Yaarum Pesa - ADI MEL ADI
யாரும் பேசவேண்டாம்
காற்றே வீசவேண்டாம்
சொல்லவென தூண்டும்
காதல் சொல்ல வேண்டும்
என்னவன் இல்லயே
பொன்மணி வாடுறேன்
கவிகளை எழுதிட
வரிகளைத் தேடுறேன்
காதல் சொல்வாயோ- நீ
விலகிச்செல்வாயோ
என் உயிர் சிறை
கொண்ட கண்ணா
நீயென் உயரெனச் சொன்னால்
அன்பே இன்பம் காணுவேன்
இல்லைசொன்னால்
என்ன நான் செய்வேன்
உன்னை நான்
சேர்ந்திட வேண்டும்
உள்ளத்துள் தாங்கிட வேண்டும்
என்னாளும் உயிரோடுயிராய்
வாழ்ந்திட வேண்டும்
என்றும் இரவு பகலுமாய்
உயிர் தரும் ஒளியே
இருளில் என்னை நீ தள்ளாதே
வானவில் எடுப்பேன்
காதல்வில் தொடுப்பேன்
தேவதையாய் இருந்தால்
கர்வம் களைந்தேன்
கால்களில் வீழ்ந்தேன்
வேறென்ன செய்வேன் நான்
என் உயிர் சிறை
கொண்ட கண்ணா
நீயென் உயரெனச் சொன்னா
அன்பே இன்பம் காணுவேன்
இல்லை சொன்னால்
என்ன நான் செய்வேன்
மெதுவாகச் பேசிடவேண்டும்
மெய்யாகச் சிரித்திடவேண்டும்
இளங்காலைப் பனியதுபோல்
நாம் உருகிடவேண்டும்
என்றும் நடக்கும் நிலைக்கு
மென வாழ்கிறேன்
உயிரே மனதில் மகுடி நீ ஊதாதே
உனைப்போல் ஒருவனை
உலகினில் படைப்பேன்
பிரம்மன் கூட இருந்தால்
உண்மையில் உயிரே
உனக்கென உறைந்தேன் எ
ன்னிலை தனை நீ பார்
என் உயிர் சிறை
கொண்ட கண்ணா...
யாரும் பேசவேண்டாம்
காற்றும் வீசவேண்டாம்
மூச்சுக் காற்றே நீயும்
கொஞ்ச நேரம் வேண்டாம்
செம்மொழியாள் அந்தச்
சேதி சொல்லிப்போனாள்
கோலவிழி கொண்டு
என்னைக் கிள்ளிப்போனாள்
நீதான் என் உயிரென்று
காதல் செய்யச் சொன்னாள்
நீங்கிச் சென்றால் உலகை
நீங்கிச் செல்வேன் என்றாள்
முட்டாள்ப்பெண் உன்னை
நான் விட்டால் என்ன செய்வேன்
பெற்றோர் சொல் உற்றார்
சொல் கேட்டா காதல் செய்தேன்
பதினெட்டு வய(து) தொட்டு
உள்ளம் புரள்பட்டு
மனம்விட்டு இளமொட்டு
காதல் வசப்பட்டு
அரும்மொட்டு வெண்பட்டு
எல்லாம்நீ என் சிட்டுன்
நிழல் பட்ட இடம் தொட்டு
வருவேன் தொடர்ந்திட்டு
நீங்கிச்சென்றால் உலகை
நீங்கிச்செல்வேன் என்றாள்
முட்டாள்ப்பெண் அவளை
நான் விட்டால் என்ன செய்வேன்
பெற்றோர் சொல் உற்றார்
சொல் கேட்டா காதல் செய்தேன்
முட்டாள்ப்பெண் உன்னை
நான் விட்டால் என்ன செய்வேன்