Puthu Yuham - RAAVANNAN
தாழ்ந்து நடவோம்
தோற்பில் கலங்கோம்
ஆண்மை தவறோம்
அச்சம் தவிர்ப்போம்
மடமை வளக்கோம்
பொய்மை இகழ்வோம்
நெஞ்சம் சிதையோம் - நாம்
மாயைக் கொளியோம்
புதுமனம் பிறக்கோணும்
எதினின் கட்டற்று
புதுயுகம் படைக்கோணும்
தனித்த பற்றற்று
எழு தமிழா - விழி
திற தமிழா - உனை
மயக்கும் மடமையது
முழுதாய் மழுக்கி விடும்
உன்னை உயர்த்திடு
மண்ணை மதித்திடு - நாளும்
நலிந்திடும் மனிதத்தை
வளர்த்திடு - கடமையறி
உன்தன் தொழிலை அறி
உன் உளத்துக்;கு உரமிடும்
வகையை அறி - கெய்
இயற்கை தந்த இந்த
கொடையினை மறந்திடேன்
உலகுக்காய் இயங்குவேன்
பகைகட்கும் கலங்கிடேன்
அவன் தீ, பரிதி
இளம் தலைமுறைக் குருதி
நம்பு நீ. உனை உணரு நீ
தினம் பிற இனி
தொடர் அடி விழும்
இடிவிழும் தொடரு நீ
உண்மை, தடைகள்
கடந்து வெல்ல மோது நீ
பெரும் அலைகள் வரும்
அதில் மிதந்து போ
அதில் அமிழ்ந்து போ
அதைக் கடந்து போ
அதை அளந்து நீ நடந்திடு
உனக்கும் எனக்கும்
இங்கு வலிகள் பழக்கம்
தமிழ் உணர்விளக்கேல்
அவர் துயர் விலக்கே
இன்றே எழுந்து நீ வா
என்றும் தொடர்ந்தும்
நிறைந்தும் வா
இளைஞனே எழுந்து வா
களங்கள் காணலாம்
புதுயுகம் படைக்கவே
எழும்பு போகலாம்.
தடைவரும் பகை வரும்
விழுந்து போகலாம்
விழுந்தபின் எழும்பு நீ
தொடர்ந்து ஓடலாம்
துணிவாய் வா எந்தப்
புதிருமே பெரிதில்லை
தமிழா வா இங்கு
பொறுப்பதில் பயனில்லை
கடுகின் காரம் நீ
எழுந்து காட்ட வா
மடமை யாவையும்
அடித்து ஓட்டவா
உலகை வெல்லலாம்
நண்பா வாடா
அமைதி கொள்ளலாம்
இன்றே வாடா
பொய்யை வெல்ல நீ
மெய் கொண்டு வாடா
தொல்லை நீங்குமடா
துயரம் தீருமடா
அறியத் தெரிய இங்கு
யாதொன்றும் தடையில்
அறிய வேண்டுமெனில்
வானமே தான் எல்லை
அடங்கி ஒடுங்கி இங்கு
வாழ்வதில் பயனில்லை
அறிவை அடகு வைத்து
வாழ்வது வாழ்வில்லை
எழுந்து விடு நீ
துணிந்து விடு
இந்த உலகத்தின்
மொழியை நீ அறிந்து விடு
வாளை எடு அறிவால்
நீ எழு - கள்ளப்
பொய்யர்கள்
வரும் வழி ஒடவிடு