Pahai
எம்மை சரிக்க நினைக்கும்
உன்தன் கதை முடிக்கும்
வரைக்கும் துளியும் இல்லை
எங்கள் கண்ணில் உறக்கம்
நெருங்கி நெருங்கி வந்து
செத்துப் போ
பதுங்கி பதுங்கி வந்து
பட்டுப் போ
அடிக்கும் அடியினிலே
உன்தன் கதி கலங்கும்
தப்பிப்போ தப்பிப்போ என்று
உள்ளே மனம் புலம்பும்
சுருட்டி எடுத்துக் கொண்டு
இன்றே விட்டுப்போ - இல்லை
சுருண்டு விழுந்தபடி
நாளை செத்துப்போ
எல்லை நீ கடக்கிறாய்
நிறுத்தணும் இன்று
பகைதனை வளர்க்கிறாய்
முறிப்போமே நின்று
அமைதியை காப்பது
பயத்தினால் அன்று
நாம் அடக்க நினைக்கையில்
புரியுமே அன்று
இடியென படையெழ
உனக்குள்ள எரியும்
எளிதென கதையற
உனக்கது புரியும்
அழகென அகன்றிடு
நிம்மதியும் தெரியும்
தொடர்ந்து நீ நிமிர்ந்திட
உன்தன் உயிர் பிரியும்
உனக்கேன் உனக்கேன்
பகையும் உனக்கேன்
தலைக்கேன் தலைக்கேன்
கனமும் தலைக்கேன்
விளக்கேன் விளக்கேன்
அதை நீ விளக்கேன்
உனக்கேன் உனக்கேன்
பகையும் உனக்கேன்
எங்கே வந்து பார்
எம்மில் முட்டிமோதிப் பார்
எங்கே வந்து பார்
எம்மில் முட்டிமோதிப் பார்
உனக்கேன் உனக்கேன் ...
தொலைக் துடைக்க
இல்லை நாம் புழுதி
பொறுக்கப் பொறுக்க
கொதிக்கும் குருதி
துடிக்கத் துடிக்க
முறிப்போம் பிளிறி
அழித்துத் தொலைக்க
எடுத்தோம் உறுதி
வெட்டக் குணம்
கொண்டோம் எட்ட நீ போ
கொட்டத் திடம்
கொண்டால் செத்து நீ போ
முட்டும் மனம் கொண்டோம்
விட்டு நீ போ - என்றும்
வெற்றிப் படை என்றே
வீழ்த்தி நிற்போம்
சத்தியம் செத்திட
சாத்தியம் இல்லை
அசத்தியம் நித்தியம்
வெல்வதுமில்லை
நீ வைத்த பொறியதில்
உன் காலே பொறியும்
நாம் போட்ட பொறியது
தீயாகி எரியும்
சட்டச் சட்ட சடவென
தட்டிப்போவோம்
பட்டப் பட்ட படவென
முட்டிப்போவோம்
எட்டுத் திக்கும் திக்கென
வைத்துப்போவோம் - உன்னை
எட்டாய் பத்தாய் நூறாய்
பிய்த்துப்போவோம்