Un Kaathal - SINGLES
பெண்ணே உன் காதல்
தனைச் சொல்வாயா - இல்லை
போடா நீ வேண்டா
மென்று தள்வாயா - நான்
காதலால் வெந்து
வெந்து துடிக்கிறேன் - நீ
இல்லாமல் போவாய்
என்று தவிக்கிறேன் ...ம்
காதல்செய் காதல்
என்று சொன்னார்கள்
வலி தருமே காதல்
என்றா சொன்னார்கள்
சரி காதலே வலியதைத்
தந்தாலும் - அது
உன்னாலே வந்ததினால்
ரசிக்கிறேன் - பெண்ணே
காதல் வரும் ஒருவன்
வாழ்வைக் கிள்ளும் அவன்
உள்ளம் அவள் உள்ளத்தைத்
தேடி வரும் வந்து காதல்
சொல்லும் அவள் காதில்
சொல்லும் பதில்
வரும் வரை அது
லோல்கள் தரும்...ம்
அனுபவத்தில் யாரோ
சொன்னார்கள் - காதல்
வந்ததும் காலடியில்
விழுந்தார்கள் - நான்
காதலைச் சொல்லி
விட்டுத் துடிக்கிறேன் - உன்
பதிலை எதிர்பார்த்துத்
தவிக்கிறேன் ...ம்
காதலை நீ சொல்லவா - என்
அன்பே உயிரே சொல்லவா
நெஞ்சினில் உன் காதலை - நீ
அன்பே என்னிடம் சொல்லவா
இரு கைகள் தட்டா
விட்டால் ஒலிக்காது - நீ
தனியாக வாழ்வதென்றால்
ருசிக்காது - மழை
மண்ணோடு சேர
அது தடுக்காது - மண்
மழை இன்றி வாழ்வ
தென்றால் செழிப்பேது - என்தன்
காதலும் மழைபோல
பொழியுது - உன்
மனமேதோ மண்ணாக
மறுக்குது - அன்பே
மனுதந்த அடியவனை
மிதிக்காதே - என்தன்
இதயத்தை அரிவாள்
கொண்டு அறுக்காதே - இந்த
காதல் இல்லை என்றால்
பூமி இல்லை - இங்கு
வாழும் உயிர்களுக்குள்
ஜீவன் இல்லை - ஆக
காதல் கொண்டே செய்த
உலகம் இது - இதை
உணராமல் உன் வாழ்வில்
உதயம் ஏது
காதலின் அருமை என்ன
புரியாதோ - நீ பூலோகம் சேராத
வெளியாளோ - உயிரே
உன்னோடு காதல் இல்லை
சொல்லிவிடு - பின்னே
உன் லோகம் என்னைக்
கொண்டு சேர்த்துவிடு
உன்னையே எண்ணி
எண்ணிக் துடிக்கிறேன் - நான்
பதிலை எதிர்பார்த்துக்
கிடக்கிறேன் - நீ
காதலை என்னில் வந்து
சொல் கண்ணே - அடி
உன்னோடு வாழ வரம்
தா பெண்ணே - இந்தக்
காதலே வாழ்வுதனை
முழுதாக்கும் - காதல்
சொர்க்கத்தை மண்ணில்
தானே உருவாக்கும் - அன்பே
என் காதல் எப்பொழுதும்
தீராது - அது உயிர் என்னைப்
பிரிந்தாலும் சாகாது - என்
காதல் வாழும் அது
என்றும் வாழும் - இந்த
உலகமே அழிந்தாலும்
காதல் வாழும் - நான்
மடிந்தால் என் காதல்
உன்னிடம் வந்து - உன்
அருகே தனியாக என்றும் வாழும்
என் காதல் சொல்லிச்
சொல்லிப் புரியாதோ - நான்
சாகாமல் என்றுமே
தெரியாதோ - உனக்கு
கல்நெஞ்சக்காரி
என்ற பேர் வேண்டாம் - என்னை
கொன்றவள் இவள்
என்ற பழி வேண்டாம்