Singles – 2005

Select album to play

previous next
 

Konjam Nil

கொஞ்சம்  கொஞ்சம்  நில்
என் நெஞ்சம் சொல்லும்  சொல்
மீண்டும் நீயும்  செல்
வாழ்வை வெல் வெல் வெல்

இதுவா வாழ்க்கை நான் வாழ்கின்ற வாழ்க்கை
உயிரை உதிர்க்கின்ற வலியான வாழ்க்கை
வாழ்வை வெல்வதா வாழ்வென்னை வெல்லுமா
விடைதெரியாமல் நான் அலைகின்ற வாழ்க்கை

ஈழத்தில் பிறந்தேன் இழுபட்டு வந்தேன்
ஆண்டுகள் ஓடின எனைவிட்டு ஓடின
வாழ்வில் சுவையில்லை வாழப்பிடிக்கல்லை
வாழ்வை முடிக்கவும் எனக்கோ துணிவில்லை
இருதயம் அழுதது, கவிதையாய் மலர்ந்தது,
கவலையும் குறைந்தது,  புதுவழி பிறந்தது,
தொடர்புகள் கிடைத்தது  தொலைக்காட்சி அழைத்தது,
வானோலி அழைத்தது, நிகழ்ச்சிகள் நடந்தது,
நினைவிலே நித்தம் நித்தம் இனிதாய் இருக்குது.
இருந்தும் பயனில்லை கைகளில் பணமில்லை
ஏது செய்வதென்று எனக்குத் தெரியவில்லை
வாழ்வினை வெல்வதா வாழ்வென்னை வெல்லுமா

கொஞ்சம்  கொஞ்சம்  நில் . . .

ச… ரி… க- ம- ப  கொஞ்சமும் சங்கீதம் தெரியாதப்பா
ச… னி… த- ப- ம   பாட்டு எழுத கொஞ்சம் தெரியுமப்பா

பாடல் எழுதிடப்  பலபேர் கேட்டனர்
எழுதிக் கொடுத்திட பட்டம் மட்டும் சூட்டினர்
பட்டத்தைவைத்து நான் என்னத்தை செய்வது
இசைத்தட்டு வெளியிட எடுத்தேன் நான் முடிவது
லண்டனில் ஆயிரம் கலைஞர்கள் இருக்கிறார்
தேடிப்போய் நான் ஒருவரைப் பிடிக்கிறன்
பாட்டு எழுதிறன் பாட்டுப் படிக்கிறன்
சந்தோஷின் சந்தோஷ சங்கீத மழையில
ஆல்பம் முடிக்கிறன் வெளியிடத் துடிக்கிறன்
வாரம் இரண்டில் பாட்டொன்றை வெளியிட
கதவு திறந்தது நம்பிக்கை பிறக்குது
உன் கையில் உன் வாழ்க்கை உண்மையும் துலங்குது

Share Button
 
Lyrics

1. Konjam Nil
SujeethG  

Icewarya 07

இச்சித்து வந்தேன் இரு கனம் உனை
இச்சுக்கு வந்தேன் நானும் உனை உனை

உன் காந்த விழி எனில் அலைகள் வீசுது
சிவந்த கன்னம் பாக்க எனக்குப் பசிக்குதுன்
உன்னுதடு அசைய எனக்கு வெறிக்குது
மச்சமது எனைச் சுண்டி இழுக்குது
நீண்டமுடி கலைக்க ஊரே இருட்டுது
இமயமலை உன்தன் அன்பில் தோக்குது
மின்னலிடை நெளிய எனக்குச் சுழுக்குது
அன்னநடை பாக்க வாழ்க்கை வெறுக்குது

ஐஸ்வர்யா நீ வருவாயா
கிஸ்சொண்னு பிரியா தருவாயா

ஐசு உன்னை எண்ண ஐசும் உருகுது
நைசுபிகரு என்று மனசும் நெகிழுது
காய்சு காய்சு எண்ணு திரியும் கேள்சுக்கு
ஐசு பாத்து உன்னை ஜெலசும் பிடிக்குது

