Enna Maranthu - RAAVANNAN
என்னை மறந்து நான்
தண்ணி அடிக்கல
ஆட மறந்து நான்
எங்கும் பறக்கல
நிண்ட இடத்தில
இன்னும் இருக்கிறன்
சரியா
ஆட்ட மேடை அங்கு
காத்துக் கிடக்குது
வந்த சனம் இங்கு
பாத்து இருக்குது
கோட்ட சூட்ட நானும்
களட்டிப்போட்டு வரயா
எங்கள் கள்ளமட்டை
சிங்கக்குட்டி இங்கு வந்திருக்கிறார்
வெள்ள பியெம்முக்கு
நிண்டு விழுந்தவ சைட் அடிக்கிறா
தங்க நகையெல்லாம்
போட்டுக் காட்ட
வந்த அக்கா நிக்கிறா
அறாவட்டிக்கடை ஆறுமுகம்
அண்ணை ஆடி களிக்கிறார்
முகம் முழுவதும் பெயின்ட்
அடிச்சவ வையின் அடிக்கிறா
கள்ள பியர் போடும் கந்தசாமி
அண்ணை தண்ணி குடிக்கிறார்
கேட்டுச் சீதனத்தில் வான
வாங்கி வந்த மாறன் சிரிக்கிறார்
பத்து பவுண் புகழ் பண
வைத்தியர் படமெடுக்கிறார்
கசமுசாவுக்கே காதல்
வளர்க்கிற தம்பி நடிக்கிறார்
கள்ளச்சாமியால வண்டி
ஊதி வந்த அக்கா தவிக்கிறா
சுட்டகாச தன்ர கட்டில்ல
மறைச்ச அண்ண பாக்கிறார்
ஊர வளக்கெண்டு வாங்கி
வளர்ந்திட்ட அண்ண முறைக்கிறார்
உன்ர விசாவினை ஊருக்கு
விக்கிற லோயர் ஆடுறார்
சீட்டுப்பிடிச்சிட்டு மூட்டையக்
கட்டுற சோமர் பாடுறார்
ஆளை மதம் மாத்த அலுப்புக்
குடுக்கும் அன்பர் நிக்கிறார்
மணம், வியாபாரம், பலன்
பார்த்துச் சுத்தும் சாத்திரி சிரிக்கிறார்