← All lyrics

2025

Thamizh 3000

Listen / watch →

வீ ரமில் போய்ஸ் உலகெல்லாம் எங்கள் வோய் நல்லவனை வாழவைப்பம் வெட்டவந்தா வாலறுப்பம் தமிழர்தனைக் காக்க வருவோம் புறப்பட்டு நிறுத்த முடியாது யாரும் தடைபோட்டு சேர்ந்தே எழுவோம் நாம் எழுந்து கொடிகட்டு இனிமேல் கிடையாது தமிழில் விளையாட்டு தமிழைக் காப்போம் இது வாக்குறுதி இதை எண்ணி ஓடுமெங்கள் செங்குருதி தமிழ் என்றும் எங்களுக்குள் செம்பருத்தி இருந்தாலும் எம் வாழ்வின் செம்பருதி தமிழர்தனைக் காக்க வருவோம் புறப்பட்டு நிறுத்த முடியாது யாரும் தடைபோட்டு அண்ட சராசரம் நிண்ட தமிழன்டா எங்கு தோண்டினாலும் எங்கள் தடையம்டா நம்வீரம் பேசும் புறநானூறு என்றும் அழியாது அவன் வரலாறு கீழடி சொல்லுதே எங்கள் மரபடி மீண்டும் வேண்டுமா தோண்டு மறுபடி சந்தில் சிந்துபாடும் கூட்டம் இல்லடோய் சிந்து சமவெளிக்காரர் நாங்கடோய் உலகை உணர்ந்து உணவே மருந்து தமிழன் வாழ்ந்தான்டா அன்றே அறிந்து தான்(னி)யம் தொிந்து கலசம் அளந்து கோபுரம் வைத்தான்டா பருவம் அறிந்து வாணிபம் கட்டிடம் கல்வி வேளாண்மை யாவற்றிலும் கொண்டான் மேலான மேலாண்மை அண்ட சராசரமே தமிழன்டா எங்கு தேடினாலும்  நாங்களேதாண்டா யாதும் ஊரே நாம் யாவரும் கேளிர் பாடினார் கணியன் பூங்குன்றனார் உலகமயமாதல் எழுதினார் அதை சங்ககாலத்தில் எண்ணினார் இன்று நாம் என்னலாம் செய்யலாம் எனவாய் எண்ணலாம் என்று நீ வா யாவுமே மாறுது கடகடவென்று நாம் யாவரும் ஓடணும் அதன்படி நின்று என்றும் உயரவேணும் பல வழி கொண்டு தமிழில் எழுதவேண்டும் செய்மதி நின்று தமிழன் குரல் எங்கும் ஓங்கிட வேண்டும் தமிழின் பயன்பாடு எகிறிட வேண்டும் காட்டாறு எங்குமே தேங்காது தேங்கி நிற்பதேதும் தேறாது உலகம் மாறா திருக்காது - தம்பி உனக்காய் ஒருபோதும் நிக்காது யார்றா தமிழன் நீயா தமிழன் நான்தான் தமிழன் பச்சைத்தமிழன் _ டாய் பச்சைல வெள்ளைய கறுப்பில மஞ்சள்ல உலகெல்லாம் தமிழர்கள் வந்தாச்சு அந்த பண்டைய பார்வைகள் போயாச்சு புதிய வரைமுறைகள் என்றாச்சு குடி குலம் சாதி மதம் மரபணு இல்லை தமிழரின் அடையாளம் கடந்திட்டு எல்லை நிறங்கள் வேறெனினும் அவரும் தமிழரே தமிழாய் உணருபவர் எவரும் தமிழரே செக்குமாடா நீ பாச்சமாடா களத்தை பாத்து நீ பாஞ்சு ஆட்றா தூய்மை வாதம்... இனியும் ஆகாது இணைத்துப் போவதால் எல்லாம் சாகாது மலையேறிப்போனத மடியில கட்டாதே கிணத்து தவளை  கூட்டத்தோட தாழத