இடையின் இடைவெளியால் உறுத்திறியே – உன்
விழியால் அம்பெனக்கு  எய்கிறியே – என்
அருகில் நெருங்கி வர மறுக்கிறியே – நான்
நெருங்கி வர முகம் நீ திருப்பிறியே

ஐஸ்வர்யா நீ வருவாயா
கிஸ்சொண்னு பிரியா தருவாயா
இச்சித்து வந்தேன்

அடியே அவனால் எனக்குத் தூக்கம் போச்சுது
தனியே சுவரைப் பார்த்தும் பேச்சு நடக்குது
அக்கம் பக்கம் கூடி நின்று பேசுது
அந்தப் பெடியன் யாரோ இன்றும் தேடுது
என்னை உந்தன் மனதில் போட்டு மறைக்கிறாய்
மனதை ஏதொ போட்டு இழுத்துப் பூட்டிறாய்
மனதும் கேட்க மறுத்து வெளியில் விழுகுது
உண்மை நிலையை தெருவில் போட்டு உடைக்குது

ஐஸ்வர்யா நீ வருவாயா
கிஸ்சொண்னு பிரியா தருவாயா

ஐசு ஒரு போதும் மெய் அழியாது
அதிலும் காதலென்றால் பொய் வாழாது
கடையில் வாங்கும் வைர நகைகள் போல
காதல் பூட்டி வைக்கப் படக்கூடாது

குளிரும் ஐசாக இருக்கிறியே – ஆனால்
நெருப்பை நெஞ்சுக்குள் மறைக்கிறியே – நீ
தொடர்ந்தும் பிரியத்தை மறைக்காதே – பின்னர்
அழியும் எரிமலைபோல் வெடிக்காதே

ஐஸ்வர்யா நீ வருவாயா
கிஸ்சொண்னு பிரியா தருவாயா
இச்சித்து வந்தேன்

விழிகள் ரெண்டும் இடையில் வந்து மோதுது
மனங்கள் ரெண்டும் பக்கம் நின்று பேசுது
அடுத்ததென்ன என்ன என்று கேட்கிது
ஆசை கொண்டு கைகள் நீட்டி அழைக்குது
மனங்கள் ரெண்டும் எப்போ சேர்ந்துபோச்சுது
மெய்கள் ரெண்டும் தள்ளி நின்று பாக்குது
இனியும் நாமும் தூர நின்று பார்ப்பதா
நாங்கள் யாரோ போல நின்று வெறிப்பதா

ஐஸ்வர்யா நீ வருவாயா
கிஸ்சொண்னு பிரியா தருவாயா

ஐசு நீ காட்டும் பஸ்ஸை நிறுத்து
அருகில் ஆடுகின்ற மிஸ்சை விலத்து
வலமாய் காதல் பஸ்சை நிறுத்து
ஏறிக்கொள் என்தன் பெயரைக் கொடுத்து

காதல் பஸ் உனக்காய் காத்திருக்கு – உனை
வருக வருகவென அழைத்திருக்கு – நீ
காதல் வடிவாகி வரவேண்டும் – என்
கையில் உன் கைகள் தரவேண்டும்

Share Button
 
Lyrics

2. Icewarya
SujeethG  

Un Kaathal

பெண்ணே உன் காதல்தனைச் சொல்வாயா – இல்லை
போடா நீ வேண்டாமென்று தள்வாயா – நான்
காதலால் வெந்து வெந்து துடிக்கிறேன் – நீ
இல்லாமல் போவாய் என்று தவிக்கிறேன் – …ம்
காதல்செய் காதல் என்று சொன்னார்கள் – வலி
தருமே காதல் என்றா சொன்னார்கள் – சரி
காதலே வலியதைத் தந்தாலும் – அது
உன்னாலே வந்ததினால் ரசிக்கிறேன் – பெண்ணே

