Kaatrunnai - RAAVANNAN
காற்றுன்னைத் தேடி வந்து
என் காதல் சொன்னதோ - தினம்
பார்த்துன்னை நாடி வந்து
உன் காதில் சொன்னதோ
என் காதல் சொன்னதோ அது
உன் காதில் சொன்னதோ
என் தாகம் சொன்னதோ அது
என் நாளும் சொன்னதோ
காற்றென்னைத் தேடி வந்து
உன் காதல் சொல்வதோ - அடி
உயிருக்கும் மெய்க்கும் என்று
யாரும் தூது செல்வதோ
உன் காதல் சொல்வதா
எங்கும் யாரும் தூது செல்வதோ
உயிரும் தனிமை கொள்வதா
அடி மெய்யும் தனியே ஆழ்வதோ
வந்ததோ வந்ததோ காற்றது
சொன்னதோ சொன்னதோ
தனிமையும் கொள்வதோ
மெய்யது தனிமையாய் ஆழ்வதோ
இன்னாளில் மலர்ந்தது முல்லை
இன்றோடு தொலைந்தது தொல்லை
துன்பங்கள் இனிமுதல் இல்லை
இன்பம் எல்லை
மெய்யென்று வந்தவன் நீயே
பொய் இன்றி நின்றவன் நீயே
தோளாக வந்தவன் நீயே
எல்லாம் நீயே
வானோடும் மண்ணோடும்
வாழ்கின்ற யாவோடும்
காதலைக் கொண்டாடுவோம்
மண் தாண்டி விண்தாண்டி
வாழ்கின்ற யாவிற்கும்
காதலைக்கொண்டோடுவோம்
உயிராகவா மெய்சேரவா
உயிரோடு மெய்சேர்ந்து மெய்மறப் போமே