Machaana Paaradi
மச்சானப் பாரடி
மல்டிரலண்ட் மானடி
நிக்காம போகாத
வெக்கம் ஏனடி
தக்காளி நீயடி
தந்தனதோம் போடடி
முக்காலி நான் தாறன்
முத்தம் தாவண்டி
வார்த்தை மொழி
இன்றி வருமா
காதல் மனம்
இன்றி வருமா
ஊடல் களி கொண்டு
வரும் வாம்மா வாம்மா
பெண்ணே பள்ளி
கொள்ள வரவா
கண்ணே என்னை
மெல்லத் தரவா
அன்பே அள்ளி அணைத்திட
வாம்மா வாம்மா
என்னவளே பொன்மலரே
பொன்மனமே வெக்கம் விலக்கிடு
கார்விழியே காவிரியே
காதல் நீ வரம்
கண்மணியே பொன்மணியே
மின்மினியே கட்டியணைத்திடு
சேர்ந்திருப்பேன் பார்த்திருப்பேன்
காத்திருப்பேன் நிதம்
நான் அழைச்சா நீ ஓடிவா
நான் ஒளிச்சா நீ தேடிவா
நீ துளி தேன்
உனைக் காதலித்தேன்
என்னைக் காதலியேன்
இல்லை நான் தவிப்பேன்
தேவதையே என்னைப்
பார் ரதியே
எந்தன் பூவிழியே
என்னைக் காதலியே
வார்த்தை மொழி இன்றி வருமா...
நீ படிச்சா நான் ஆடவா
நீ அடிச்சா நான் ஓடவா
ஊர்வசியே என்னில் நீ வசியே
என்னை நீ ரசியே
என்றும் நீ ருசியே
நான் தொலைந்தேன்
உன்னில்த்தான் தொலைந்தேன்
சரண் நான் அடைந்தேன்
உன்தன் கால் விழுந்தேன்