காதல் வரும் ஒருவன் வாழ்வைக் கிள்ளும் – அவன்
உள்ளம் அவள் உள்ளத்தைத் தேடி வரும் – வந்து
காதல் சொல்லும் அவள் காதில் சொல்லும் – பதில்
வரும்வரை அது லோல்கள் தரும் – …ம்

அனுபவத்தில் யாரோ சொன்னார்கள் – காதல்
வந்ததும் காலடியில் விழுந்தார்கள் – நான்
காதலைச் சொல்லி விட்டுத் துடிக்கிறேன் – உன்
பதிலை எதிர்பார்த்துத் தவிக்கிறேன் – …ம்

காதலை நீ சொல்லவா – என்
அன்பே உயிரே சொல்லவா
நெஞ்சினில் உன் காதலை – நீ
அன்பே என்னிடம் சொல்லவா

இரு கைகள் தட்டாவிட்டால்  ஒலிக்காது – நீ
தனியாக வாழ்வதென்றால் ருசிக்காது – மழை
மண்ணோடு சேர அது தடுக்காது – மண்
மழை இன்றி வாழ்வதென்றால் செழிப்பேது – என்தன்
காதலும் மழைபோல பொழியுது – உன்
மனமேதோ மண்ணாக மறுக்குது – அன்பே
மனுதந்த அடியவனை மிதிக்காதே – என்தன்
இதயத்தை அரிவாள் கொண்டு அறுக்காதே – இந்த

காதல் இல்லை என்றால் பூமி இல்லை – இங்கு
வாழும் உயிர்களுக்குள் ஜீவன் இல்லை – ஆக
காதல் கொண்டே செய்த உலகம் இது – இதை
உணராமல் உன் வாழ்வில் உதயம் ஏது

காதலின் அருமை என்ன புரியாதோ – நீ
பூலோகம் சேராத வெளியாளோ – உயிரே
உன்னோடு காதல் இல்லை சொல்லிவிடு – பின்னே
உன் லோகம் என்னைக் கொண்டு சேர்த்துவிடு


உன்னையே எண்ணி எண்ணிக் துடிக்கிறேன் – நான்
பதிலை எதிர்பார்த்துக் கிடக்கிறேன் – நீ
காதலை என்னில் வந்து சொல் கண்ணே – அடி
உன்னோடு வாழ வரம் தா பெண்ணே – இந்தக்
காதலே வாழ்வுதனை முழுதாக்கும் – காதல்
சொர்க்கத்தை மண்ணில் தானே உருவாக்கும் – அன்பே
என் காதல் எப்பொழுதும் தீராது – அது
உயிர் என்னைப் பிரிந்தாலும் சாகாது – என்

காதல் வாழும் அது என்றும் வாழும்  – இந்த
உலகமே அழிந்தாலும் காதல் வாழும் – நான்
மடிந்தால் என் காதல் உன்னிடம் வந்து – உன்
அருகே தனியாக என்றும் வாழும்

என் காதல் சொல்லிச் சொல்லிப் புரியாதோ – நான்
சாகாமல் என்றுமே தெரியாதோ – உனக்கு
கல்நெஞ்சக்காரி என்ற பேர் வேண்டாம் – என்னை
கொன்றவள் இவள் என்ற பழி வேண்டாம்

Share Button
 
Lyrics

3. Un Kathal
SujeethG  

Varuvaan

வருவான் அவன் வருவான் புல்லுப் பனியா நிண்டு உருகுவான்
துளியா இடங்கொடுத்தா அவன் கொடிய நாட்டி எனை ஆளுவான்
ஆம்பள ஒருவன் வலைய விரிச்சா முடிஞ்சாத் தலையில துண்டப்போடு

