← All lyrics

2020

Puthu Ulaholungu

Listen / watch →

இன்று வரை இருந்தது இனியுமில்ல தொடர்ந்தெது வருமென்றும் தெளிவுமில்லை கண்ணில் படா கூட்டம் உன்தன் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டும் உன்னை என்னை யாவரையும் திட்டம் போட்டுக் பெயர்க்கும் பொய்யா மெய்யா தெரியாது வட்ஸ்ஸப் வந்தா வரலாறு மூளைச் சலவை செய்யாது உன்னை விட்டு அகலாது அதிகார வர்க்கத்தின் இலாப வெறி நோக்கம் உன்னைத் தொடர்ந் (அ)தடிமையாய் நோக்கும் எந்தவொரு வழியிலும் தனித்துப் பிரிக்கிறார் உன்னுடைய உழைப்பினை உறிஞ்சிப்பெருக்கிறார் சிந்தையினை சிதைத்துன்னை சில்லறை ஆக்குவார் மந்தையென அடைத்துன்னை மாட்டைப்போல் கறப்பார் எந்தப்பக்கம் உன்தன் பக்கம் என்பதை நீ அறிந்திடு உன்னைக் காக்கும் என்னைக்காக்கும் அந்த பக்கம் இருந்திடு உழைக்கும் வர்க்கம் என்றும் உன்தன் பக்கம் அடக்கும் வர்க்கம் தனை எதிர்த்து நிக்கும் மக்களை மாக்களா மாத்தப் பாக்கும் ஆக்களுக்கடிமையா வேலை பாக்கும் எல்லா அரசுக்கு எதிராக கேள்வி கேக்கும் மனங்களை பிரித்தது ஆளப்பாக்கும் இது புது உலகொழுங்கு புது உல-கொழுங்கு இத நீ விளங்கு அதிகார வர்க்கம் உன்தன் கழுத்தை நெரிக்கும் அரசுகள் அதனோடு இணங்கி நடக்கும் சாதி மத பேதமென்ற ஆயுதத்தால் தாக்கும் மானிடத்தின் வேரறுக்க ஆயிரத்த தூக்கும் பிரித்து நோக்கும் அடித்து போக்கும் ஊர்முழுக்க ஆள் புடிச்சு உன்னை மடை மாத்தும் பொய்யதனை மெய்யென்றாக்கி மேன்மையென காட்டும் கண்ணில் பட்ட எதிரிக்கு வீரம் காட்டும் தம்பி உன் கண்ணில் படா எதிரியை யார் அடிப்பார் தம்பி கிணத்து தவளையாய் சுத்திவரும் விலங்கானாய் அலைஞ்சு திரியுது அதிகாரம் முதலையாய் அடிச்சு தகர்க்கணும் முதலையை முழுவதாய் உண்மையை உணர்ந்திடு கிளர்ந்து எழுந்திடு இணைந்து நடந்திடு இடர் வரும் தொடர்ந்திடு அதிகாரர் அடக்குவார் அடிமையாய் நடத்துவார் மாற்றாய் நீ இருந்துடு மாற்றமாய் மாறிடு