← All lyrics

2007

Pirapeduda - ADI MEL ADI

Listen / watch →

புறப்படுடா நீ புறப்படுடா - வரும் தடைகள் தகர்த்தெறிந்து புறப்படுடா பிறப்பெடுடா நீ பிறப்பெடுடா - இன்றே புதிய புதல்வனென்று பிறப்பெடுடா அடக்கி முடக்கி உன்னை அழித்தது யார் - உன்தன் சிந்தனைச் சிறகை ரெண்டாய் முறித்தது யார் இளமை அழகெடுத்து நடைபோடும் - உன்தன் அறிவை அடகு வைக்க நினைத்தது யார் புறப்படவேணும் நீ புறப்படவேணும் - இந்த புதிரை உடைக்க நீ புறப்பட வேணும் அடக்கி முடக்கி உன்னை அழித்தது நீ - உன் சிந்தனைச் சிறகை ரெண்டாய் முறித்தது நீ தின்னச்சோறு போதும் என்றும் அணியச் சட்டை போதும் பள்ளிக்கூடம் போவோம் இன்று வேண்டாம் ஏதும் மீதம் நாளை வரும் வேலை திருமணமுமோர் காலை - இந்த வட்டம் போதும் நீ கடந்திட வேணும் புரட்டவே வேணும் நீ சிந்தித்திட வேணும் புதிய புரட்சி உன்னுள் புரண்டிட வேணும் துடைக்கவே வேணும் நீ துடைக்கவே வேணும் உன்தன் தூசி பிடிச்ச மூளையை துடைக்கவே வேணும் புறப்படுடா நீ புறப்படுடா - வரும் தடைகள் தகர்த்தெறிந்து புறப்படுடா பிறப்பெடுடா நீ பிறப்பெடுடா - இன்றே புதிய புதல்வனென்று பிறப்பெடுடா ஒதுங்கியே போனாலே ஒழிந்து நீ போவாய் ஓங்கியே போனாலோ ஒளிர்ந்து நீ வாழ்;வாய் புறப்படுடா நீ புறப்படுடா இன்றே புதிய புதல்வனென்று பிறப்பெடுடா ஆவதும் பரத்துள்ளே அழிவதும் பரத்துள்ளே போவதும் பரத்துள்ளே புதுவதும் பரத்துள்ளே தேவரும் பரத்துள்ளே திசைகளும் பரத்துள்ளே யாவரும் பரத்துள்ளே நீயும் அப்பரத்துள்ளே உன்தன் வாழ்க்கை உன்தன் கையில் சொல்லிப் பயன் இல்லை அதன் உண்மைத் தன்மை உணர்ந்தாலே காண்பாய் இன்ப எல்லை ஊருலக வழக்கத்தில் வாழத் தேவையில்லை - நீ அடங்கியே போனால் என்றும் உண்மை வழி இல்லை காசு பணம் என்பவற்றால் நிம்மதி பிறக்காதே வைத்திருக்கும் சொத்துக்களும் அதனைக் கொடுக்காதே உனக்காய் நீ வாழு தடைக்குத் தடைபோடு - ஒருநாள் தனையேனும் மெய்யாய் நீ வாழு - என்ன இவன் பிதற்றுறான் என நீ நினைக்கின்றாய் உண்மை வாழ்க்கை என்று உண்டு அதனை மறக்கின்றாய் உனக்குள் பிறக்கின்ற உனக்கான வாழ்க்கை நிம்மதி தரும் வாழ்க்கை அதுவே நிஜ வாழ்க்கை காசு பணம் என்பவற்றால் நிம்மதி பிறக்காது வைத்திருக்கும் சொத்துக்களும் அதனைக் கொடுக்காது நிம்மதி தரும் வாழ்க்கை அதுவே நிஜ வாழ்க்கை மீதம் பொய் வாழ்க்கை வேஷம் அந்த வாழ்க்கை புறப்படுடா நீ புறப்படுடா... உன்னிலே இருக்குமொன்றை நீயறியவில்லை உன்னிலே இருக்குமதை நீயறிந்து கொண்ட பின் உன்னிலே இருந்திருந்து நீயறிந்து கொள்வாயோ நீயாய் இருந்ததெங்கே அபிமானித்தது எங்கே வானாள மண்ணாள வாஞ்சை அது எங்கே ஞானகுரு தேசிகரெங்கே சிவசிவா முக்தியெங்கே பேசிடத்தான் வாயும் எங்கே சாவில் வரும் கேள்வி அங்கே புறப்படுடா நீ புறப்படுடா ...