போகும் நாள்வரை பொண்ணுடன் வாழப் புறப்பட்ட பொண்ணு இவளப் பாரு
ஆம்பள உள்ளம் உண்மைக் காதல் சொல்லத் துடிப்பவன் என்னப் பாரு

வருவான் அவன் வருவான் புல்லுப் பனியா அவன் உருகுவான்
துளியாத இடங்கொடுத்தா அவன் கொடிய நாட்டி எனை ஆளுவான்

வருவேன் நான் வருவேன் புல்லுப் பனிபோல் நிண்டு உருகுவேன்
துளியா தலை அசைச்சா எங் கோட்ட ராணியா ஆக்குவன்

 

ஒருமுறை விழியால் அளந்தாப் போச்சு மூச்சு முட்டித் திணறுமே பேச்சு
ஆம்பள உனக்குத் தெரியலயா

சின்னஞ் சிறு வயதில பன்னீர் உயிர் பாக்கயில தவறிய உன்னுயிர பதிமூணா சேக்கயில
உள்ளமது கண்ட இன்பம் உனக்குத் தெரியுமா  என் சின்னக்கால நினைவுகள் உனக்குப் புரியுமா

அறுவடை வளமா வேணுமிண்ணா உரமா உருமும் போடணுமா
இதுபோல் ஆயிரம் கதை சொன்ன மறுமுறை ஒருமுறை பொய் சொன்னா

(அடட) இவதான் பாரதி புதுப்பொண்ணு தெரியுமெ மனசில இருக்கண்ணு
நிஜமாய் நடிக்கிற உயிர்ப்பொண்ணு விருதுகள் தரணும் உனக்கெண்ணு

 

மழை நீர் வருமென பலமுறை பாத்து தனியே தனியே தவிக்குது இவ்விள நாத்து
மனசில மழையது பொழியாதோ
உன்மேல் காதலாய் வந்தது நேத்து பல நூற்றாண்டுகள் ஒடியா போட்டு
நிமிசங்கள் வருசங்கள் ஆகிறதோ

பள்ளிக்குட வாசலில கள்ளிச்செடி மீதினில உன்தன் சின்னப் பெயரோடு எம்பெயரைப் பாக்கயில
பறந்தது வானில் நெஞ்சம் உனக்குத் தெரியுமா பொம்பிள நான் அக்கம் பக்கம் சொல்லிட முடியுமா

அடியே அழகிய பூச்செண்டு எனக்குள்ள இனிக்கிற கற்கண்டு
உயிராய் இருக்கிறாய் எனக்கெண்டு தருவேன் என்னையே உனக்கெண்டு

உன்னையே தந்தாய் எனக்காக உயிரையே தருவேன் உனக்காக
வாழ்நாள் வரையில் சுகமாக வாழ்வோம் இன்பக் கடலாக

வருவேன் நான் வருவேன் புல்லுப் பனிபோல் நிண்டு உருகுவேன்
துளியா தலை அசைச்சா எங் கோட்ட ராணியா ஆக்குவன்

வருவே நீ வருவே புல்லுப் பனிபோல் நிண்டு உருகுவே
துளியா தலை அசைச்சா உங் கோட்ட ராணியா ஆக்குவே

Share Button
 
Lyrics

4. Varuvaan
SujeethG feat Judy  

Enthan Kanmani

என்தன் கண்மணி கண் கலங்குது
ஏன் என் காதலி யார் உன்னை நொந்தது
யார் உன்தன் நெஞ்சினில் காயம் தந்தது
யார் உன்னை இங்கு தீ தின்னச் சொல்வது

சீண்டும் உன்னைச் சீண்டும் இந்த பேர்கள்தன்னை தனியவெ சந்திப்பேன்
அன்பே அன்பே என்தன் அன்பே வரும் உந்தன் வாழ்வின் துயரமதைத் தீர்ப்பேன்
கண்ணே எழுந்திரு கண்ணீர் தொலைந்திரு
என்னை நம்பிடு என்னில் சேர்ந்திரு – என்றும்

அன்பே உனக்காய் வாழுகிறேன் வாழும் நாள்வரை காத்திடுவேன்
பூலோகத்தைப் பிரிந்தபின்னும் மேலோகத்தில் சேர்ந்திடுவேன்

என்தன் கண்மணி கண் கலங்குது . . . . .

