Kankal - RAAVANNAN
கண்கள் மூடினேன்
கடவுள் தேடினேன்
நெஞ்சுள் கடவுளாய்
வளர்கிறாய்
கண்கள் திறந்து
நான் உன்னைத் தேடினேன்
முன்னே குழந்தையாய்
மலர்கிறாய்
நெஞ்சுள் கடவுளாய்
வளர்கிறாய் - நீ
முன்னே குழந்தையாய்
மலர்கிறாய்
கண்கள் திறந்து நான்
கடவுள் தேடினேன்
முன்னே கடவுளாய்
வருகிறாய்
கண்கள் மூடி நான்
கனவை தேடினேன்
உலகே நீயெனத்
தொடர்கிறாய்
நெஞ்சுள் கடவுளாய்
வளர்கிறாய் - நீ
முன்னே குழந்தையாய்
மலர்கிறாய்
நாம் வாழ்வோம்
என்றும் காதலராக
நாளும் இன்பக் காதலராக
வாழ்வோம் என்றும் காதலராக
நாளும் இன்பமாய்
தொடர்ந்திட வா
நான் வாழும் காலமெல்லாம்
அன்பே நீ அருகினில் வேண்டும்
நீ போகும் பாதையெல்லாம்
நான் உன்தன் கூட வேண்டும்
எம் அன்புக் காதல் தன்னை
ஊரெல்லாம் பேசிட வேண்டும்
என் அன்பே கண்ணே உன்மேல்
பூ அள்ளி வீச வேண்டும்
அன்பே போதும் இங்கு
நீயே போதும்
உனதன்பே போதும்
உன்மனம் போதும்
வேறெதும் வேண்ட வில்லை
வரும் இன்ப துன்பம் எல்லாம்
சேர்ந்தே நாம் கடந்திட வேண்டும்
வலுவாய் நம் காதல் கொண்டு
நாம் என்றும் எழ வேண்டும்
இன்னாள்போல்
என்னாள் எல்லாம்
தினமும் நாம்
இருந்திட வேண்டும்
திருநாள்போல்
வரும்நாள் எல்லாம்
மகிழ்வோடு வாழ வேண்டும்
அன்பே என்னை
உன்னில் தந்தேன் என்னை
எனதன்பே உன்னில்
தந்தேன் என்னை
நீயின்றி வாழ்வு இல்லை