Vizhiyil Vizhunthaal - RAAVANNAN
விழியில் விழுந்தாள்
இதயம் நுழைந்தாள்
தொலைந்தேன்
நான் இங்கே இல்லை
உயிரில் கலந்தாள்
உறவாய் மலர்ந்தாள்
உலகம் அவளின்றி இல்லை
வஞ்சியவள் என்தன்
நெஞ்சடைத்தாள்
விந்தையாய் இது இல்லை
மங்கை அவள் என்தன்
உயிர் நிறைத்தாள்
துன்பமே இனி இல்லை
நெஞ்சமெல்லாம்
நினைவால் நிறைஞ்சிருகிறாள்
பஞ்சமில்லா பிரியம்
வழங்கி நிக்கிறாள்
வண்ணப்பூவைப் போலே
என் செல்லம் இருப்பாள் - என்
நெஞ்சுக்கிள்ளை சின்னப்
பிள்ளை போலச் சிரிப்பாள்
கொஞ்சும் விழியாலே
என் நெஞ்சம் நனைப்பாள்
பொன் அந்திவேளை
தென்றல்போல
என்றும் இருப்பாள்
விண் வழி வந்தவள்
என்பேனா - அவள்
விந்தையின் முழுமையே சொல்வேனா
எவ்வழி யாரவள் என்றாலும்
அன்பைக் கண்டேன்
நான் கொண்டேன்
நீ பிறர்க்கில்லையே
சின்னப்பிள்ளையாகி
நான் துள்ளிக் குதித்தேன்
உன் உள்ளம் தன்னைத்
தந்ததினை எண்ணிக் களித்தேன்
அந்திப்பகல் எல்லாம்
நான் உன்னை நினைத்தேன்
என் எண்ணம்போல வந்த
உன்னை நெஞ்சில் சுமப்பேன்
கண்மணி வரம் தர வந்தாயா
இல்லை கண்ணெதிர்
வரமென நின்றாயா
அன்பே நீ ஏதின்றி
வந்தாலும் - மின்னும்
பொன்னே என் கண்ணே
நீ எனக்கல்லவோ