← All lyrics

2011

Kalai - RAAVANNAN

அடங்கமாட்டம் ஒடுங்கமாட்டம் அரங்கமாட்டம் (நாங்க) நொருங்கமாட்டம் பொறுத்துப் பயனில்லை சிலிர்க்குது புலி விலைக்கு கலைபேசும் நரிகளை அழி அடங்கி காத்திருந்து ஆவனா பலி - நான் இயற்கை பணித்து வைத்த கூரிய உளி சொல்லிசை விற்பன்னன் சொல்லால் உனை விற்பன் நான் மெய்யரைக் காப்பேன் நான் பொய்யர்க் கென்றும் காலன் நான் நல்லோர்க்கு உதவு நரிகளா உழக்கு நல்லத கெட்டதை சரிபாத்துன் வளங்களைக் காப்பாத்து நான் வர்றண்டா - எனுள் அடிபட்டு, உடைபட்டு முடிவுற்று, உயிருற்று உருப்பெற்று, வர்றண்டா வர்றண்டா, இங்கு வர்றண்டா உன்னை உருக்கிட உலுக்கிட இசை கொண்டு தர்றண்டா பாரெல்லாம் நின்று வீசும் இன்னிசைக்கு எல்லை இல்லை யாரோடும் தொட்டுப்பேசும் மெய்யிசைக்கு பேதம் இல்லை யாழோடு பாரை வெல்ல பொய்விலாசம் தேவையில்லை வர்றண்டா, வர்றண்டா இசை கொண்டு தர்றண்டா மருந்துக்கும் சுவையில்லா விருந்து என்ன பயன் துரும்புக்கும் திணிவில்லா இரும்பு என்ன பயன் கருவற்றுப் பொழிகின்ற சொல்லில் என்ன பயன் உயிரற்று வரைகின்ற கலையில் என்ன பயன் கணினிக்குள் கலைதனை தேடிக் கூடாது பானைக்குள் இல்லாமல் அகப்பை வராது உயிரினை உருக்கிட ஏழு துளை போதும் மெய்க்கலை பிறந்திட எண்ணம் அதுபோதும்