இன்றும் இன்றும் என்றும் இனி உன்தன் வாழ்வில் தொடர்ந்துனையே வருவேன்
இங்கும் எங்கும் மீண்டும் மீண்டும் உன்தன் பக்கம் என்றும் உனக்கெனவே இருப்பேன்
கண்ணே எழுந்திரு கவலை மறந்திரு
என்மேல் சாய்ந்திரு தனிமை தொலைந்திரு – என்றும்

அன்பே உனக்காய் வாழுகிறேன் வாழும் நாள்வரை காத்திடுவேன்
பூலோகத்தைப் பிரிந்தபின்னும் மேலோகத்தில் சேர்ந்திடுவேன்

என்தன் கண்மணி கண் கலங்குது
ஏன் என் காதலி யார் உன்னை நொந்தது
யார் உன்தன் நெஞ்சினில் காயம் தந்தது
யார் உன்னை இங்கு தீ தின்னச் சொல்வது

என்தன் கண்மணி கண் கலங்குது . . . . .

வானதி என்னில் அன்பைப் பொழிந்தவள் நீ
காதலி என்தன் வாழ்வை நிறைத்தவள் நீ
தாயவள் எனக்குலகம் காட்டினாள்
யாவும் எனக்கவள் தானே ஊட்டினாள்
வாழும் வாழ்வெனக்கவள்தான் தந்தது
காணும் குணங்களும் அவளால் வந்தது
அன்புத் தாயை நான் உன்னில்க் காண்கிறேன்
எண்ணிப் பார்த்து நான் இன்னும் வியக்கிறேன்
காதலி உன்னைத் தீங்கு நெருங்காது
நெருங்கும் தீங்குகள் அடியோடு இருக்காது
வானதி இனி அழவேண்டி இருக்காது
அழும் காதலியைக் கண் கண்டால் பொறுக்காது
வானதி நீ என்தன் தாய்போல வந்தவள்
சேய்போல் நீ என்னைத் தலாட்டி நின்றவள்
காதலி என்னைத் தேடி நீ வந்தவள்
உயிரோடு உயிர் சேரும் தோழமை தந்தவள்
என்றுமே உன்னை நான் பூப்போலக் காப்பேன்
வாடாமல் என்னாளும் உன்னோடே இருப்பேன்
அன்பே நீ ஒருபொதும் கண்கள் கலங்காதே
ஆயுள்வரை நிப்பேன் கண்ணே மறவாதே

Share Button
 
Lyrics

5. Enthan Kanmani
SujeethG feat Bosco  

Vizhi mooda

விழி மூடி கதிரவனாக மனதோடு ஒளிர்வான்
முன்னே புன்னகை புரிவானே
அதிகாலைப் பனியதுவாக அடிநெஞ்சில் குளிர்வான்
உள்ளே உயிரோடு உறைவானே

உன்தன் விழியால் சிரித்திட வேண்டும்
உன்தன் மதியால் ஜெயித்திட வேண்டும்
உன்தன் உள்ளம் சேர்ந்திட வேண்டும்
ஈர் உடல் உயிர் போலே
உன்தன் இன்பம் பகிர்ந்திட வேண்டும்
உன்தன் துன்பம் சுமந்திடவேண்டும்
உன்னை என்னுள் சேர்த்திட வேண்டும்
கடலினில் மழை போலே

