← All lyrics

2022

Thadai Udai

Listen / watch →

உனக்குள்ளே மூளும் நெருப்பு ஒன்று போதும் எதிர்ப்பவை யாவும் தலைதெறித்தோடும்; தடை கடந்தோடு நிதம் தொடர்ந்தோடு இடர் வரும் போது உடைத் தெறிந்தோடு நெருப்பாகி நீயும் நிமிர் நடைபோடு1 உயிர்பாக நாளும் உன்னை நீ ஆழு தடையென நிதம் பலவுனை நெருக்கிடும் நகர்கிற வழிகளை தினம் அது சுருக்கிடும் சிறகென எழும் உறுதியை முறித்திட அரவமாய் எழுந்தது தொடந்துனை துரத்திடும் தடை உடைபட முட்ட வா உனை முறித்திட முனைபவை வெட்ட வா தடை வருவதும் தளர்ந்து நாம் விழுவதும் உலகினில் புதிதில்ல தனித்து உனக்கில்ல விழித்துப் பார் மெல்ல யார்க்கிங்கு தொல்லை இல்லை நெருங்கும் தடைகளை தொடர்கிற தொல்லைகளை வெட்டித் தொலைத்திடு புது வழி படைத்திடு தடைகள் தொடர்வரும் அதையும் தகர்த்திடு தடை படி ஆகும் நீ அதைப் படி மடு மலை ஆகும் உன் மனப்படி செயம் வந்து சேரும் உன் தோளடி எழுந்தடி, தொடர்ந்தடி விரைந்து நீ வெல்லடி [ feat Rathya ] தடைகள் உடைத்து புது உலகம் படைத்தது விடு விடைகள் கிடைக்கும் இனி விதைகள் விதைத்து விடு தனிமை கொல்ல தளராதே பெண்ணே உலகம் வெல்ல தடை தாண்டு முன்னே விதியின் பெயரில் கொண்ட வலிகள் மறந்து விடு விடியும் உனக்கு ஒரு பொழுது நம்பிவிடு வாழ்க்கை இங்கு எல்லோர்க்கும் ஒன்று வேட்கை கொண்டு வாழ்வோமே இன்று உலகினை ரசித்திட பழகிடு தோழி சிரித்திட விடயமும் ஆயிரம் கோடி பறந்திட வானமும் சிறுத்திடும் நமக்கென்ன சிறகுகள் கைவசம் திரும்பிடும் பிறந்தது வாழ்ந்திட வலிகளும் போதும் பிறவியின் பலனது அடைந்திட வேணும் உணர்ந்திட ஒரு நொடி கழித்திடு மறுகணம் உனக்கினி சொர்க்கமும் தெரிந்திடும் [ feat Rathya ] தடைகள் பறந்து விரைந்து கடந்து வருகிது மனமும் அரண்டு மிரண்டு தொடர்ந்து அழுகிது தடைகள் உடைக்க தனியே துணிவாய் எழுந்துடு மடைகள் கடக்க மனமே பலம் நீ உணர்ந்திடு துணிந்திடு இடர் இடறி சரிந்து விழும் நிமிர்ந்திடு தடை தளர்ந்து தகர்ந்து விடும் அறிந்திட மனம் புரிந்து எழுந்து விடும் எழுந்தது தடைகளை எளிதில் கடந்துவிடும் வாழ்க்கை அது மிருதுவானதில்லை கல் முள் கொண்ட பாதை எளிது இல்லை உணர்ந்தே நீ புரிந்து எழுந்து விடு எதிர் கொண்டிட அணியம் ஆகிவிடு தடைகள் கடந்து விட இடர்கள் இடறி விழ தீயாய் எரிந்து விட வாழ்வை வாழ்ந்து விட மனமே அறிந்து விடு மனமே புரிந்து விடு மனமே உணர்ந்து விடு மனமே எழுந்து விடு