← All lyrics

2020

Periyar Reloaded

Listen / watch →

உனக்காய் நீ வாழ உனையே நீயாள தனையே தந்தார் ஐயா நரைத்து நின்றாலும் இளைத்து நின்றாலும் களத்தில் நின்றார் ஐயா தோளோடு தோளாக நின்றார் ஐயா சுய மரியாதை கொண்டாளச் செய்தார் ஐயா நீ சுட்டெறிக்கும் சூரியனாய் புத்துயிர்க்க வேணும் உனைக் கட்ட எண்ணும் சக்திகட்கு சவுக்கெடுக்க வேணும் நீ பெரியாரின் பிள்ளை என்றும் உடைஞ்சுபோவதில்லை சாதகத்துத் தொல்லை அது பகுத்தறிவுக் கில்லை சாதிமத பேதங்களை அறிவுகொண்டு வெட்டு ஒரு மனிதனாக வாழ்வதுதான் நன்று முரசு கொட்டு தொடர்ந்துனை இடர் தொடர்ந்திடும் நீ தொடர்ந்திடு பகையை வெல்ல தடையென படை பல வரும் நீ கடந்திடு வர்ணம் கொல்ல மனு தர்மம் தேவையில்ல மானிட தர்மம் வெல்ல கயவரை துணிந்தெதிர்த்திடு எவரும் பெரிய பருப்பு இல்ல பொம்பிளைக்கு மரியாதை நீ கொடுக்க மறவாத பிள்ளை பெறும் யந்திரமா பொம்பிளயப் பாக்காத தெம்பு பலன் பெண்ணை வெல்வேன் எண்ணுவதே பெரு மடமை வலிமை என்று பாக்கப்போனா எருமைக்கும் நீ அடிமை ஆண்மை வெறி அடக்கும் வெறி அத்தனையும் விட்டு எறி உன்னையறி பெண்ணையறி எதையும் நீ பகுத்து அறி உனக்காய் நீ வாழ, உனையே நீயாள... சாதகத்தை நம்பி மாளும் மடமை வேணாம் அம்மா நம்மை சாதி என்று விலக்கி ஒடுக்கி முடக்கி வைத்தார் அம்மா கற்புநெறி, சமயலறி பித்தலாட்டம் அம்மா என்றும் ஆணும் பெண்ணும் நிகரே என்று நீ உணரணும் அம்மா சாதியத்தை சாதகத்தை அழித்தொழிக்கவேணும் உன் பிள்ளைக்கு நீ பகுத்தறிவுப் பால் கொடுக்கவேணும் என்னடா கதை ராமாயணக் கதையிண்ணா நம்மள அவன் கொன்னா.. அத ஒரு கதையா எழுதினா நம்ம செலவில அவமானப்படுத்தினா இழுவுபடுத்தினா கொன்னா... அத அரசாங்கத்திலயே வருசம் தோறும் நெருப்பு வைச்சு கொழுத்திறாங்க ராவண்ணன் எவங்கேக்கிறான்? தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக் குகையில் சிறுத்தை எழும் உனக் கெனக்கென தொடர்ந்து நின்றவர் பகுத்தறிவினை பரப்பி வந்தவர் எப்போதும் யாரையும் மதிக்கச்சொன்னவர் ஆரியக் கொட்டத்தை எதிர்த்து நின்றவர் நரைத்து இளைத்து நின்றாலும் களத்தில் நின்றவர் பெரியார் உனை அடக்க முடக்க நினைத்தவரை எதிர்த்து நின்றவர் பெரியார் உனக்குள் இருக்கும் பெரியாரை உசுப்பி நீ விடவேணும் எமை வலுவாய் அரிக்கும் மூடப்பழக்கத்தை உடைந்தெறிந்திட வேணும் எதிர்த்தெழுந்திடவேணும் நீ அறுத்தெறிந்திட வேணும் எமை மழுக்க நினைக்கும் அனைத்தினையும் நீ தகர்த்தெறிந்திடவேணும் உனக்காய் நீ வாழ உனையே நீயாள...