பாயும் ஒளி என்றும் நீயெனக்கு
காட்சி காணும் விழி என்றும் நானுனக்கு
வீணையடி பெண்ணே நீயெனக்கு அங்கு
மேவும் விரல் பெண்ணே நானுனக்கு
காதலடி அன்பே நீயெனக்கு ஈர்க்கும்
காந்தமடி எங்கும் நானுனக்கு
வெண்ணிலவாய்ப் பெண்ணே நீயெனக்கு
இங்கு மேவு கடலாக நானுனக்கு
தோயும் மதுவும் நீ
தூய சுடரும் நீ
பூணும் வடமும் நீ
ஞான ஒளியும் நீ
கண்ணின் மணியும் நீ
பேசும் பொருளும் நீ
கொள்ளை அழகும் நீ
என்றும் என்னுள் நீ

மெல்லிய ரேகை புன்னகை கொஞ்சம்
கட்டுடல் மேனி இளமையும் கொஞ்சம்
அன்பு பார்வை கண்ணிலே மிஞ்சும்
அன்பே உயிரே வார்த்தைகள் பஞ்சம்
உரிமைகள் பாயும் உறுமல்கள் கொஞ்சம்
உயிரின் உள்ளே உறவது மிஞ்சும்
அல்லிய ராணி மெல்லிய மேனி
குறும்புப் பேச்சுடன் அவன் வருவான்
சிட்டாய் சீறி சினுங்கிய போதும்
எட்டவே நின்று சிரித்திடுவான்
என்னைச் சீண்டும் அவனும் ஒருவகை
குறும்புகள் செய்யும் நவ யுக (கண்ணன்)

விழி மூடி கதிரவனாக மனதோடு ஒளிர்வான்
முன்னே புன்னகை புரிவானே
அதிகாலைப் பனியதுவாக அடிநெஞ்சில் குளிர்வான்
உள்ளே உயிரோடு உறைவானே

தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையிலே காத்திருக்கிறேன் கண்ணம்மா
பார்த்த இடமெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி செல்லம்மா
வார்த்தை தவறாதே கண்ணம்மா
மார்பு துடிக்கும் என் பொன்னம்மா
மேனி கொதிக்குமடி கண்ணம்மா
வெந்து வேகிடுவேன் வா.. வாம்மா

உன்தன் தோழில் சாய்திட வேண்டும்
உன்தன் நெஞ்சில் தூங்கிட வேண்டும்
உள்ளம் கையில் வாழ்ந்திட வேண்டும்

உயிரின் உயிராய் சேர்ந்திட வேண்டும்
தொடர்ந்தே சேர்ந்து இருந்திட வேண்டும்
என்றும் பிரியா ஒர் வரம் வேண்டும்
சேர்ந்தே வாழும் காலம் யாவும்
ஒவ்வொரு நாளும் இன்னிய நாள்
உன்தன் முன் கண் மூடவேண்டும்
அன்பே அதுவும் ஒரு திருநாள்
இப்படியெல்லாம் நிகழ்ந்திடவெனவே
தெய்வம் முன்னே நின்று கைகளை ஏந்திப் பின்

விழி மூடி கதிரவனாக மனதோடு ஒளிர்வான்
முன்னே புன்னகை புரிவானே
அதிகாலைப் பனியதுவாக அடிநெஞ்சில் குளிர்வான்
உள்ளே உயிரோடு உறைவானே

Share Button
 
Lyrics

6. Vzhili Mooda
SujeethG feat Gowry  

 

7. Iva Thaane
SujeethG  

 

8. Anbu Kaathali
SujeethG feat Judy  

Vidaisol

விடை சொல் கண்ணே சிறகா சிறையா
பதில் சொல் பெண்ணே வரமா வலியா

புயல் வந்து ஓய்ந்து போகும்
மழை வந்து காய்ந்து போகும்
எதுவேதான் வந்து போயினும் காதல் அழியாதே
புதிர்போடும் உன்தன் பெண்மை
புரியாதோ என்றும் உண்மை
பலியாக அடியே பெண்ணே என்னைக் கொல்லாதே
நதி சேரும் கடலின் மேலே
உருவாகும் துளியைப் போலே
அன்பே நான் உன்னைச் சேர
துடிதுடியாய் துடித்தேன் அழகே

