Kadavul - RAAVANNAN
குர் குர்-குர்-குர்
குர்க்கா குர்க்கா
கா கா-கா-கா
காவல்க்காரன்
பா... பா.. பா.. பா..
பாரப்பா - அட
மாறும் உலகம் பாரப்பா
கு... கு.. கு.. கு..
ஓர் குர்க்கா
அட கடவுள் இங்கே
வெறும் குர்க்கா
செ... செ.. செ.. செ..
செல்லப்பா - டேய்
சாமி யாவாரியா
சொல்லப்பா
வா... வா..வா..வா..
வரதப்பா - நீ
வந்து உக்காந்து
உணரப்பா
காக்கும் கடவுளே
போற்றி போற்றி
ஐசு வைக்கிறார்
தீபம் காட்டி
விரதம் பிடிக்கிறார்
நேந்து நேத்தி - ஐயோ
நல்ல தெய்வமெது
போட்டியோ போட்டி
நினைக்கிற தெல்லாம்
நடக்காது - அது
நடந்தா வாழ்க்கை
இனிக்காது
கேட்டது எல்லாம்
கிடைக்காது - உன்
கடவுள் முழுவதும்
கொடுக்காது
பணத்தை தெய்வம்
மதிக்காதே - உன்
பகட்டும் அதுக்குப்
பிடிக்காதே - அத
தனித்த காவலாய்
நினைக்காத - ஒரு
நொடிக்கும் வாடைக்குப்
பிடிக்காத
ஜனத்தின் ஆசை
வானம் உயர்ந்தது
மதத்தின் பின்னால்
மதம் வளர்ந்தது
பணத்தின் முன்னால்
தெய்வம் மலிந்தது
பிணத்தின் மீதும்
கோலம் பிறந்தது
தெய்வம் யாரென
நீ அறிவாயோ
எங்குதான் உண்டு
என்ற றிவாயோ
என்னதான் வரும்
நாம் அறியோமே
ஒன்றுதான் இங்கே
நாம் அறிவோம் - அவன்
குர் குர்-குர்-குர் ...
இரவுபகலென்றும்
அழியாது - இந்த
வானும் மண்ணும் ஒளியாது
வாழ்வுசாவென்றும்
பிரியாது - என்றும்
இன்பம் துன்பம் மறையாது
பிறப்பும் இறப்பும்
உண்டானால் - இங்கு
களிப்பும் சலிப்பும் நின்றாடும்
எதைத்தான் கொடுத்து
நேந்தாலும் - உன்தன்
தலை எழுத்தா தள்ளாடும்
கண்கள் கொண்டு
உலகைப் பார் - பல
கடவுள் பெயரால் கள்ளரடா
கண்கள் மூடி
உள்ளே பார் - உனில்
ஒளியாய்த் தெரியும் கடவுளடா
அன்பால் பார் நீ எல்லாம் கடவுள்
அன்பாய் இரு நீ நீயும் கடவுள்
துன்பம் தாங்கும் இந்தக் கடவுள்
அமைதி வழங்கும்
அன்புக் கடவுள்