Enthan Kanmani - SINGLES
என்தன் கண்மணி
கண் கலங்குது
ஏன் என் காதலி யார்
உன்னை நொந்தது
யார் உன்தன் நெஞ்சினில்
காயம் தந்தது
யார் உன்னை இங்கு தீ
தின்னச் சொல்வது
சீண்டும் உன்னைச்
சீண்டும் இந்த பேர்கள்
தன்னை தனியவெ சந்திப்பேன்
அன்பே அன்பே என்தன்
அன்பே வரும் உந்தன் வாழ்வின்
துயரமதைத் துடைப்பேன்
கண்ணே எழுந்திரு
கண்ணீர் தொலைந்திரு
என்னை நம்பிடு
என்னில் சேர்ந்திரு - என்றும்
அன்பே உனக்காய் வாழுகிறேன்
வாழும் நாள்வரை காத்திடுவேன்
பூலோகத்தைப் பிரிந்தபின்னும்
மேலோகத்தில் சேர்ந்திடுவேன்
என்தன் கண்மணி கண் கலங்குது . . .
இன்றும் இன்றும் என்றும்
இனி உன்தன் வாழ்வில்
தொடர்ந்துனையே வருவேன்
இங்கும் எங்கும் மீண்டும்
மீண்டும் உன்தன் பக்கம்
என்றும் உனக்கெனவே இருப்பேன்
கண்ணே எழுந்திரு கவலை மறந்திரு
என்மேல் சாய்ந்திரு தனிமை
தொலைந்திரு - என்றும்
அன்பே உனக்காய் வாழுகிறேன்
வாழும் நாள்வரை காத்திடுவேன்
பூலோகத்தைப் பிரிந்தபின்னும்
மேலோகத்தில் சேர்ந்திடுவேன்
என்தன் கண்மணி
கண் கலங்குது
ஏன் என் காதலி யார்
உன்னை நொந்தது
யார் உன்தன் நெஞ்சினில்
காயம் தந்தது
யார் உன்னை இங்கு தீ
தின்னச் சொல்வது
என்தன் கண்மணி
கண் கலங்குது . . . . .
வானதி என்னில் அன்பைப்
பொழிந்தவள் - நீ
காதலி என்தன் வாழ்வை
நிறைத்தவள் நீ
தாயவள் எனக்குலகம்
காட்டினாள்
யாவும் எனக்கவள்தானே
ஊட்டினாள்
வாழும் வாழ்வெனக்
கவள்தான் தந்தது
காணும் குணங்களும்
அவளால் வந்தது
அன்புத் தாயை நான்
உன்னில்க் காண்கிறேன்
எண்ணிப் பார்த்து நான்
இன்னும் வியக்கிறேன்
காதலி உன்னைத் தீங்கு
நெருங்காது
நெருங்கும் தீங்குகள்
அடியோடு இருக்காது
வானதி இனி அழவேண்டி
இருக்காது
அழும் காதலியைக்
கண் கண்டால் பொறுக்காது
வானதி நீ என்தன்
தாய்போல வந்தவள்
சேய்போல் நீ என்னைத்
தலாட்டி நின்றவள்
காதலி என்னைத்
தேடி நீ வந்தவள்
உயிரோடு உயிர் சேரும்
தோழமை தந்தவள்
என்றுமே உன்னை நான்
பூப்போலக் காப்பேன்
வாடாமல் என்னாளும்
உன்னோடே இருப்பேன்
அன்பே நீ ஒருபொதும்
கண்கள் கலங்காதே
ஆயுள்வரை நிப்பேன்
கண்ணே மறவாதே