← All lyrics

2005

Konjam Nil - SINGLES

கொஞ்சம் கொஞ்சம் நில் என் நெஞ்சம் சொல்லும் சொல் மீண்டும் நீயும் செல் வாழ்வை வெல் வெல் வெல் இதுவா வாழ்க்கை நான் வாழ்கின்ற வாழ்க்கை உயிரை உதிர்க்கின்ற வலியான வாழ்க்கை வாழ்வை வெல்வதா வாழ்வென்னை வெல்லுமா விடைதெரியாமல் நான் அலைகின்ற வாழ்க்கை ஈழத்தில் பிறந்தேன் இழுபட்டு வந்தேன் ஆண்டுகள் ஓடின எனைவிட்டு ஓடின வாழ்வில் சுவையில்லை வாழப்பிடிக்கல்லை வாழ்வை முடிக்கவும் எனக்கோ துணிவில்லை இருதயம் அழுதது, கவிதையாய் மலர்ந்தது, கவலையும் குறைந்தது, புதுவழி பிறந்தது, தொடர்புகள் கிடைத்தது தொலைக்காட்சி அழைத்தது, வானோலி அழைத்தது, நிகழ்ச்சிகள் நடந்தது, நினைவிலே நித்தம் நித்தம் இனிதாய் இருக்குது. இருந்தும் பயனில்லை கைகளில் பணமில்லை ஏது செய்வதென்று எனக்குத் தெரியவில்லை வாழ்வினை வெல்வதா வாழ்வென்னை வெல்லுமா கொஞ்சம் கொஞ்சம் நில் . . . ச... ரி... க ம ப கொஞ்சமும் சங்கீதம் தெரியாதப்பா ச... னி... த ப ம பாட்டு எழுத கொஞ்சம் தெரியுமப்பா பாடல் எழுதிடப் பலபேர் கேட்டனர் எழுதிக் கொடுத்திட பட்டம் மட்டும் சூட்டினர் பட்டத்தைவைத்து நான் என்னத்தை செய்வது இசைத்தட்டு வெளியிட எடுத்தேன் நான் முடிவது லண்டனில் ஆயிரம் கலைஞர்கள் இருக்கிறார் தேடிப்போய் நானும் ஒருவரைப் பிடிக்கிறன் பாட்டு எழுதிறன் பாட்டுப் படிக்கிறன் சந்தோஷின் சந்தோஷ சங்கீத மழையில ஆல்பம் முடிக்கிறன் வெளியிடத் துடிக்கிறன் வாரம் இரண்டில் பாட்டொன்றை வெளியிட கதவு திறந்தது நம்பிக்கை பிறக்குது உன் கையில் உன் வாழ்க்கை உண்மையும் துலங்குது