← All lyrics

2007

Adi Mel Adi - ADI MEL ADI

Listen / watch →

அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய் உருப்பெற்று தெளிவாய் நடைபோடு எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு I had enough with the society இந்த சமுதாயம் என்றும் தரும் காயம் வாழ்ந்தா அது வெறுக்கும் தாழ்ந்தா ஏறி மிதிக்கும் அது ஆட்டு மந்தை சேர்ந்து கூவும் சந்தை தனிமனித கருத்து எத்தனை பேருக் கிருக்கு ஊர் சொன்னா சரி பிழை சொன்னா பிழை உருக்குனக்குப் பயம் கிடைச்சதென்ன நயம் உனக்கமைதி போகும் தொல்லை குடி புகும் நிம்மதி இனி இல்லை இன்னுமா விளங்கேல்லை இந்த சமுதாயம் என்றும் தரும் காயம் வாழ்ந்தா அது வெறுக்கும் தாழ்ந்தா ஏறி மிதிக்கும் அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய் உருப்பெற்று தெளிவாய் நடைபோடு எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு சேர்ந்து வாழும் போது அவர் சிரிக்கிறார் மேலே போக எண்ணக் குழி பறிக்கிறார் நல்லோர் இவரா நய வஞ்சர் இவரா தீயில் வெந்த பின்பும் பினிக்ஸ் பறக்குமே சிலிர்ப்புடன் உள்ளுணர்வு பிறக்குமே எங்கே வந்து பார் என்னைக் கீழே தள்ளிப் பார் வந்து தள்ளிப் பார் கொள்ளி வைத்துப்பார் வாழ்வினை வாழுவேன் வாழ்வினில் வெல்லுவேன் அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய் உருப்பெற்று தெளிவாய் நடைபோடு எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு என் வார்த்தை பிழையாது - பேர் பலத்தில் வளையாது நான் சொல்லி விட்டே போவேன் உன் தோளைத் தட்டிப்போவேன் வாழ்வின் அடி மட்டம் நான் கண்ட பின் இக் கட்டம் வந்து நின்றே சொல்வேன் - இம் மாயைதனைக் கொல்வேன் குள்ள நரிக் கூட்டம் அது என்றும் உன்னில் நோட்டம் இங்கு வாழ்ந்து நீயும் காட்டு அதைத் தூர நீயும் ஓட்டு வாழ்ந்து காட்டி விடு ஊரின் வாய்கள் மூடிவிடு நிலம் கடல் வானம் எங்கும் நிம்மதியைக் காணு நான் சொல்லி விட்டே போவேன் உன் தோளைத் தட்டிப்போவேன்