினம் தொல்லை
புலரும் பொழுது என்றும் நம்பிக்கை இல்லை

வாழ்வு சிறக்குமென பறந்து வந்தாச்சு
அக்கரைக் கிக்கரை பச்சை யென்றாச்சு
மிச்சமாய் இருந்திட்ட அமைதியும் போச்சு
பட்சமாய் பழகுவோர் இல்லை போலாச்சு

மனசு வெம்பியது இதயம் விம்மியது
கேள்வி நிரம்பியது துன்பம் துரத்தியது
அனைத்தும் அரட்டியது தனிமை வாட்டியது
உலகம் மரட்டியது வாழ்க்கை இருட்டியது

.

Will this, plight ever change now
Will my, life never see the light above
Will my, fight never cease then
Will my, night not rise to see the sun
Wont the snow melt will it be the last halt

கனவு அனைவருக்கும் நனவாவ தில்லை
அதுக்கு பலருமிங்க விதி விலக்கில்லை
பகட்டு வாழ்க்கை இங்கு வழக்கமாய் ஆச்சு
மொத்தமா வாழ்க்கையே சொத்தியா போச்சு

தினசரி ஓட்டமே பலர்க்குத் திண்டாட்டம்
தலை போற கடனென அழும் பெரும் கூட்டம்
ஊருக்கும் உறவுக்கும் மறைப்பது என்ன
பேருக்கு படம் காட்டிப் பிழைப்பது என்ன

காசு மரக்கதைகள் வெறும் பொய்ப் பேச்சு
சொகுசு வாழ்க்கை இங்கு சிலருக்கே ஆச்சு
வாழ்வு பலருக் கிங்கு சுமை வேறில்ல
சத்தியம் சொல்லுறன் மெய் வேறில்லை

ஒப்பிட்டே ஒப்பிட்டே பாழ் பட்டுப்போறம்
கண்கட்டி கடன்பட்டு லோல் பட்டுப்போறம்
உருப்பட்ட வழியதை விலத்திட்டுப் போறம்
உலகத்தை ஏமாத்தி ஏமாந்து போறம்

Share Button
 
Lyrics

10. The Last Halt 2016
SujeethG feat Sofia Rahul  

Sinthai Theli

சிந்தை தெளி சிறுமையை அழி – உன்
சித்தம் செதுக்க நீதான் உளி
அண்ட வெளி ஆயிரம் வழி – எக்
கண்டம் கடக்க நீயே ஒளி
எண்ணித் துணி எழுவதே பணி – உன்
சுற்றம் செழிக்க நீதான் இனி
வெற்றிக்கனி கொள்வதே தனி – நீ
திட்டம் வகுத்து சேர்வாய் அணி
உன்னை ஒருத்தன் பொய்ப்பிப்பதா – உன்
தலைக்குள் புகுந்துனை நடப்பிப்பதா
உண்மை உணர்ந்து புறப்பட்டு வா – உனை
முற்றாய் முழுதாய் புடமிட்டு வா

.

வைச்சா குடும்பி சிரைச்சா மொட்டை
நிண்டு நிதானிப்பத ஏன்தான் நீ விட்ட
உணர்ச்சிப்பேச்சு வார்த்தைவாள் வீச்சு
உருவேறி எல்லாம் உருக்குலைஞ்சு போச்சு
போதை தாலைக்கேறி போக்கு மாறியாச்சு
மாய வார்த்தைக்கெல்லாம் யாவும் பலியாச்சு
பாதை தெளிவில்லை பார்வை சரியில்ல
நின்று சுத்திப் பாக்க நேரம்கூட இல்ல
பொறிமுறையோட அவன் பொறி வைக்கிறான்
நீ எலி போல ஓடிப்போயே தலை வைக்கிறாய்
உன் நிலத்து நீருறிஞ்சி கோலா விக்கிறான்
அட அதை வாங்கி ஏமாந்து நீ கூலா நிக்கிறாய்
வெள்ளையரின் ஆட்சியென சொல்லிப்பயனில்லை
இலாப வெறிக்கூட்டத்துக்கு தோல் நிறங்கள் இல்லை
கிடைச்சத வைச்சு அவர் அடிப்பாரே கொள்ளை – உன்தன்
இனத்தவர் ஆயிடினும் விதிவிலக்கில்லை
கண்டம் விட்டு கண்டம் பெரும் கம்பனிகள் பாயும் அது
கண்ட இடமெல்லாம் பெரு இலாப வேட்டை ஆடும்
எவ்விடமும் கொள்ளை வளருது தொல்லை
விழிப்பாய் நீ மெல்ல நேரமதிகமில்லை

.

விளைநிலம் போச்சு விவசாயம் போச்சு
சொந்தக்காலில் நிண்டவனை முடமாக்கியாச்சு
சிறுதொழில் போச்சு சுய தொழில் போச்சு
சொந்தக்கட வைச்சவன கூலிக்கமத்தியாச்சு
அங்குமிங்கும் கட்டடங்கள் வந்து குவியுது
புத்தம் புது பெருந்தெருக்கள் நீண்டு விரியுது
இவை மட்டும் சமூகத்தின் வளர்ச்சிகள் இல்லை
தின்ன வழியற்றவனை பார்க்க யாரும் இல்லை
அடிப்படை பிரச்சனை ஆயிரம் இருக்குது
அணுகாமல் அப்படியே மறைச்சுக் கிடக்குது
கண்ணுக்குக் குளிர்ச்சியெல்லாம் வெறும் சுத்துமாத்து
துருவித் தோண்டிப் பாத்தா மாட்டுமே கூத்து
மாயை உலகத்தை நீ நம்பி வாழுறாய்
நடிக்கிறவனப் போய் தலைவனாக்கிறாய்
உணர்சிபொங்கி ஒரு வெறி நாயாகி நீ
அவனின் வளர்ச்சிக்காய் அழிந்து போகிறாய்
இந்த தலைமை இனித் தேவையில்லை
தூக்கியெறிந்து விடு தொலையும் தொல்லை
தோழனாகி நீ தோள் கொடுத் தோடு
உரிமைக்காக நீ சேர்ந்து களமாடு

Share Button
 
Lyrics

11. Sinthai Theli 2017
SujeethG  

Share Button
 

 
 
previous next
X