Varuvaan - SINGLES
பெண் -
வருவான் அவன் வருவான்
புல்லுப் பனியா
நிண்டு உருகுவான்
துளியா இடங்குடுத்தா அவன்
கொடிய நாட்டி எனை ஆளுவான்
கோடை வெயில் வரும் கோர
மழை வரும் விதை நெல்
இருந்தா விளையும் போடு
ஆம்பிள்ள ஒருவன்
வலைய விரிச்சா
முடிஞ்சாத் தலையில
துண்டப்போடு
ஆண் -
போகும் நாள்வரை
பெண்ணுடன் வாழப்
புறப்பட்ட பொம்பிள
இவவப் பாரு
ஆம்பள உள்ளம்
உண்மைக் காதல்
சொல்லத் துடிப்பவன்
என்னப் பாரு
பெண் -
வருவான் அவன்
வருவான் புல்லுப்
பனியா அவன் உருகுவான்
துளியா இடங்குடுத்தா
அவன் கொடிய நாட்டி
எனை ஆளுவான்
ஆண் -
வருவன் நான் வருவன் புல்லுப்
பனியபோல நிண்டு உருகுவன்
துளியா தலை அசைச்சா என்ட
கோட்ட ராணியா ஆக்குவன்
பெண்-
பூமேல் புதுசா வீசுது
காத்து மறுபடி போகும்
வரும் வழி பாத்து கருடா
நீயும் சவுக்கியமா
ஒருமுறை விழியால்
அளந்தாப் போச்சு
மூச்சு முட்டித்
திணறுமே பேச்சு
ஆம்பிள உனக்குத்
தெரியேலயா
ஆண் -
சின்னஞ் சிறு வயசில
பன்னீர் உயிர் பாக்கயில
தவறிய உன்னுயிர
பதிமூண்டாச் சேக்கயில
உள்ளமது கொண்ட
இன்பம் உனக்குத் தெரியுமா
என் சின்னக்கால நினைவுகள்
உனக்குப் புரியுமா
பெண் -
அறுவடை வளமா வேணுமிண்டா
உரமா உரமும் போடோணுமாம்
இதுபோல் ஆயிரம்
கதை சொன்னா
மறுமுறை ஒருமுறை
பொய் சொன்னா
ஆண் -
அடட இவதான் பாரதி
புதுப்பெண்ணாம்
தெரியுமே மனசில
இருக்கிறன் நான்
வடிவாய் நடிக்குது
கருவண்டு
விருதுகள் தரோணும்
உனக்கெண்டு
ஆண் -
மழை நீர் வருமென
பலமுறை பாத்து
தனியே தனியே
தவிக்குது இவ்விள நாத்து
மனசில மழையது
பொழியாதோ
உன்மேல் காதலாய்
வந்தது நேத்து
பல நூற்றாண்டுகள்
ஒடியா போட்டு
நிமிசங்கள் வருசங்கள்
ஆகிறதோ
பெண் -
பள்ளிக்குட வாசலில
கள்ளிச்செடி மீதினில
உன்தன் சின்னப் பெயரோடு
என்ர பெயர் பாக்கயில
பறந்தது வானில் நெஞ்சம்
உனக்குத் தெரியுமா
பொம்பிள நான் அக்கம்
பக்கம் சொல்லிட முடியுமா
ஆண் -
அடியே அழகிய பூச்செண்டு
எனக்குள்ள இனிக்கிற கற்கண்டு
உயிராய் இருக்கிறாய் எனக்கெண்டு
தருவேன் என்னையே உனக்கெண்டு
பெண் -
உன்னையே தந்தாய் எனக்காக
உயிரையே தருவேன் உனக்காக
வாழ்நாள் வரையில் சுகமாக
வாழ்வோம் இன்பக் கடலாக
ஆண் -
வருவேன் நான் வருவேன்
புல்லுப் பனிபோல் நிண்டு உருகுவேன்
துளியா தலை அசைச்சா
என்ட கோட்ட ராணியா ஆக்குவேன்
பெண் -
வருவாய் நீ வருவாய் புல்லுப்
பனியப்போல
நிண்டு உருகுவாய்
துளியா தலை அசைச்சா
உன்ர கோட்ட ராணியா ஆக்குவாய்