வண்ணாத்திப் பூச்சி மேலே
சேர்ந்துள்ள ரேகைபோலே
அறியாத விதியை நானும்
எண்ணி எண்ணித் தவித்தேன் அழகே
அன்பே நீ தென்றல் போலே
விதிசொல்லும் ரேகை மேலே
உள்ளோடும் உண்மை தன்னை
சொன்னால் நீயும் பிழைப்பேன் அழகே

நில் நில் என்தன் அன்பே
நான் நான் உன்னைச் சேரும்
நாள் நாள் வருமா என்று

விடை சொல் கண்ணே சிறகா சிறையா
பதில் சொல் பெண்ணே வரமா வலியா

எதுவேதான் வந்துபோயினும்
எதுவேதான் சென்றுபோயினும்
அழியாத காதல் உன்மேல் அன்பே நில்லாதே
தலை சூடும் மல்லிப் பூவை
கலைப்பாளே வண்ணப் பாவை
அதுபோலே என்னை நீயும் கீழே தள்ளாதே

அழகான பூமியோடே
சேர்ந்தோடும் நிலவைப் போலே
உயிரே உன் உள்ளம் சேர
தவிதவியாய்;த் தவித்தேன் உயிரே

நீண்டோடும் வானத்தோடே
அளவில்லா விண்மீன் போலெ
புரியாத உன்தன் உள்ளம்
அறிய அறிய தவித்தேன் அழகே
அதிகாலை சூரியன் வந்து
ஒரு சேர்க்கும் ஒளியைப் போலே
தெளிவான அன்பைத் தந்தால்
அதனை நானும் ருசிப்பேன் அழகே

வா வா என்தன் அன்பே
நான் நான் உன்னைச் சேரும்
நாள் நாள் வருமா என்று

நடைபோடும் பெண்ணே புரியாத புதிர்தானா
விடைதன்னை நானும் அறிவேனா அறிவேனா.

Share Button
 
Lyrics

9. Vidaisol
SujeethG  

Orusila Pengalin

ஆட்டம் ஆட்டம் அங்கே பார் நீ ஊரெல்லாம் கொண்டாட்டம்
நோட்டம் நோட்டம் உன்மேல்தானே அந்தப் பெண் கண்ணோட்டம்
ஊரெல்லாம் கொண்டாட்டம் அதனால்தான் கண்ணோட்டம்

ஒருசில பெண்களின் மனசில ஆயிரம் விசயம் விசமாய் இருக்கு
அவளவு விசயமும் முழுசாச் சொல்லுவன் எல்லாம் தெரியுமெ எனக்கு
கண்களால் சிரிப்பதும் கைகளால் கதைப்பதும்
ஆளையும் அளந்திட்டு நல்லா நடிப்பதும்
நம்பிக்கை கொடுப்பதும் நைசாக் களர்வதும்
இவ்வளவும் செய்திட்டுத் தெரியா தெரியா

என்று சொல்லியே உயிரைக் கிள்ளியே அன்ன நடை நடந்து போவா
முகத்தில் பேயடிச்சு தடுக்கி விழுந்தடிச்சு அவளத் தேடி நீ போவா
ஊரைக்கூட்டி உன்னைத் தெரியாதென்று சொல்லி பிளேட்ட மாத்தத்தான் பாப்பா
நல்ல நேரம் பாத்து நீ குடுத்த  கீல்ஸ அவ தூக்கிக் காட்ட நீயும் பாப்பா

பேயும் இரங்குமாம் பெண்ணைக் கண்டா
பெண்ணிரங்களா எம்மைக் கண்டா
நீலம் இல்லாமல் வானம் உண்டா
ஜாலம் இல்லாமல் பெண்ணும் உண்டா

