Unthan Vazhkai
நிதம் நிதம் தடையோ
மன கன நடையோ
தினம் புது கதையோ
தொடர் வரும் வதையோ
திக்கெட்டு பக்கம்
நீ தட்ட தட்ட முட்டும்
எக்கஸ்டப்பட்டும்
நீ முட்டிப்போக குட்டும்
பெட்டிக்குள் நில்லாதே
சிறகை கட்டிக்கொள்ளாதே
எட்டாதென தள்ளாதே
நீ விட்டுப்போனால்
வெல்லாதே
நிதம் நிதம் தடை
மன கன நடை
தினம் புது கதை
தொடர் வரும் வதை
பட்பட்பட் பட்பட் சிறகடி
எட்டா படியினை
தொட்டே முறையடி
உச்சத்தில் பட்ட பகலது
வட்டப் பரிதியை எட்டிக் கைபிடி
மொத்தக்கலை
வித்தை அதுபடி
எத்தித்துணி எதுவும் உனதடி
திக்கெட்டதும் வெற்றி முரசடி
சட்சட்சட் சட்சட் சரவெடி
உனக்குள்ள உறங்குது
சூரிய பிம்பம்
பறையடி நீ கேட்கவே டம்டம்
எழுப்பியே புறப்படு
வானமுன் சொந்தம்
அடிக்கடி நடக்கிற
படிகளும் சறுக்கிட
உனக்கென இருந்தவர்
மடையென குறுக்கிட
நகரவே தடையென
எதிரிகள் நெருக்கிட
பறக்கிற மனநிலை
சிறக்கவே இருக்கிற
உனக்குள்ள இருக்கிற
சிறகினை விரித்திடு
விரைந்தது வருகிற
தடையினை உடைத்திடு
நினைத்ததை முடித்திடு
நோ்பட நடந்திடு
உனக்குள்ள கனவினை
உருப்பட வைத்திடு