Kozhai - RAAVANNAN
பெண்கள் பெயர் கொல்ல
கதைகள் வளர்த்தாய்
பெண்ணின் உணர்வுகளை
ஏறி மிதித்தாய்
பெண்ணை வெல்ல பல
பொய்கள் உரைத்தாய்
- கோழை
அன்புத் தாயவளும்
பெண்ணே மறந்தாய்
அக்கா தங்கை அவை
யாவும் மறந்தாய்
பெண்ணை வெல்லுவது
வீரம் அளந்தாய்
- கோழை
நினைப்பில நீயொரு
ஆம்பிள சிங்கம்
நிஜத்தில உனக்குள்ள
முழுதும் அசிங்கம்
வாழ்வின் பெறுமதி
உனக்குத் தெரியாது
வாழ்வு பெருநதி
உனக்குப் புரியாது
நிழலதை நிஜமெனக்
கதைகள் அளந்தாய்
கழிசறைப் பெண்ணெனப்
பொய்கள் புனைந்தாய்
நாளுக்கு நாளென
துன்பம் கொடுத்தாய் - நீ
சாகிற வரைக்கவர்
இன்பம் அழித்தாய்
பெண்கள் தெய்வமடா
உனக்குத் தெரியாது
அணைக்கும் அழிக்குமடா
உனக்குப் புரியாது
ஆம்பிளை நானேன
நெஞ்ச நிமித்தாதே
பொம்பிளப் பாவத்தை
வாழ்வில் சுமக்காதே
பூமி உருண்டை போல
வாழ்க்கை வட்டம்
நீ எங்கு ஓடினாலும்
வந்து முட்டும்
இளைய வயதினில
அடித்த கொட்டம் - உனை
ஐம்பதிலும் வந்து
தேடி வெட்டும்
பொய்யும் வதந்தியும்
உன் மகளைப் பிடிக்க
அவள் வாடி அழ
உனது இதயம் வலிக்க - நீ
அன்று செய்த பாவம்
வந்து சிரிக்க
வேண்டாம் திருந்திவிடு
வாழ்க்கை வெளிக்க
பெண்ணின் உலகமதை
உணரப்பழகு
பெண்ணின் உணர்வுகளை
மதிக்கப்பழகு
பெண்ணைப் பெண்iணாக
நடத்தப்பழகு - நீ
மொத்த மனிசனா
வாழப்பழகு