உன்தன் கண்களில் என்ன கவலையா
காணும் பெண்ணெலாம் மண்ணில் மாயையா
உன்தன் உயிரென்ன மீண்டு வருமா
இல்லை அவள் நினைவில் மாண்டு போகுமா

கண்ணாடி முன்னாடி ஐபுரோ பூசுவா
உன்னோட மூஞ்சில கரியப் பூசுவா
காதல் மெய்யென்று பொய்யப் பேசுவா – பின்
காதல் பொய்யென்று மெய்யப் பேசுவா

பெண்கள் என்பது இனிய சொர்க்கமா
பெண்கள் என்பது கொடிய நரகமா
இல்லை பெண்களோ நரக சொர்க்கமா
திரிசங்கு லோகம் தான் மிச்சமா.

Share Button
 
Lyrics

10. Orusila Pengalin
SujeethG  

 

11. Pirinthathu Sariya
SujeethG  

Payanam

பயணம் பயணம் வாழ்க்கை பயணம்
பயணம் முடியவே வருமாம் மரணம்
பயண இடையிலும் வரலாம் மரணம் – நீ
வரணும் வரணும் இதை அறிய வரணும் – நீ

வாழ்க்கை வாழவென ஏட்டிலே படித்தாய் – நீ
போகும் வழியிலே றோட்டிலே மறந்தாய் – நீ
சேரும் கூட்டத்தில் உன்னையே கரைத்தாய் நீ
இருக்கும் சுயத்தினை அடியோடு இழந்தாய் – நீ
இழந்து போனதை திருப்பிட மறுத்தாய் – நீ
இழக்கப் போவதை என்றுதான் நினைப்பாயோ – நீ

குழந்தைப் பருவத்தில் செல்லமாய் வளர்ந்தாய் – நீ
நாட்டு நடப்பாலே புலத்தினை பெயர்ந்தாய் – நீ
வந்து சேர்ந்ததும்  ஒழுங்காக இருந்தாய் – நீ
காலம் கடந்திட விலகியே போனாய் – நீ
மாளும் கூட்டத்தில் மலிவாக வாழ்ந்தாய் – நீ
சேர்ந்த கூட்டத்தில் உன்பங்கிற் கெடுத்தாய் – நீ
வாழும் வாழ்க்கையை கணக்கிட மறந்தாய் – நீ
வாழ்வின் பெறுமதி தேடிட மறந்தாய் – நீ

வாழ்க்கை பயணம் வா – வாழ்ந்து பார்க்கலாம்

நானும் யாரை இங்கு குறை சொல்ல வரவில்லை
நிறைவை சொல்லிவிட்டு போகவும் நான் போவதில்லை
வாழ்ந்தார் சாவார் என்று இருக்கவும் முடியவில்லை
எவ்வண்ணம் சொல்வதென்று தீர்க்கமாய் தெரியவில்லை
கூடவாய் பேசிவிட்டு அடிவாங்கும் எண்ணமில்லை
அதற்காய் வாய்மூடி இருக்கவும் முடியவில்லை
அண்ணன் தம்பி மார்க்கு அன்புவழி சொல்லாமல்
அடுத்தோர் இடம்போய் சொல்வதற்கு இஷ்டமில்லை

எனக்கு உனக்கென தனித்துவம் வேணுமடா
அவன்தான் மனிதன் ஊர் சொல்லவேணுமடா
பிறந்தார் இறந்தார் சொல்லுவதில் ஆசையில்லை
ஒன்றுமே செய்யாமல் மாளுவதில் லாபம் இல்லை
உனக்குள் தூங்கிடும் சுயத்தினை எழுப்பிடு
உருளும் உலகத்திற் குன் பங்கைக் கொடுத்திடு
எழும்பு எழும்புடா துடித்து நீ கிளம்பு
வளரும் தமிழுக்கு நீயு முதுகெலும்பு

Share Button
 
Lyrics

12. Payanam
SujeethG feat  

Share Button
 

 
 
previous next
X