← All lyrics

2011

Muththam - RAAVANNAN

Listen / watch →

வா வா முத்தம் தரவா நான்மொத்தமா தான் தரவா வா வா முத்தம் தரவா நான் மொத்தமா தான் தரவா வாவா என்பக்கம் வா நான் சின்னப் பூவான நீயும் தேனை கண்ட சிறுவண்டானா என்னை விடு வானா என்னுள் உறைவானா இருவிழி புணருது இருமனம் கரையுது இருவுடல் உலருது இனியென்ன வருமோ வட்டமடிக்குது கருநிற வண்டு சித்தம் சிலிர்க்குது சின்னப் பூக் கண்டு முத்தம் அளித்திட வா வா நான் முத்துக்குளித்திட வா வா நீ வெட்டி எடுத்த கட்டித் தங்கம் தொட்டு நகர்த்த அங்கம் பொங்கும் கட்டியணைத்திட அன்பே வா - நீ முற்றும் களித்திட முன்பே வா கட்டுடல் மேனிக் காதலி - உன் கார்விழி மின்னுது ஏனடி கொட்டிடா தேனீ நானடி - இன் புற்றிடத் தேனைத் தாவடி இதயம் கவரும் கொள்ளைக்காரி எதையும் புரியும் வெள்ளைக்காரி இரவில் மடியில் மோகக்காரி இரவு விடிந்தால் யோகக்காரி திருவுடல் குளிருதே அடிவரை படருதே மனமெங்கும் மலருதே புதிதல்லவோ உடலெங்கும் மலர்ந்தவள் அடிவரை குளிர்ந்தவள் பிறர்க்கில்லை இவளென்றும் உனக்கல்லவோ உளம் கலந்தோமே நாம் நிதம் மகிழ்ந்திடுவோம் நாம் எமை மறப்போமே பூவை தொலைப்போமே இருவிழி புணருது இருமனம் கரையுது இருவுடல் உலருது இனியென்ன வருமோ முத்தம் மொத்தம் நித்தமாய் - உனில் பித்தம் கொண்டேன் சித்தமாய் இன்பம் கொள்வோம் சத்தமாய் - முழு துன்பம் போகும் மொத்தமாய் இன்நாள் வரையினில் புத்தனாய் - இன்றானேன் உன்தன் பக்தனாய் உயிர்கொண்டாடும் சிற்பமாய் - உன் அங்கம் தர வா சொர்க்கமாய் வெல்லும் வேல்விழி வெண்ணிலா - உன் மெய்யது நெய்தது பொன்னிலா முன்னிலே கனியிற பெண்நிலா - நாம் கூடும் நாளிகை பெருவிழா செம்புலம் சேர்ந்த பெண்ணிலா - கொண்டு ஆடுது நெஞ்சினில் வெண்பலா - கண்டு துள்ளுது என்மனம் பொங்கலா - அடி இனிமுதல் நாளும் திருவிழா