Samiyov
ஏய் சாமி ஏய் சாமி
ஏய் சாமியோவ்
யோவ் சாமி யோவ்
சாமி யோவ் சாமியோவ்
ஐயோ ஐயோ என்ன சாமி
என்ன நானும் பண்ண சாமி
கந்தா கடம்பா கந்தசாமி
யாரை நம்ப சாமி
தெருவில ஆயிரம் கள்ளச்சாமி
கொஞ்சம் தான் நல்ல சாமி
நல்லவன நீ காட்டிச் சாமி
மத்தவன ஒட்டு சாமி
மந்திர யானைத் தும்பிக்கை
ஏன் மூடநம்பிக்கை
அழகாய் இருக்கிற
காவிக்க பல கள்ளர் சீவிக்க
ஆத்திரம் வருது சிந்திக்க
எவன நான் சொறிஞ்சிக்க
சொந்த வழியத் தேடிக்க
மந்த வழியை தொலைச்சுக்க
பூச்சுத்துறர் காதில்
பூச்சுத்துறார் எங்கும்
தாம் வாழ உன்காதில்
பூச்சுத்துறார்
பொய் பேசுறார் அவர்
பொய் பேசுறர் கேட்டால்
தெய்வம் குற்றம் என்றே
மடை மாத்திறார்
ஓசாமி ஓசாமி ஓ ஓ ஓ ஓசாமி
ஓசாமி ஓசாமி ஓ ஓ ஓ ஓசாமி
பொய்யெது மெய்யெது
எப்படித் தெரியும்
நல்லதா கெட்டதா
பட்டதும் புரியும்
பட்டதை சுட்டதை
நான் சொல்ல முடியும்
சொல்வதை சிந்தித்தால்
உனக்குள் விடியும்
கண்ணக்கட்டி காதில்
பூந்தொட்டிய வைப்பார்
உன்னை வைச்சு உழைப்பார்
தன்னப் பீத்திப்பேச
ஊரில் ஆளை வைப்பார்
நல்லவர் போல் நடிப்பார்
ஒரு பக்கம் தூணில துரும்பில
இருப்பது அசைப்பது
அவனே என்றார்
மறு பக்கம் பயமது
வந்தது கடவுள் பிறந்தது
வேறில்லை என்றார்
இருவர்க்கும் இடையில் நடுவில்
புதிதாய் சிலர்
கதையுடன் வந்தார்
தெய்வத்தின்
முகவர் தாமென
பொய்யத மெய்யென
நம்பவே வைத்தார்
கடவுள் பெயர வைச்சுக்கொண்டு
களவெல்லாம் நடக்குது
அத்தனை மதக் கூரைக்குள்ளும்
அங்காங்கே இருக்குது
மூளையைக் களட்டி
வைச்சுப்போட்டா
ஊரில சனம் திரியுது
திரும்பத்திரும்ப
நினைச்சுப் பாக்க..
மனம் உள்ள எரியுது
பணம் இருந்தா நற்கவனிப்பு
பணம் இல்லையா ஆள் மாறப்பு
பதவி இருக்கா
உனக் க(அ)ல்லிப்பூ
பதவி இல்லையா
தின் அலரிப்பூ
கஸ்டப்பட்டு உழைச்சத
கண்டவனிட்ட அழிக்குது
நல்லது கெட்டத கேக்கப்போனா
சனம் என்ன முறைக்குது
கள்ளச்சாமி பையுக்க
நுழைக்கிறான் காணிக்கை
கள்ளங்கள வளக்கிறார்
இதுதானே வேடிக்கை
கடவுள நீயும் பாக்கிறதெண்டா
கண்ணக் கொஞ்சம் மூடிக்க
நடுவில நாலு நந்தி எதுக்கு
கடவுள நீ தரிசிக்க