← All lyrics

2011

Ellaam Kaasu - RAAVANNAN

Listen / watch →

எல்லாம் இங்க காசுதான் எல்லாம் எங்கும் காசுதான் எல்லாத்துக்கும் காசுதான் எல்லாம் காசுதான் புதுசா வாறதுக்கும் பழசாப் போறத்துக்கும் நடுவில் வாழ்றதுக்கும் குடுக்க வேணும் காசு இருந்தா பேர் இருக்கும் போனா பேர் படுக்கும் கனக்க செய்து நிக்கும் அதுக்குப் பேர்தான் காசு ஊரே தேடி நிக்கும் உறவாய்க் கூடி நிக்கும் பிணமும் வாய் திறக்கும் பணமெண்டுலகம் நிக்கும் சிரிக்கும் (வி)யாவாரிக்கும் நடிக்கும் சாமியர்க்கும் உலகில் யாவருக்கும் பணந்தானே பிடிக்கும் வோட்டலூல லூக்குப் போக காசிருக்கோணும் - நீங்க போட்டிலில வோட்டர் வாங்கக் காசிருக்கோணும் காறக் காட்டி சைட்டடிக்க காசிருக்கோணும் - பிறகு சைட் அடிச்ச காதலிக்கு செலவழிக்கோணும் எங்கே நீ போனாலும் காசோட வாழோணும் லூசாநீ போனாலும் காசோட போகோணும் அன்பாய் நீயும் இரு அறிவாய் நீயும் இரு பண்பாய் நீயும் இரு பணத்தோடயும் இரு பணத்தத் தேடி இரு பணத்த நாடி இரு பணத்தச் சேர்த்து இரு பணமெண்டலயாதிரு காசினால நிம்மதிய வாங்க ஏலாதே - ஆனாலும் காசில்லாம நிம்மதியாத் தூங்க ஏலாதே கண்ணில்லாம ஓவியத்தைக் தீட்ட ஏலாதே - இங்க காசில்லாம சீவியத்த ஓட்ட எலாதே எங்கே நீ போனாலும் காசோட வாழோணும் லூசாநீ போனாலும் காசோட போகோணும்