Vaalalaam - ADI MEL ADI
வாழலாம் வாழ நீ
தடையேதும் இல்லை
பறந்திடு பறவைபோல்
வானமே எல்லை
அருவியாய் ஆகிடுவோம்
இயற்கையாய் மாறிடுவோம்
மழையும் வரும் புயலும் வரும்
எதுவும் வரும் உணர்ந்தே
அதனுடன் சேர்ந்துவிடு
நீர்க்குமிழி வாழ்க்கையது
விட்டால் உடைந்து போகும்
வந்து விழும் மின்னல் போல
ஈற்றில் மறைந்து பொகும்
நாளைவரை காற்றிருக்கும்
நீயிங்கிருப்பாயோ
இவ்வுண்மைதனை அறிந்தும்
பின் வாழ மறுப்பாயோ
ஓடியோடி வாழ்ந்து விட்டு
நாளை மடியாதே - என்றும்
யந்திரமாய் போவதினால்
பயன் கிடையாதே
வாழ எங்கும் தடையில்லை
வாழ்க்கையை நீ வாழு - இங்கு
வாழும் வழி அறிந்து நீ
பிறந்து நீ வாழு
வாழ்வினை அறிந்துவிடு
எழுதிய விதியினைத் தெரிந்துவிடு
இன்பம் வரும்
துன்பம் வரும்
ஆசை களைந்தால் கலைந்துவிடும்
நியதியைப் புரிந்துவிடு
அதனுடன் அதன்படி நடந்துவிடு
இன்பம் இல்லை துன்பம் இல்லை
இரண்டும் இல்லையேல் தொல்லை இல்லை
உணர்ந்து விடு
உறைந்து விடு
அதோ இதோ என்று சொல்லி
ஆசை வந்துசேரும் - உடன்
அங்கே இங்கே என்றபடி
உள்ளம் அலை மோதும்
ஓடியாடித் தேடி விட ஆசை
நிறைவேறும் - உள்ளம்
கொஞ்சம் இளைப்பாறும்
பின்னர் மறுபடி தேடும் - புது
ஆசை துளிர் விடும்.
ஆசை கொண்ட மனிதருக்கிங்கே
நிம்மதி என்றும் இல்லை - பேர்
ஆசை கொல்ல மறுக்கும் பேர்க்கு
வாழும் நாள்வரை தொல்லை
நிம்மதியோடு வாழவேண்டுமா
கடையில கிடைக்குமா வில்லை
இல்லை
ஆசை களைந்து நீ
வாழ முடிந்திட்டால்
வாழ்வில் தொல்லை
இனி இல்லை.