Poi
சாகாது எம் காதல்
சொன்னாளே சோனா
சொல்லிட்டு கொன்றிட்டேன் போனா
தாழாதே என் ஜீவன்
நீ நீங்கிப்போனா
பொய்யாகிப்
போனாயே வீணா
காதல் கொண்டாடி
வந்தவள் போனாள்
காலை மாலையென
நின்றவள் போனாள்
செல்லம் செல்லமென
சொன்னவள் எங்கோ போனாளே
வெறுக்கும் சலிக்கும்
உன் இருதயம் வலிக்கும்
தவிக்கும் வெடிக்கும்
ஏதும் செய்யத் துடிக்கும்
அரட்டும் வெருட்டும்
இவ்வுலகமே இருட்டும்
உனக்குள் அனைத்துமினி
முடிந்ததாய் இருக்கும்
காதல் தோல்வி எப்போதுமே
வாழ்வின் தோல்வி இல்லை
தோல்வி தரும் அனுபவங்கள்
வேறெதிலும் இல்லை
கொஞ்சம் தாங்கி நின்று ஒடு
போய்விடும் உன் தொல்லை
ஐந்து பெரும் சமுத்திரத்தில்
வேறு மீனா இல்லை
காதலித்தாள் உடைத்துவிட்டாள்
தோல்வியில்லை துவளாதே
காலம் உண்டு வாழ்க்கை உண்டு
எப்பொதும் நீ மறவாதே
முயற்சியோடு நடைபோடு
காலம் வருமே உன்னோடு
வாழ்வை வெல்லு துணிவோடு
வெற்றி காணு மகிழ்வோடு
இயற்கை என்னும் விந்தை
வெளியை கண்ணைத்
திறந்து பார்
நீ வாழும் உலகம் மெத்தபெரிது
நின்று நிமிர்ந்து பார்
போனதை விட்டிடு போகட்டும்
வருநாள் உனதாய் இருக்கட்டும்
உன்தன் வாழ்க்கை
உன்தன் கையில்
எல்லாம் உன்தன் நம்பிக்கையில்
காதல் சொன்னாளே
சொன்னதும் பொய்
கனவு தந்தாளே
தந்ததும் பொய்
அன்பு என்றாளே
அவளவும் பொய்
யாவும் சொன்னாளே
சொன்னவளே பொய்
சாகாது எம் காதல்
சொன்னாளே சோனா...
புன்னகைத்தாள் கைபிடித்தாள்
காலம் மாறிப்போயாச்சு
காதலித்தாள் வாக்களித்தாள்
காற்றோடேல்லாம் கலந்தாச்சு
மறந்துவிட்டாள் பறந்துவிட்டாள்
அவளின் வாழ்க்கை புதிதாச்சு
காத்திருப்பேன் பார்த்திருப்பேன்
என்பதெல்லாம் வீண் பேச்சு
தொலைந்த உன்காதலியை
அழிக்க மனம் துடிக்கும்
அழிப்பதா அணைப்போமே
திரும்ப மனம் நினைக்கும்
இருதயம் தவிக்கும்
சேரவே துடிக்கும்
காற் பணிந்தே அழைக்கும்
காதலுக்காய் இரக்கும்
யாவும் போதும் மறந்திடு
காதலையும் துறந்திடு
நடந்தவற்றைக் கடந்திடு
உன் வாழ்வை நீயும் தொடர்ந்திடு
காதல்போயின் சாதல் சொல்லி
எந்தப்பயனுமே இல்லை
மீண்டெழுந்து வாழ்ந்திடு
உன் வாழ்க்கை முடியவுமில்லை
அழைக்கும் உலகைப் பார்
நெஞ்சினை நிமிர்த்திப் பார்
உனக்காய் வாழப்பார்
உலகை ஆளப் பார்
தீதும் நன்றும் பிறர் தர வரா
நோததும் தணிதலும்
அவற்றோ ரன்ன
உன்தன் வாழ்க்கை
உன்தன் கையில்
எல்லாம் உன்தன் நம்பிக்கையில்