Sinthai Theli
சிந்தை தெளி
சிறுமையை அழி
உன் சித்தம் செதுக்க
நீதான் உளி
அண்ட வெளி ஆயிரம் வழி
எக்கண்டம் கடக்க நீயே ஒளி
எண்ணித் துணி எழுவதே பணி
உன் சுற்றம் செழிக்க நீதான் இனி
வெற்றிக்கனி கொள்வதே தனி
நீ திட்டம் வகுத்து சேர்வாய் அணி
உன்னை ஒருத்தன்
பொய்ப்பிப்பதா
உன் தலைக்குள் புகுந்துனை
நடப்பிப்பதா
உண்மை உணர்ந்து
புறப்பட்டு வா
உனை முற்றாய்
முழுதாய் புடமிட்டு வா
வைச்சா குடும்பி
சிரைச்சா மொட்டை
நிண்டு நிதானிப்பத
ஏன்தான் நீ விட்ட
உணர்ச்சிப்பேச்சு
வார்த்தைவாள் வீச்சு
உருவேறி எல்லாம்
உருக்குலைஞ்சு போச்சு
போதை தாலைக்கேறி
போக்கு மாறியாச்சு
மாய வார்த்தைக்கெல்லாம்
யாவும் பலியாச்சு
பாதை தெளிவில்லை
பார்வை சரியில்ல
நின்று சுத்திப் பாக்க
நேரம்கூட இல்ல
பொறிமுறையோட
அவன் பொறி வைக்கிறான்
நீ எலி போல ஓடிப்போயே
தலை வைக்கிறாய்
உன் நிலத்து நீருறிஞ்சி
கோலா விக்கிறான்
அட அதை வாங்கி ஏமாந்து
நீ கூலா நிக்கிறாய்
வெள்ளையரின் ஆட்சியென
சொல்லிப்பயனில்லை
இலாப வெறிக்கூட்டத்துக்கு
தோல் நிறங்கள் இல்லை
கிடைச்சத வைச்சு அவர்
அடிப்பாரே கொள்ளை
உன்தன் இனத்தவர் ஆயிடினும்
விதிவிலக்கில்லை
கண்டம் விட்டு கண்டம்
பெரும் கம்பனிகள் பாயும் அது
கண்ட இடமெல்லாம்
பெரு இலாப வேட்டை ஆடும்
எவ்விடமும் கொள்ளை
வளருது தொல்லை
விழிப்பாய் நீ மெல்ல
நேரமதிகமில்லை
சிந்தை தெளி...
விளைநிலம் போச்சு
விவசாயம் போச்சு
சொந்தக்காலில் நிண்டவனை
முடமாக்கியாச்சு
சிறுதொழில் போச்சு
சுய தொழில் போச்சு
சொந்தக்கட வைச்சவன
கூலிக்கமத்தியாச்சு
அங்குமிங்கும் கட்டடங்கள்
வந்து குவியுது
புத்தம் புது பெருந்தெருக்கள்
நீண்டு விரியுது
இவை மட்டும் சமூகத்தின்
வளர்ச்சிகள் இல்லை
தின்ன வழியற்றவனை
பார்க்க யாரும் இல்லை
அடிப்படை பிரச்சனை
ஆயிரம் இருக்குது
அணுகாமல் அப்படியே
மறைச்சுக் கிடக்குது
கண்ணுக்குக் குளிர்ச்சியெல்லாம்
வெறும் சுத்துமாத்து
துருவித் தோண்டிப் பாத்தா
மாட்டுமே கூத்து
மாயை உலகத்தை நீ
நம்பி வாழுறாய்
நடிக்கிறவனப் போய்
தலைவனாக்கிறாய்
உணர்சிபொங்கி
ஒரு வெறி நாயாகி நீ
அவனின் வளர்ச்சிக்காய்
அழிந்து போகிறாய்
இந்த தலைமை
இனித் தேவையில்லை
தூக்கியெறிந்து விடு
தொலையும் தொல்லை
தோழனாகி நீ
தோள் கொடுத் தோடு
உரிமைக்காக நீ
சேர்ந்து களமாடு