← All lyrics

2011

Thaai Mozhi - RAAVANNAN

Listen / watch →

யாதொன்றும் வேண்டாம் தாய்மொழி போதும் தேன்கூட வேண்டாம் தீந்தமிழ் போதும் உயிர்ஆகி உணர்வாகி தமிழ்கென இருப்போம் அழகாகி அறிவாகி தமிழ்தனை நிறைப்போம் உறவாகி. உரமாகி தமிழ்தனை காப்போம் வாழும் நிரந்தரம் வாழும் தமிழ்மொழி நாளும் நிறைந்தது வாழ்ந்திடுமே வானம் அறிந்த தனைத்தும் அறிந்-அது நாளும் வளர்மொழி வாழ்ந்திடுமே ஆதி வந்த மொழி, மேன்மை கொண்ட படி ஆழ நின்ற மொழி நமதல்லோ ஆய்தம் தந்த மொழி அமுது என்ற படி உயர நின்ற மொழி தமிழல்லோ புகழ் பாடுவோம் மகிழ்ந்தாடுவோம் தினம் பாடுவோம் நிதம் பாடுவோம் கருவாகி உருவாகி தமிழ் பாடுவோம் இனிது வேண்டுமா புதிது வேண்டுமா அறிவு வேண்டுமா அறிக தமிழ் ஆண்ட தாயிரம் கண்ட தாயிரம் கொண்டதாயிரம் எமது தமிழ் இயலும் இசையும் நாட்டு அகமும் கொண்டு வலம் வரும் பலம் பெறும் தமிழைக் காதல் செய் தமிழாய் யாதும் செய் தமிழுக்காகச் செய் உலவும் தமிழ் உருவம் எலாம் தமிழ் அருவம் எலாம் தமிழ் உலகமெலாம் தமிழ் உலவிட வா தமிழ் வானமெலாம் தமிழ் பூமியெலாம் தமிழ் ஏழ்கடலும் தமிழ் ஏதினிலும் தமிழ் பரவிட வா இன்றும் என்றும் தாய்மையான மொழி பொதுமையான படி நடுவு நின்ற மொழி தமிழல்லோ கலைகள் கொண்ட மொழி கலப்பிலாத படி தனித்து நின்ற மொழி நமதல்லோ இசை பாடுவோம், இசைந்தாடுவோம் தினம் பாடுவோம் நிதம் பாடுவோம் கருவாகி உருவாகி தமிழ் பாடுவோம்